பிளிப்கார்ட் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்து 100 கோடி அள்ளி செல்லும் ஆஷிஷ் குப்தா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1998-ம் ஆண்டு ஆஷிஷ் குப்தா மற்றும் அவரது பிஸ்னஸ் கூட்டாளிகள் அவர்களது ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜங்லியை அமேசான் நிறுவனத்திற்கு 240 மில்லியன் டாலருக்கு விற்றனர். அதற்கு அடுத்துச் சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஷிஷ் குப்தா தற்போது பிளிப்கார்ட் - வால்மார்ட் டீலில் 20 மில்லியன் டாலரினை சம்பாதிக்க இருக்கிறார்.

முதலீடு

முதலீடு

ஆஷிஷ் குப்தா பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதல் ஏஞ்சல் முதலீட்டாளராக 10 லட்சம் ரூபாயினை முதலீடு செய்திருந்தார்.

ஹீலியன் வெஞ்சர்ஸ்

ஹீலியன் வெஞ்சர்ஸ்

வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனமான ஹீலியன் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனராக ஆஷிஷ் குப்தா இருந்து வந்த நிலையில் 2016-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் சொந்தமாக நிதி நிறுவனங்களைத் துவங்க சென்றதால் இந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. ஆனால் எல்லோருக்கும் தெரியாது என்னவென்றால் ஆஷிஷ் குப்தா வெற்றிகரமான ஒரு ஏஞ்சல் முதலீட்டாளர் என்பது ஆகும்.

ஏஞ்சல் முதலீடு

ஏஞ்சல் முதலீடு

ஆஷிஷ் குப்தா பெரிய அளவில் எந்த ஒரு ஏஞ்சல் முதலீடுகளையும் செய்யவில்லை என்றாலும் ஸ்மார்ட்டாக ஜெய்க்க கூடிய நிறுவனங்களில் குறைந்த அளவில் முதலீடு செய்து பெரிய அளவில் லாபம் பார்த்துள்ளார். இவருடைய நண்பர் ஒருவரும் இவரது ஏஞ்சல் முதலீட்டு நிறுவனத்தினை விட இவரது முதலீடுகள் சிறப்பாகச் செய்யப்படுவதாகவும் கிண்டலாகக் கூறியுள்ளார்.

பிற நிறுவனங்களில் முதலீடுகள்

பிற நிறுவனங்களில் முதலீடுகள்

பிளிப்கார்ட் மட்டும் இல்லாமல் ஆஷிஷ் குப்தா மியூசிக்மா மற்றும் மேக்மைடிரிப் போன்ற நிறுவனங்கள் மீது எல்லாம் முதலீடு செய்துள்ளார்.இவருக்குக் குறைந்த மூன்று நிறுவனங்கள் அதிக லாபத்தினை அளித்துள்ளன.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

கிளவுட் கம்ப்யூட்டின் நிறுவனமான மிஞ்சார் நிறுவனத்தினை நியூடானிக்ஸ் வாங்கிய போதும், மெரிடிராக் நிறுவனத்தினை மனிபால் 2016-ம் ஆண்டு வாக்கியப் போதும், ஐடி சேவை நிறுவனமான டாக்‌ஷ்-ஐ ஐபிஎம் 2004-ம் ஆண்டு வாங்கிய போது பெரும் அளவில் லாபங்களை ஆஷிஷ் குப்தா பெற்றுள்ளார். அதன் உச்சம் தான் தற்போது பிள்ப்கார்ட் விற்பனையில் இவருக்குக் கிடைக்க இருக்கும் 18 முதல் 20 மில்லியன் வரையிலான டாலர்.

இது குறித்து ஆஷிஷ் குப்தாவை தொடர்புகொள்ளத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் முயன்றும் அவர் நமக்குக் கிடைக்கவில்லை

 

படிப்பு & குடியுரிமை

படிப்பு & குடியுரிமை

கணினி அறிவியல் துறையில் ஐஐடி கான்பூரில் படித்த ஆஷிஷ் குப்தா ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பெற்றுள்ளார். ஜங்லி நிறுவனத்தினை விற்ற பிறகு சிறிது காலம் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். தற்போது அமெரிக்கக் குடியுரிமை பெற்றதால் அங்கேயே உள்ளார்.

லாபம்

லாபம்

ஆஷிஷ் குப்தா 2009-ம் ஆண்டு முதன் முறையாக 10 லட்சம் ரூபாயினைப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் முதலீடு செய்த அதே நேரத்தில் அக்சல் பர்ட்னர்ஸ் நிறுவனமும் 1 மில்லியன் டாலரினை மூன்று பரிவர்த்தனையாகப் பிளிப்கார்ட் நிறுவனம் மீது முதலீடு செய்தது. தற்போது இவர் முதலீடு செய்த 10 லட்சம் ரூபாய் 100 கோடியாக உருவெடுத்துள்ளது. மியூசிக்மா நிறுவனம் விற்கப்பட்ட போது பிள்ப்கார்ட்டை விட அதிகபட்சமாக 50 மில்லியன் டாலர் இவருக்கு லாபமாகக் கிடைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ashish Gupta, the angel investor likely to make $20 million from Flipkart Walmart deal

Ashish Gupta, the angel investor likely to make $20 million from Flipkart Walmart deal
Story first published: Saturday, May 12, 2018, 13:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X