ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய எளிய வழிமுறை..!

By Valliappan N
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில வருடங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் பெறுவது என்பது மிகப்பெரிய குதிரைக்கொம்பாக இருந்தது, ஆனால் இப்பொழுது மிக எளிமையாக ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து ஒரே வாரத்தில் பாஸ்போர்ட்டை பெற்றுவிடலாம்.

தற்போதைய விதிமுறைகளின் படி பாஸ்போர்ட் பெற ஆதார் எண் மட்டுமே மிக முக்கியமான அடையாள அட்டையாகக் கேட்கப்படுகிறது. இந்தக் கட்டுரையில் பாஸ்ப்போர்ட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து, எப்படி பெறுவது என்பதைப் படி படியாகப் பார்ப்போம்.

படி 1
 

படி 1

முதலில் www.passportindiagov.in என்ற இணைய தளத்திற்கு செல்லவும். அதில் புதிய பயனர்கள் (new user) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

படி 2

படி 2

அதில் உங்கள் வசதிக்கு ஏற்ப பாஸ்போர்ட் அலுவலகத்தை தேர்ந்து எடுங்கள். பின் உங்கள் பெயர், பிறந்த தேதி, ஈமெயில், லாக்இன் ஐடி, பாஸ்வேர்டு பின் உங்கள் விருப்பத்திற்கு ஒரு பாதுகாப்பு கேள்வி மற்றும் பதிலை பதிவிடுங்கள்.

உங்கள் பாஸ்வர்ட் மறந்துவிட்டால் இந்தக் கேள்விக்கு உண்டான பதிலை கொடுத்துக்கூட உங்கள் அக்கவுண்ட்டை லாக் இன் செய்யலாம்.

படி 3

படி 3

இந்தத் தகவல்கள் எல்லாம் கொடுத்த பின்பு உங்கள் பதிவு உறுதியாகும். பின் நீங்கள் கொடுத்த ஈமெயில்-க்கு ஒரு மெயில் வந்திருக்கும். அந்த மெயிலில் உங்கள் அக்கவுண்ட் அக்டிவேட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்று குறிப்பிட்டு இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.

படி 4
 

படி 4

இங்கே உங்களது லாக்இன் ஐடி-ஐ பதிவிடவும். இதைச் செய்தவுடன் உங்கள் அக்கவுண்ட் அக்டிவேட் ஆகிவிடும். மீண்டும் லாக்இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு உள்ளிடவும்.

படி 5

படி 5

இதில் புதிய பாஸ்போர்ட் (apply for fresh passport) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். பின் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறும் தேர்வை கிளிக் செய்யவும்.

படி 6

படி 6

இதைப் படியில் புதிய பாஸ்போர்ட், சாதாரண முறையா அல்லது தட்கல் முறையா மற்றும் பாஸ்ப்போர்ட்டில் 36 பக்கங்களா அல்லது 60 பக்கங்கள் வேண்டுமா என்று தேர்ந்தெடுங்கள்.

இதை உங்கள் விருப்பத்தின் படி தேர்வு செய்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.

படி 7

படி 7

இந்தப் படியில் உங்களைப் பற்றிய விபரங்களை அளிக்கவும் அதாவது உங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, பாலினம், பிறந்த ஊர், இந்திய குடிமகனா, வேலை செய்பவரா, பான் என் (விருப்பம்), வாக்காளர் அடையாள என் (விருப்ப என்), படிப்பு, ஆதார் என் (கட்டாயம்).

அனைத்து விபரங்களையும் ஆடையாளத்திற்காக நீங்கள் கொடுக்கும் ஆவணத்தை பொறுத்து ஓரே மாதிரியாக இருக்க வேண்டும்.

படி 8

படி 8

இதில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களைத் தரவேண்டும் (தாய் மற்றும் தந்தை). அவர்கள் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்.

படி 9

படி 9

இந்தப் படியில் உங்கள் ஆதார் எண்ணில் இருக்கும் முகவரியைக் கொடுக்கவும் அதன் பின் உங்கள் மொபைல் என்.

படி 10

படி 10

அடுத்து எதேனும் அவசரத்துக்குத் தொடர்புகொள்ள ஒருவரின் பெயர் மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவும்.

படி 11

படி 11

பின் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் இரு நண்பர்களின் விபரங்களை கொடுங்கள், இது போலீஸ் பாஸ்போர்ட் அளிக்கும் முன்பு இவர்களிடம் உங்களைப் பற்றி அறிந்துகொள்ளத் தேவைப்படுத்தி கொள்வார்கள்.

படி 12

படி 12

உங்களுக்கு இது தான் முதல் பாஸ்போர்ட்டா அல்லது இதற்கு முன்பு பாஸ்போர்ட் வைத்திருந்தீர்களா, உங்கள் மீது எதுவும் குற்றவியல் வழக்குகள் உள்ளதா என்று சில கேள்விகளுக்குப் சரியான பதிலை தேர்வு செய்யவும்.

படி 13

படி 13

இந்தப் படியில் நீங்கள் கொடுத்த அனைத்து விபரங்களையும் ஒரு முறை சரிபார்க்க உங்களைக் கேட்கும். உள்ளிட்ட அணைத்து தகவல்களும் சரி என்றால் அடுத்த படிக்கு செல்லவும்.

படி 14

படி 14

அடுத்தது பாஸ்போர்டுக்கு உண்டான பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்திவிட்டு பின் உங்களுக்கு வசதியான தேதி மற்றும் ஊரைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் பாஸ்ப்போர்ட் அலுவலகத்திற்குச் செல்லும் போது ஆன்லைனில் உங்கள் தகவல்கள் அடங்கிய பார்ம்-ஐ எடுத்துச் செல்லவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Easy steps to get passport through online

Easy steps to get passport through online
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X