ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது.. டிரம்ப் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2015ஆம் ஆண்டு ஈரான் அனுமதி இல்லாமல் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் கூறி அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பீரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்நாட்டின் மீது பொருளாதார மற்றும் வர்த்தகத் தடையை விதித்தது.

இந்தத் தடையை நீக்கும் வகையில் ஈரான் மற்றும் பிற நாடுகளுடன் சுமார் 2 வருடப் பேச்சுவார்த்தையில் Joint Comprehensive Plan of Action (JCPOA) என்னும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அமெரிக்கா வெளியேற்றம்

அமெரிக்கா வெளியேற்றம்

JCPOA ஒப்பந்தம் செய்யப்பட்டு 3 வருடங்கள் ஆன பின்பு தற்போது இதில் விருப்பமில்லை, இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய கற்பனை எனக் கூறி அமெரிக்க இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளது.

பதற்றம்..

பதற்றம்..

அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளைத் தனியாக விட்டு வெளியேறிய நிலையில் ஈரான் மூலம் வளைகுடா நாடுகளில் புதிதாகப் பிரச்சனை வெடிக்கும் என அச்சம் இப்பகுதியில் வெடித்துள்ளது.

அதிரடி முடிவு..

அதிரடி முடிவு..

ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது மட்டும் அல்லாமல் அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் பொருளாதார மற்றும் வர்த்தகத் தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்தத் தடைகள் 90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையிலானதாக இருக்கும்.

ஈரான் அதிபர்..
 

ஈரான் அதிபர்..

இந்நிலையில் ஈரான் நாட்டு அதிபர் ஹாசன் ருஹானி, இது உளவியல் போர், ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினாலும், பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை தொடரும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா வெளியேறியது தனக்கு மகிழ்ச்சி என்பதைச் சுசகமாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதற்கு ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மட்டும் அல்லாமல் அமெரிக்கா தன் முடிவை மறுபரிசீலனை செய்து ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இஸ்ரேல்

இஸ்ரேல்

மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவைத் தான் முழுமையாக ஆதரிக்கிறேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நிடான்யஹூ தெரிவித்துள்ளார். இந்த முடிவைத் தைரியமான தலைமை எனவும் பாராட்டியுள்ளார் பெஞ்சமின்.

<strong>இதைக் கிளிக் செய்யவும்.</strong>இதைக் கிளிக் செய்யவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Donald Trump says US will no longer abide by Iran deal

Donald Trump says US will no longer abide by Iran deal - Tamil Goodreturns | ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது.. டிரம்ப் அறிவிப்பு..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X