அமெரிக்காவின் மிகப் பெரிய பங்கு சந்தை எக்ஸ்சேஞ் ஆன நாஸ்டாக் வரும் காலத்தில் கிரிப்டோகரன்சிகளுக்கான எக்ஸ்சேஞ் ஒன்றைத் துவங்க இருப்பதாக அதன் தலைமை நிர்வாகி புதன் கிழமை தெரிவித்துள்ளார்.
விரிச்சுவல் கரன்சிகள் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே ஒழுங்குமுறைபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் துவக்கத்தில் இப்படித் தான் இருக்கும் வரும் நாட்களில் அது மாற வெண்டும், அதன் படி நாஸடாக் கிரிப்டோ கரன்சிக்கான எக்ஸ்சேஜ்-ஐ உருவாக்கும்.
அதே நேரம் நாஸ்டாக் பல முக்கிய விர்ச்சுவல் கரன்சி எக்ஸ்சேஞ்களுடன் இணைந்து கிரிப்டோ கரன்சி சந்தை கட்டமைப்பை உருவாக்கி டிரேடிங் செய்யும் பணியில் இறங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்ற புதன்கிழமை நாஸ்டாக் ஜிமினி டிரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து கிரிப்டோ கரன்சி செயல்பாடுகளைக் கண்காணிக்க இருப்பதாகவும் அதன் சந்தை மற்றும் அதில் உள்ள மோசடிகள் பற்றித் தெரிந்துகொள்ள உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் நாஸ்டாக் 177 மில்லியன் டாலர் நிகர வருவாயினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.