இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் 11 அரசு வேலைகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கால் காசு நாளும் அது அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும் என்று நமது பெற்றோர்கள் காலத்தில் கூறி வந்ததை நாம் கேள்விப்பட்டு இருப்போம், பார்த்தும் இருப்போம். ஆனால் இப்போது தனியார் நிறுவனங்கள் அளிக்கும் சம்பளம் அரசு வேலை விட அதிகம் அன்மை காலமாக அதன் மீதான மோகம் பலருக்கும் குறைந்து வந்தாலும் பலருக்கு குறைவில்லை என்று கூறலாம்.

சைரன் வைத்துக் கார், 10 லட்சம் ஆண்டுச் சம்பளம், இரண்டு ஏக்கரில் அரசு பங்களா என அரசு வேலை வாய்ப்புகள் முக்கியப் பதவி வகிப்பவர்களுக்குப் பல விதமான சலுகையினை அளிக்கிறது. ஆனால் இந்த வேலை வாய்ப்புகளை எல்லாம் பெறுவது அவ்வளவு சுலபமும் கிடையாது. இதற்குப் பல வருடங்கள் பயிற்சிகள் எடுக்க வேண்டும், கடிமாக உழைக்க வேண்டும் என்று நிறையத் திறன்களும் தேவை.

பொதுத் துறை நிறுவன வேலைவாய்ப்புகள்
 

பொதுத் துறை நிறுவன வேலைவாய்ப்புகள்

பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பல நன்மைகள் அளிக்கப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் போது நல்ல சம்பளம், தங்க வீடு, மருத்துவ வசதிகள் மற்றும் பிற அரசு நன்மைகள் எல்லாம் கிடைக்கும்.

1. கோல் இந்தியாவில் பணிபுரிபவர்கள் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.

2. இந்தியன் ஆயில் கார்பேஷன் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் 8 முதல் 9 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.

சிவில் சவீசஸ் அதிகாரிகள்

சிவில் சவீசஸ் அதிகாரிகள்

ஐஏஎஸ் போன்ற பணியிடங்கள் சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் கீழ் வரும். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நல்ல சம்பளம், அதிகாரம், சமுகத்தில் நல்ல மதிப்பு போன்றவை கிடைக்கும்.

அமைச்சக செயலாளராக நியமிக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அடிப்படை சம்பள மட்டும் 90,000 ரூபாய் ஆகும். முழு விவரங்கள் கீழே:

அடிப்படை ஊதியம்: ரூ. 90,000

அகவிலைப்படி: ரூ. 96,300

வீட்டு வாடகை படி: ரூ.27,000

பயணப்படி: 5,280

மொத்த மாத சம்பளம் : ரூ, 2,18,580

விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள் பொதுவாக எஸ்.சி மற்றும் எஸ்.டி கிரேடுகளில் அவர்களது கல்வி தகுதி பொருத்து நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு அடிப்படை சம்பளம் 15,600 முதல் 39,100 ரூபாய் வரை இருக்கும். கிரேட் பே 5,400 முதல் 6,600 ரூபாய் வரை பெற முடியும்.

துவக்க நிலை விஞ்ஞானிகளின் சம்பள விவரம்

அடிப்படை சம்பளம் - ரூ. 21,000

அகவிலைப் படி - ரூ. 23,790

வீட்டு வாடகை படி - ரூ. 6,300

பயணப் படி - ரூ. 3,200

மொத்த சம்பளம்: ரூ. 57,906

 மருத்துவர்கள்
 

மருத்துவர்கள்

இந்தியாவில் மருத்துவர் என்பது இலாபகரமான வேலை வாய்ப்பு ஆகும். மருத்துவப் பயிற்சியாளர்களுக்குப் பெரும் அளவில் தேவை உள்ளது. எம்பிபிஎஸ் படிக்கும் போது இன்டர்ன்ஷிப் ஆக மட்டும் 10,000 முதல் 20,000 ரூபாய் வரை இவர்களால் சம்பாதிக்க முடியும், இதுவே குறிப்பிட்ட பிரிவில் தேர்ந்தவர் மற்றும் முதுகலைப் பட்டம் போன்றவை பெற்றவர்களுக்கு அதிகம் சம்பளம் கிடைக்கும். அரசு மருத்துவமனைகளில் 35,000 முதல் 70,000 ரூபாய் வரை மாத சம்பளம் இவர்களுக்குக் கிடைக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாதம் 1,50,00,000 ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கல்லூரி பேராசிரியர்கள்

கல்லூரி பேராசிரியர்கள்

ஒரு தேசத்தினை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. கல்லூரிகளில் பேராசிரியர்களாக உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 9,55,627 ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.

இந்தியன் கோஸ்ட் கார்டு

இந்தியன் கோஸ்ட் கார்டு

இந்திய கடலோர காவல் துறையில் பணிபுரிபவர்களுக்குச் சம்பளம் மிக அதிகம். தரவரிசை படி இவர்களுக்கு ஊதியம் மாறும்.

அசிஸ்டண்ட் கமாண்டெண்ட் ரூ. 15600-39100 கிரேடு பே உடன் ரூ 5400 / -

டெப்டி கமாண்டெண்ட் ரூ. 15600-39100 கிரேடு பே உடன் ரூ 6600 / -

கமாண்டெண்ட் (ஜூனியர் வகுப்பு) ரூ. 15600-39100 தர கிரேடு ரூ 7600 / -

கமாண்டெண்ட் ரூ. 37400-67000 தர ஊதியத்துடன் ரூ. 8700 / -

டெப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரூ. 37400-67000 தர ஊதியம் ரூ 8900 / -

இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரூ. 37400-67000 தர கிரேடு ரூ 10000 / -

டைரக்டர் ஜெனரல் ரூ. 37400-67000 தர கிரேடு ரூ 12000 / -

பாதுகாப்புத் துறை

பாதுகாப்புத் துறை

இந்திய இராணுவம், கப்பல் படை, விமானப் படை என அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசு பல நன்மைகளுடன் சம்பளத்தினை அள்ளித் தருகிறது. லெப்டினன்ட் ஆகப் பணிபுரியும் ஒருவருக்கு 65,000 ரூபாய் மாத சம்பளம் கிடைக்கும்.

ரயில்வே இஞ்சினியர்கள்

ரயில்வே இஞ்சினியர்கள்

பொதுத் துறை நிறுவனங்களில் இஞ்சினியரரிங் ஊழியர்களில் ரயில்வே இஞ்சினியர்களுக்குத் தான் அதிகச் சம்பளம். இரயில்வேயில் மூத்த செக்‌ஷன் இஞ்சினியர்களாக உள்ளவர்கள் ஆண்டுக்கு 6,01,866 முதல் 7,09,342 ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகின்றனர். இவர்களுக்கு இந்தியா முழுவதும் இலவசமாக இரயில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

ஏஸ்பிஐ பிஓ வேலை வாய்ப்பு

ஏஸ்பிஐ பிஓ வேலை வாய்ப்பு

வங்கி பிஓ வேலை வாய்ப்பு என்றாலே இந்தியாவில் மிகவும் நன்மைகள் வாய்ந்த வேலை வாய்ப்பாகும். வேலை அழுத்தம் குறைவு, அதிகச் சம்பளம் மற்றும் நன்மைகளும் கிடைக்கும்.

ஐபிபிஎஸ் ஒவ்வொரு ஆண்டும் 1,000 கணக்கான நபர்களை வங்கி பிஓ அதிகாரிகளாகப் பணிக்கு எடுக்கிறது. அதிகபட்சம் ஆண்டுக்கு 8,55,000 ரூபாய் வரை சம்பளம் பெற முடியும்.

வெளியுறவு அமைச்சக உதவியாளர்

வெளியுறவு அமைச்சக உதவியாளர்

எஸ்எஸ்சி - சிஜிஎல் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி அடைபவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சர்வதேச பயண வசதிகள் என மாதம் 1,88,500 ரூபாய் வரை சம்பளம் பெற முடியும்.

 வருமான வரி இன்ஸ்பெக்ட்டர்

வருமான வரி இன்ஸ்பெக்ட்டர்

எஸ்எஸ்சி - சிஜிஎல் நுழைவுத் தேர்வு கீழ் தான் இந்த வேலை வாய்ப்பும் கிடைக்கும். பேண்ட் 9,300-34,800 பேரில் ரூ 4,600 வகுப்பு ஊதியத்துடன் சம்பளம் பெற முடியும். சம்பள நன்மைகள் மட்டும் இல்லாமல் இவர்களுக்கு மாதம் 30 லிட்டர் பெட்ரோ, பிஎஸ்என்எல் இணையதளச் சேவை உள்ளிட்டவை இவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Highest salaries of government jobs in India

Highest salaries of government jobs in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X