உமாங் செயலியில் ஓய்வூதியதாரர்கள் “பாஸ்புக்” சேவையை ஈபிஎஃப்ஓ அறிமுகம் செய்தது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிஎப் சந்தாதார்களுக்கு ஈ-சேவைகள் மூலம் நிறைய வசதிகளைச் செய்து கொடுத்துள்ள ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஓ) தற்போது "உமாங் செயலி" (UMANG app) மூலம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

பாஸ்புக்

பாஸ்புக்

இந்தச் சேவையில் "கணக்குப் புத்தகத்தை காட்டுக" என்பதை கிளிக் செய்து ஓய்வூதியதாரர் பி.பி.ஓ எண்ணையும், பிறந்த தேதியையும் பதிவிட வேண்டும். இதற்கு முன்பு ஆதார் இணைப்பை ஓய்வூதிய கணக்கில் செய்து இருக்க வேண்டும்.

ஒரு முறை கடவுச்சொல்

ஒரு முறை கடவுச்சொல்

தரப்பட்ட தகவல் சரியானது என்பதை உறுதி செய்த பின் ஓய்வூதியதாரரின் பதிவு செய்யப்பட்ட ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் எனப்படும் ஓடிபி அனுப்பப்படும். ஓடிபி. எண்ணினை பதிவிட்டால், ஓய்வூதியதாரர் கணக்குப் புத்தகம் திரையில் தெரியும்.

விவரங்கள்

விவரங்கள்

இதில் ஓய்வூதியதாரரின் பெயர், பிறந்த தேதி, கடைசியாக ஓய்வூதியம் செலுத்தப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். நிதியாண்டு வாரியாக ஒட்டுமொத்த கணக்குப் புத்தக விவரங்களையும் பதிவிறக்கம் செய்யும் வசதியும் இதில் உள்ளது.

உமாங் செயலி அளிக்கும் நன்மைகள்

உமாங் செயலி அளிக்கும் நன்மைகள்

ஊழியர்களை மையப்படுத்திய சேவைகளாக ஈ.பி.எஃப். கணக்குப் புத்தகத்தை காட்டுக, உரிமை கோருதல், உரிமை கோரியதன் தற்போதைய நிலவரம் ஆகியவையும், நிறுவன உரிமையாளர்களை மையப்படுத்தியதாக நிறுவனத்தின் ஐ.டி மூலம் பணம் செலுத்திய விவரங்கள் டி.ஆர்.ஆர்.என். நிலவரம் ஆகியவையும் பொது சேவைகளாக நிறுவனத்தைத் தேடுக, ஈபிஎஃப்ஓ அலுவலகத்தைத் தேடுக, உரிமை கோரியதன் நிலவரத்தை அறிக, எஸ். எம். எஸ்-ல் கணக்கு விவரங்கள் மிஸ்டு கால் மூலம் கணக்கு விவரங்கள் ஆகியவையும் ஓய்வூதியதாரர்கள் சேவைகளாக ஜீவன் பிரமானின் தற்போதைய நிலை என்பதும், ஈ.கே.ஒய்.சி சேவைகளாக ஆதார் விவரங்களும், உமாங் செயலி மூலம் ஈபிஎஃப்ஓ அளிக்கும் ஈ-சேவைகள் ஏற்கனவே கிடைத்து வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO INTRODUCES ‘VIEW PENSION PASSBOOK’ SERVICE FOR THE PENSIONERS THROUGH UMANG APP

EPFO INTRODUCES ‘VIEW PENSION PASSBOOK’ SERVICE FOR THE PENSIONERS THROUGH UMANG APP
Story first published: Friday, May 4, 2018, 18:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X