ஐடி துறையில் புதிய மாற்றம்.. உயர் அதிகாரிகளுக்கு வந்த பிரச்சனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல்வேறு சிக்கல்களில் சிக்கிதவித்துக் கொண்டு இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் தனது வர்த்தகம் மற்றும் வருவாய் சவால்களைச் சமாளிக்க அடுத்த 2 காலாண்டுகளில் அதிகளவிலான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இதிலும் முக்கியமாகத் தற்போது ஐடி நிறுவனங்களில் பணியில் அமர்த்தப்படும் ஊழியர்கள் அனைவரும் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்தில் அதிகளவில் பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஐடி எம்பிளாய்மென்ட் அவுட்லுங் சர்வே கூறுகிறது.

 வேலைவாய்ப்பு
 

வேலைவாய்ப்பு

இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்திக்கொள்ளவும், சரிவு பாதைக்குக் கொண்டு செல்லாமல் தொடர்ந்து உயர்வான நிலையில் வைத்திருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதிகளவிலான ஊழியர்களை வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.

இதன் வாயிலாக நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தை அதிகளவில் பெற வாய்ப்புகள் உருவாகும்.

திறன்

திறன்

அதேபோல் 500 நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், அடுத்த 2 காலாண்டுகளில் அளிக்கப்படும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட திறன் கொண்டுவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இந்திய நிறுவனங்கள் சந்திக்கும் வர்த்தகக் குறைபாடுகளைக் குறைக்க முடியும் என நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் நம்புகிறது.

முக்கியத் துறை..

முக்கியத் துறை..

இந்நிலையில் தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகச் சம்பளத்துடன் வேலைவாய்ப்புகள் அளிக்கத் தயாராக உள்ள முக்கியமான தொழில்நுட்பத்தையும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

இதன் படி பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், மெஷின் லேர்னிங் மற்றும் ஏஐ டெவலப்பர்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

முக்கியபிரிவு
 

முக்கியபிரிவு

அதேபோல் இந்தப் புதிய வேலைவாய்ப்புகளில் ஐடி நிறுவனங்கள் 0-5 வருடப் பணி அனுபவம் கொண்ட ஊழியர்களுக்கு மட்டுமே அதிகளவிலான வேலைவாய்ப்புகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து புதுப்புது தொழில்நுட்பத்தில் பணியாற்றவும் முடியும்.

பிரச்சனை

பிரச்சனை

ஐடி நிறுவனங்கள் தற்போது அதிகளவிலான வேலைவாய்ப்புகளை 0-5 வருட அனுபவம் கொண்ட ஊழியர்களுக்கு அளிக்கவும், புதிய தொழில்நுட்பத்தில் இந்தப் பணிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ள நிலையில் ஐடி நிறுவனங்களில் தற்போது பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள் அதாவது 6-10 வருடம் வரையில் அனுபவம் கொண்டவர்களின் அவசியம், தேவையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

 நிர்வாகப் பணிகள்

நிர்வாகப் பணிகள்

6-10 வருடம் வரையில் அனுபவம் கொண்ட ஊழியர்களின் முக்கியமாகப் பணியாக இருப்பது, நிர்வாகப் பணிகள் தான். தற்போது ஐடி நிறுவனத்தில் அதிகளவிலான ஆட்டோமேஷன் வந்துள்ள நிலையில் இந்த நிர்வாகப் பணிகளையும் எளிதாகச் சமாளிக்க மென்பொருள் வந்துள்ளது.

ஐடி துறை

ஐடி துறை

இதுமட்டும் அல்லாமல் இந்திய ஐடி துறையில் புதிய தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, புதிய வர்த்தகம் என முழுமையாக மாறிவரும் நிலையில் நிறுவனங்களின் லாப அளவுகள் அதிகளவில் குறையும், இதனைச் சமாளிக்க நிர்வாகத்திடம் இருக்கும் எளிய வழி அதிகச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மற்றும் திறன் குறைவாக உள்ள ஊழியர்களை வெளியேற்றுவது தான்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தற்போது மிட் லெவல் ஊழியர்கள் சிக்கியுள்ளனர்.

வேலைவாய்ப்பு பங்கீடு

வேலைவாய்ப்பு பங்கீடு

இந்திய ஐடி துறையில் அடுத்த 2 காலாண்டில் அளிக்கப்படும் வேலைவாய்ப்புகளில் பிக் டேட்டா அனலிட்டிக்ஸ் பிரிவில் 25% அளிக்க உள்ளது.

இதைத் தொடர்ந்து மெஷின் லேர்னிங் பிரிவில் 15 சதவீதம், கிளவுட் கம்பியூட்டிங் SAAS 23சதவீதம், மொபிலிட்டி 18 சதவீதம், குளோபல் கண்டென்ட் சொல்யூஷன்ஸ் 12 சதவீதம், மற்ற பிரிவுகளில் 7 சதவீதம்.

 டிஜிட்டல்

டிஜிட்டல்

தற்போது இந்திய ஐடி நிறுவனங்களின் முக்கிய வர்த்தகப் பிரிவாகப் பார்த்து வருவது டிஜிட்டல் வர்த்தகம் தான், இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் இன்னோவேஷன் லேப்ஸ், டிசைன் சென்டர்கள் எனப் பல முக்கியப் பணிகளைச் செய்து வருகிறது.

ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

இதேபோல் இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், ரோபோடிக்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் பணியாற்றத் துவங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bad news for senior manager's in IT Companies

Bad news for senior manager's in IT Companies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X