இன்றைய நவீன வாழ்க்கைமுறைக்கு ஏற்ற சூப்பரான பிஸ்னஸ் ஐடியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பகிர்மான தொழில் (Distribution business) தொடங்குவது என்பது மிகவும் லாபகரமான ஒன்று. உற்பத்தி தொழில்களை ஒப்பிடும் போது பகிர்மான தொழில்களின் மூலம் எளிதாகப் பிஸினஸ்மேன் ஆகலாம். நீங்கள் ஆர்வமுள்ள தொழில்முனைவோராக இருந்து சொந்த தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால், கண்டிப்பாக இந்தப் பகிர்மான தொழிலைப் பரிசீலிக்க வேண்டும்.

 

மொத்த வியாபார பகிர்மான தொழிலில் வெற்றி என்பது தொழில்நுணுக்கம், திட்டமிடல், செயல்படுத்துதல், பொருளுக்கான தேவை மற்றும் மூலதனம் ஆகியவற்றைச் சார்ந்தது. குறைந்த முதலீட்டில் துவங்கும் சிறந்த பகிர்மான தொழில்களை இங்கே காணலாம். மேலும் பகிர்மான தொழிலைத் துவங்கும் முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்களையும் காணலாம்.

பகிர்மானத் தொழிலை துவங்கும் முன் கவனிக்கவேண்டியவை

 சரியான பொருளை தேர்ந்தெடுத்தல்

சரியான பொருளை தேர்ந்தெடுத்தல்

நீங்கள் சரியான பொருளுடன் மட்டுமே பகிர்மான தொழிலில் நுழைய வேண்டும். சந்தையில் நிறையப் பொருட்கள் இருக்கின்றன. தேவை அதிகமாக இருக்கின்றன, எப்போதும் தேவை இருக்கின்றன பொருட்களைத் தேர்வுசெய்ய வேண்டும். மேலும் பொருட்களின் தரம் மற்றும் பராமரிப்பு தேவையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது, குறைந்த பராமரிப்புத் தேவைப்படும் தரமான பொருளாக இருக்க வேண்டும்.

டீலரை அடையாளம் காணுதல்

டீலரை அடையாளம் காணுதல்

சரியான பொருளை தேர்வு செய்யவுடன் அதற்கான நல்ல டீலரை கண்டுபிடிக்க வேண்டும். பகிர்மான தொழிலில் டீலர்கள் தான் மிக முக்கியமானவர்கள். நம்பகமான, பரந்த விரிந்த கட்டமைப்பை உடைய, அதிக வாடிக்கையாளர்களைக் கையாளக்கூடிய டீலர்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம். சரியான டீலரை தேர்வுசெய்யப் பின்பு, வினியோக சங்கிலியை கட்டமைக்க வேண்டும். எப்படி மற்றும் எந்த அடிப்படையில் டீலர்களுக்குப் பொருட்களை அனுப்புவது எனவும் முடிவெடுக்க வேண்டும்.

இடவசதி
 

இடவசதி

பகிர்மான தொழில் என்பது மொத்த வியாபாரம் என்பதால், பொருட்களைச் சேமித்து வைக்க அதிக இடம் தேவைப்படும். இடத்தை வாடகைக்கு எடுத்தோ அல்லது சொந்தமாகவோ சேமிப்புகிடங்கு அமைக்கலாம். அந்த இடம் விற்பனை செய்யும் கடைக்கு அருகில் இருந்தால் எளிதாக இருக்கும். மேலும், சேமிப்பு கிடங்கின் பாதுகாப்பும் மிக முக்கியம்.

மூலதன முதலீடு

மூலதன முதலீடு

மூலதனம் இல்லாமல் தொழிலை நடத்துவது என்பது மிகவும் கடினம். எனவே சரியாகக் கணக்கிட்டு தேவையான மூலதனத்தை ஏற்பாடு செய்யலாம். உழைப்பிற்கான முதலீட்டையும் சேர்த்தே கணக்கிட வேண்டும். தொழிலைத் துவங்கிய பின்னர்க் கணக்கு வழக்குகளைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். அதற்கான மென்பொருள் உதவியுடன் அல்லது சுயமாகவே செய்யலாம்.

இவற்றைக் கட்டாயம் தொழில் துவங்கும் முன் கவனத்தில் கொள்ளவேண்டும். 15 சிறந்த பகிர்மான தொழில்களின் பட்டியல் இதோ..

 

 விவசாயக் கருவிகள் மற்றும் உரம்

விவசாயக் கருவிகள் மற்றும் உரம்

விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட நம்நாட்டில், விவசாயக் கருவிகள் மற்றும் பொருட்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே இது ஒரு லாபகரமான தொழிலாக இருக்கும். நிறைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவசாயக் கருவி, உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் விநியோகிஸ்தரர்களைத் தேடி வருகின்றன. இந்தப் பொருட்களுக்கான தேவை அதிகமுள்ள கிராமப்பகுதியில் நீங்கள் இருந்தால், தாராளமாக இத்தொழிலைத் துவங்கலாம்.

 வாகன உதிரிப்பாகங்கள்

வாகன உதிரிப்பாகங்கள்

மிகப்பிரபலமான தொழிலான இதில், வாகன உதிரிப்பாகங்களான பேட்டரி, ஆயில் உள்ளிட்ட பொருட்களுக்கு எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும். இதைப் பயன்படுத்திக்கொண்டு உங்கள் தொழிலை துவங்கலாம். ஆனால் பொருட்களைத் தேர்வு செய்யும் போது கவனமாக இருத்தல் அவசியம். சந்தையில் நிறைய உற்பத்தியாளர்கள் போலியான தரமற்ற பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

கட்டுமானப் பொருட்கள்

கட்டுமானப் பொருட்கள்

பெரிதாக வளர்ந்து வரும் இத்துறையின் எதிர்காலமும் பிரகாசமாக உள்ளது. இது அதிக முதலீடு தேவைப்படும் தொழிலாகும். அதிக முதலீடு மட்டுமில்லாது, இடவசதியும் அதிகம் தேவை. இத்தொழிலில், சிமெண்ட், கம்பிகள், மணல், கற்கள், டைல்ஸ், பெயிண்ட் எனப் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும்.

நிறம் மற்றும் வேதிப்பொருட்கள்

நிறம் மற்றும் வேதிப்பொருட்கள்

பல தொழிற்சாலைகள் பல்வேறு காரணங்களுக்காக இவற்றைப் பயன்படுத்துகின்றன. வேதிப்பொருட்கள், நிறமூட்டிகள், ரப்பர், பிளாஸ்டிக் போன்றவற்றை விநியோகம் செய்யலாம். இவ்வகைப் பொருட்களில் சிலவற்றை உற்பத்தி செய்யப் பல நாடுகள் தடை செய்துள்ளன. எனவே அந்த நாடுகளில் தேவை அதிகமாக இருக்கும். இத்தொழிலைத் துவங்கும் முன் ஆராய்ந்து செயல்படுவது நல்லது.

 அழகுசாதனப் பொருட்கள்

அழகுசாதனப் பொருட்கள்

இந்தியப் பெண்களுக்கு அழகுசாதனப் பொருட்கள் என்றால் அவ்வளவு பிரியம். ஆகவே இவ்வகைப் பொருட்களுக்கு எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும். ஆதலால் அழகுசாதனப் பொருட்களை விநியோகிக்கும் தொழில் வெற்றிக்கு வழிவகுக்கும். இதை உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்கள் இருப்பதால், நல்ல தரமான பிரபலமான பொருட்களைத் தேர்வு செய்வது நல்லது.

பொறியியல் சாதனங்கள்

பொறியியல் சாதனங்கள்

பல்வேறு உற்பத்தி நிறுவனங்களால் பொறியியல் சாதனங்கள் வாங்கப்படுகின்றன. கிரேன், நீர், மண், கட்டுமானம் சார்ந்த இயந்திரங்களுக்குத் தேவை எப்போதும் உண்டு. நீங்கள் இத்தொழிலை துவங்குவதாக இருந்தால் அதிக மூலதன முதலீடு தேவைப்படும்.

அதிகம் விற்கப்படும் நுகர்வோர் பொருட்கள் (Fast moving cosumer goods)

அதிகம் விற்கப்படும் நுகர்வோர் பொருட்கள் (Fast moving cosumer goods)

தின்பண்டங்கள், அன்றாட வீட்டுக்குத் தேவையான பொருட்கள், பானங்கள் இந்த வகையைச் சார்ந்தது. இந்தியாவில் இது மிகவும் லாபகரமான ஒன்று. இதில் எளிதாக விநியோக சங்கிலியை கட்டமைக்கலாம். மேலும் இதற்குத் தேவையான முதலீடும் மிகக்குறைவு. எனினும், நிறையப் போட்டியாளர்களைச் சந்திக்க வேண்டிவரும்.

விலையுயர்ந்த கற்கள் மற்றும் நகைகள்

விலையுயர்ந்த கற்கள் மற்றும் நகைகள்

இந்தியாவின் மற்றுமொரு இலாபகரமான தொழில் இதுவாகும். ஆனால் அதிக முதலீடு தேவைப்படும் என்பதால் போதுமான பணம் இருந்தால் இத்தொழிலைத் துவங்கலாம். அது போக, நல்ல நம்பகமான குழு , இத்தொழிலைத் துவங்க மிக அவசியம். பிரபலமான நிறுவனத்துடன் சேர்ந்து வர்த்தகம் செய்வது மேலும் சிறப்பு.

வீட்டு உபயோகப் பொருட்கள்

வீட்டு உபயோகப் பொருட்கள்

மின்விசிறி, கிரைண்டர், குளிர்சாதனப்பெட்டி, தண்ணீர் சுத்திகரிப்பான் போன்றவற்றிற்கு எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும். இதற்கு நடுத்தரமான முதலீடு இருந்தாலே போதுமானது. சாம்சங், எல்.ஜி, கோத்ரேஜ் போன்ற பிரபல நிறுவனங்களின் விநியோக உரிமையைப் பெற்றுவிட்டால் தொழிலில் விரைவாக வெற்றி அடையலாம்.

மருத்துவச் சாதனங்கள்

மருத்துவச் சாதனங்கள்

மருத்துவத் துறையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தால், மருத்துவச் சாதனங்களை விநியோகிக்கும் தொழிலை துவங்கலாம். இதில் வெற்றி பெற நல்ல மருத்துவ வலையைமைப்பை நிறுவ வேண்டும். ஸ்ட்ரெட்சர்கள், மானிடர், எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ கருவிகள் போன்ற மருத்துவ உபகரணங்களை விநியோகம் செய்யும் தொழிலைத் துவக்கலாம்.

தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்

தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்

டெஸ்க்டாப், லேப்டாப், சர்வர் மற்றும் நெர்வொர்க் சாதனங்களுக்கான தேவைகள் எப்போதும் குறையாது. ஐடி துறையைப் பற்றிய அறிவு உங்களுக்கு இருந்தால் இத்தொழிலைத் துவங்கலாம். நல்ல இலாபகரமான தொழிலான இதில் எளிதில் வெற்றி பெறலாம். டெல், சிஸ்கோ, ஹெச்.பி போன்ற பிரபல நிறுவனப் பொருட்களைத் தேர்வுசெய்வது அவசியம்.

மருந்துகள்

மருந்துகள்

மருந்துகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தால், மருந்து விநியோகம் செய்யும் தொழிலைத் துவக்கலாம். இத்தொழிலில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் இதற்குத் தேவைப்படும் முதலீடும் குறைவு தான். ஆயினும், நல்ல விநியோக கட்டமைப்பு மிகவும் அவசியம்.

 இயற்கை உணவுகள்

இயற்கை உணவுகள்

மக்கள் தங்களின் உடல்நலன் மீது அதிக அக்கறை செலுத்த ஆரம்பித்து விட்டதால், இயற்கை உணவுப் பொருட்களுக்குச் செலவு செய்யத் தயாராக இருக்கின்றனர். பல்வேறு இயற்கை உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்தியாவில் விநியோகஸ்தர்கள் தேடி வருகின்றன. உங்களுக்கு நல்ல பகிர்மான கட்டமைப்பு இருந்தால் இப்பொருட்களைச் சந்தைப்படுத்தி, சந்தையை ஆட்கொள்ளலாம்.

 பாதுகாப்பு உபகரணங்கள்

பாதுகாப்பு உபகரணங்கள்

பல நிறுவனங்களில் இவை பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுகின்றன. மேலும் பல நிறுவனங்களில் தணிக்கை செய்வதால் பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருப்பது கட்டாயம். தீத்தடுப்பான், சிசிடிவி கேமரா, ஹெல்மெட், பாய்லர் உடை போன்ற பாதுகாப்பு உபகரணங்களுக்குத் தேவை அதிகம்.

விதைகள்

விதைகள்

விதைகள் பகிர்மானம் செய்யும் தொழில் மிகவும் இலாபகரமானது. இவை விவசாயத்தில் பயன்படுத்தும் போது விதையின் தரத்திற்கு ஏற்ப மகசூல் கிடைக்கும். எனவே விவசாயிகள் தரமான விதைகளுக்காக அதிகம் முதலீடு செய்வர். கிராமப்புறங்களில் நல்ல விநியோக கட்டமைப்பு இருந்தால் தாராளமாக இத்தொழிலைத் துவங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

15 Best Distribution Business Ideas

15 Best Distribution Business Ideas
Story first published: Wednesday, April 25, 2018, 11:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X