ஒரு நேரத்தில் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக இருந்து வந்த ஸ்னாப்டீல் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இடையிலான போட்டியை சமாளிக்க முடியாமல் திணறியது. பின்னர் பிள்ப்கார்ட் நிறுவனத்துடனான இணைவு முயற்சியும் தோல்வி அடைந்தது.

புதிய உத்தி
விலை அதிகமான பொருட்களை விற்பதை விட விலை குறைவான பொருட்களை விற்பதில் கவனம் செலுத்த ஸ்னாப்டீல் முடிவு செய்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையினைப் பொருத்து எடுக்கப்பட்டுள்ள முடிவாக உள்ளது.

புதிய ஊழியர்கள்
கடந்த 6 மாதங்களாக நிறுவனத்தில் பல மாற்றங்களைச் செய்து வந்துள்ள ஸ்னாப்டீல் நிறுவனம் மேக் மை டிரிப் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான விகாஸ் பாஷின், கூகுள் நிறுவனத்தில் இருந்து ராதேஷ் ருத்ராதயா மற்றும் ஓயோ ரூம்ஸ்-ல் இருந்து ஸ்மிர்தி சுப்ரமனியன் உள்ளிட்டோரைப் பணிக்கு எடுத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் முன்னால் ஊழியர்கள் பலரையும் மீண்டும் பணிக்க எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

இடைவெளியை நிரப்புதல்
2017-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 20,000 ஆர்டர்கள் என்று இருந்ததை 40,000 முதல் 45,000 வரை எனக் கடந்த சில மாதங்களாக ஸ்னாப்டீல் பெற்று வருகிறது. இதனால் விற்பனையில் இருந்த இடைவெளியை விரைவில் ஸ்ணாப்டீல் நிரப்பி வருகிறது.

போட்டி நிறுவனங்கள்
பேடிஎம் மாலில் ஒரு நாளைக்கு 50,000 முதல் 55,000 ஆர்டர்கள் தினமும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஷாப் க்ளூஸ் நிறுவனம் 70,000 ஆர்டர்களைத் தினமும் பெறுகிறது.

முன்னேற்றத்தில் உள்ள தடைகள்
ஸ்னாப்டீல் நிறுவனத்திற்கு இன்னும் பல சவால்கள் உள்ளன. முன்பு ஸ்னாப்டீல் ஆர்டர் மதிப்பு 2,000 முதல் 2,500 வரை இருந்த நிலையில் தற்போது 1,000 முதல் 1,200 ரூபாயாக உள்ளது. ஷாப் க்ளுஸ் நிறுவனத்தில் 800 ரூபாயாக ஆர்டர் மதிப்பு உள்ளது. இதுவே பேடிஎம் மாலில் 2,600 ரூபாயாக உள்ளது.

நீண்ட பயணத் தூரம்?
ஸ்னாப்டீல் நிறுவனம் 2018 இறுதிக்குள் பணப்புழக்கத்தில் நல்ல நிலையினை எட்ட வாய்ப்புகள் உள்ளது. செயல்பாட்டுச் செலவினங்களில் நிலையாகக் குறைப்பதில் கவனம் செலுத்துதல் போன்றவை நல்ல முன்னேற்றத்தை அளிக்கும்.