வீடியோ கேம் உலகின் மன்னன்.. மைக்ரோசாப்ட்-ஐ ஓரம்கட்டும் டென்சென்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீடியோ கேம்களை விளையாடாதவர்கள் யாரேனும் உண்டா? எவ்வளவுக்கெவ்வளவு வீடியோ கேம் வேடிக்கையானதோ, அதே அளவிற்கு அடிமையாக்கும் ஆபத்தும் உள்ளது. அதேநேரம் பங்குதாரர்களுக்கு லாபமளிக்கக்கூடியவை கூட. ஹாலிவுட்டை போல , இந்தக் கேம்களின் உரிமையாளர்கள் நடிகர்களுக்கு அளவுகடந்த சம்பளத்தைக் கொடுத்துக் கஷ்டப்பட வேண்டியதில்லை. நடிப்பவர்களைக் காட்டிலும் புரோகிராமர்கள் எளிதிலும், குறைவான ஊதியத்திலும் கிடைப்பர். பல வீடியோ கேம்களுக்கு விளம்பர செலவுகள் கூட இல்லை. நண்பர்களுக்குக்கிடையே பகிர்வதன் மூலமே வைரலாகி விடுகிறது.

வீடியோ கேம்களுக்கான தேவை என்பது எப்போதுமே இருக்கும் வகையில் மிகவும் வலுவானது. பல பில்லியன் மக்கள் தங்களின் ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகள் வாயிலாக எப்போதும் பொழுதுபோக்க விரும்புவதால், வீடியோ கேம்களுக்கான சந்தை என்பது மிகவும் பெரியது. பெரிய பெரிய கேமிங் நிறுவனங்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் டாலர் விற்பனையும் செய்து வருகின்றன.

 

இவற்றிற்கு இடையே, 2018 ஆம் ஆண்டிற்கான உலகின் 10 பெரிய வீடியோ கேம் நிறுவனங்களை இங்கே காணலாம்.

 #10 நெட்மார்பிள்

#10 நெட்மார்பிள்

மேற்கத்திய நாடுகளில் பரவலாக அறியப்படாவிட்டாலும், நெட்மார்பிள் ஆசியாவின் பெரிய கொரியன் கேம் வெளியீட்டாளர். கொரியாவின் ஆன்லைன் கேம் வெளியீட்டாளர்களில் முதலிடத்தில் உள்ள இது, மூன்றாம் காலாண்டில் 519.4 டாலர் வருமானம் ஈட்டி, கடந்த ஆண்டை காட்டிலும் 62% வளர்ச்சியடைந்துள்ளது.

மேலும் நெட்மார்பிள் ஆசியாவின் வேகமாக வளரும் மொபைல் கேம் நிறுவனமாகவும் உள்ளது. இந்நிறுவனம் மிகவும் பிரபலமான ஸ்டார் வார்ஸ்: போர்ஸ் அரினா கேமை வெளியிட்டுள்ளது.

#9 டேக் டூ இன்டரேக்டிவ் சாப்ட்வேர்

#9 டேக் டூ இன்டரேக்டிவ் சாப்ட்வேர்

2018ம் ஆண்டிற்கான உலகின் பெரிய 10 கேம் நிறுவனங்களின் பட்டியலில் 9வது இடம் பிடித்துள்ள இந்நிறுவனம், உலகை எப்போதும் கலக்கிக் கொண்டிருக்கும் ஜி.டி.ஏ எனும் கிராண்ட் தெப்ட் ஆட்டோ (GTA-Grand Theft Auto) என்னும் மிகப்பெரிய கேமிற்குப் பெயர்பெற்றது.

கிராண்ட் தெப்ட் ஆட்டோ5 கேம் 90 மில்லியன் அலகுகள் விற்கப்பட்டு, 6 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டித் தந்துள்ளது.

#8 யூபிசாப்ட்
 

#8 யூபிசாப்ட்

ஃபார் கிரே மற்றும் அசாசின்ஸ் கிரிடு: ஆரிஜின்ஸ் போன்ற கேம்களின் வெளியீட்டாளரான யூபிசாப்ட் நிறுவனம், தனது வலுவான மூன்றாம் காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. பிரன்ச் கேம் தயாரிப்பாளரான யூபிசாப்ட் கடந்த டிசம்பரில் முடிவுற்ற காலாண்டில் 889.4 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி, 2018ம் ஆண்டிற்கான உலகின் பெரிய கேம் நிறுவனங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளது.

#7 நெட்ஈஸ்

#7 நெட்ஈஸ்

ஒப்பீட்டு அளவில் இந்தப் பட்டியலில் புதிய வரவான இந்தச் சீன நிறுவனம் உலகின் மிகப்பெரிய கேம் தயாரிப்பாளர்களில் ஒன்று. 2001 ல் நிறுவப்பட்ட நெட்ஈஸ் நிறுவனம் பேன்டஸி வெஸ்ட்வார்டு ஜேர்னி உட்பட, பல உள்ளுர் மற்றும் சில மேற்கத்திய கேம்களையும் வெளியிட்டுள்ளது.

 #6 ஆக்டிவிசன் பிளிசார்டு

#6 ஆக்டிவிசன் பிளிசார்டு

பல மில்லியன் மக்களை அடிமையாக்கி உலகின் மிகப்பெரிய வெற்றியடைந்த பலர்விளையாடும் (multi player) கேமான வோர்ல்டு ஆப் வார்கிராப்ட் கேம் மற்றும் ஒவ்வொரு ஆண்டுச் சிறப்பாக மேம்பட்டுவரும் லைவ் ஆக்சன் கேமான கால் ஆப் டியூட்டி போன்ற கேம்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

#5 நின்டென்டோ

#5 நின்டென்டோ

அனைவரையும் மொபைலும் கையுமாக ஓட வைத்த போக்கிமான் கோ மிகப்பெரிய வெற்றியடையாவிட்டாலும், நின்டென்டோ உலகின் மிகப்பெரிய கேமிங் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. 2017ஆம் ஆண்டில் 4.48பில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்றுள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நம் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களைப் போல நின்டென்டோ பெரிய நிறுவனமாக இல்லாவிட்டாலும், இதன் சூப்பர் மேரியோ ப்ரோஸ் மற்றும் போக்கிமான் போன்ற கேம்கள் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திப் பல மில்லியன் மணிநேரம் பொழுதுபோக்க உதவியுள்ளது.

#4 எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ்

#4 எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ்

மேடன் என்.எப்.எல் போன்ற குறிப்பிடத் தகுந்த ஸ்போர்ட்ஸ் கேம்களைக் கடந்த பல வருடங்களாக உருவாக்கி வரும் எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான பிஃபா 18 கேம், சாக்கர் பிரபலமான நாடுகளில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.

மூன்றாம் காலாண்டில் 1.97 பில்லியன் டாலர் வருமானம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ள இந்நிறுவனம், உலகின் மிகப்பெரிய வீடியோ கேம் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

 #3 சோனி

#3 சோனி

ப்ளே ஸ்டேசன் சிஸ்டம் எந்த இடத்தில் இருந்தாலும், அங்குச் சோனி தயாரித்த வீடியோகேம்கள் கண்டிப்பாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

கூடவே டிவி மற்றும் இதர மின்னணு கருவிகள் தயாரிப்புக்குப் பெயர் பெற்ற ஜப்பானிய நிறுவனமான சோனி, பெரும்பாலான மீடியா சொத்துக்களைத் தன்னகத்தே கொண்டு மேலும் பல்வேறு மீடியா தளங்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறது. அதன் ஒரு பகுதியாக உலகின் மிகப்பெரிய கேமிங் தளமான ப்ளேஸ்ஸ்டேசனுக்குக் கேம் தயாரிக்கிறது. 2017ம் ஆண்டின் விற்பனை மூலம் 68பில்லியன் டாலர் வருமானமாகச் சோனி பெற்றுள்ளது.

#2 மைக்ரோசாப்ட் கார்பொரேசன்

#2 மைக்ரோசாப்ட் கார்பொரேசன்

உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவன குழுமமான மைக்ரோசாப்ட் கார்பொரேசன், அதன் விண்டோஸ் மற்றும் ஆபிஸ் பொருட்களுக்குப் பெயர்பெற்றது. அதன் எக்ஸ் பாக்ஸ் பிரிவின் மூலம் மிகப்பெரிய கேம் உற்பத்தியாளராகத் திகழ்கிறது. ஹேலோ போன்ற பிரபல டைட்டில்களை உருவாக்கியும், மைன்கிராப்ட் போன்ற கேம் வெளியீட்டு நிறுவனங்களைக் கைப்பற்றியும் உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். சாலிடயர் (solitaire) போன்ற பிரபல கேம்களையும் தயாரித்துள்ளது மைக்ரோசாப்ட்.

#1 டென்சென்ட் ஹோல்டிங்

#1 டென்சென்ட் ஹோல்டிங்

மைக்ரோசாப்டை போல மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டாவிட்டாலும்,இத்துறையில் அதீத கவனம் செலுத்தி உலகின் மிகப்பெரிய கேமிங் நிறுவனமாக இருக்கிறது டென்சென்ட் ஹோல்டிங்.

நூற்றுக்கணக்கான மில்லியன் சீனர்கள், டென்சென்டின் வீசாட் (we chat)ஆப்பின் மூலம் பல்வேறு வீடியோ கேம்களை விளையாடுகின்றனர். 2017ம் ஆண்டில் 200 மில்லியன் மக்கள் விளையாடி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஹானர்ஸ் ஆப் கிங்ஸ் கேமையும் இந்நிறுவனமே வெளியிட்டது. மேலும் யூபிசாப்ட், ரியாட், ஆக்டிவிசன் போன்ற கேம் நிறுவனங்களிலும் பங்குகளை வைத்துள்ளது இந்நிறுவனம்.

வலுவான கேமிங் வருமானம் மற்றும் சமூகச் செயலிகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக டென்சென்ட் ஹோல்டிங் நிறுவனங்களின் பங்குகள் சிறப்பான செயல்பட்டு வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Biggest Video Game Companies in the World in 2018

10 Biggest Video Game Companies in the World in 2018
Story first published: Tuesday, May 8, 2018, 13:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X