கர்நாடக தேர்தல் முடிவுகள்: எந்த பங்குகளை வாங்கலாம் & விற்கலாம்.. 15% வரை லாபம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை மந்தமாக முடிவடைந்த நிலையில் இன்று கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கின்றன. நேற்று பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் குறியீடு 20.92 புள்ளிகள் உயர்ந்து 35,556.71 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 0.10 புள்ளிகள் உயர்ந்து 10,806.60 புள்ளிகளை அடைந்து நேற்றை வர்த்தகம் முடிவடைந்தது.

வணிகர்கள் மத்தியில் பாஜக வெற்றி பெரும் என்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன. அதே நேரம் காங்கிரஸ் மற்றும் யார் வேண்டுமானாலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதால் வர்த்தகர்கள் எல்லாவற்றுக்கும் ஏற்றவாறு தயாராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்வது என்றில்லாமல் கலப்படமாக முதலீடு செய்வது நல்ல பயன் அளிக்கும்.

தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 10,860 முதல் 10,900 புள்ளிகள் வரை உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்ற வல்லுநர்கள் பரிந்துரைகளை இங்குப் பார்க்கலாம்.

சரிகம இந்தியா

சரிகம இந்தியா

சரிகம இந்தியா நிறுவனப் பங்குகளை 841 ரூபாய்க்கு வாங்கினால் 920 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் 730 ரூபாய். லாபம் அதிகபட்சம் 15 சதவீதம் கிடைக்கும்.

மான்சாண்டோ

மான்சாண்டோ

அமெரிக்க விவசாய உரம் நிறுவனமான மான்சாண்டோ பங்குகளை 2,772 ரூபாய்க்கு வாங்கினால் 2940 வரை உயரும் என்றும், ஸ்டாப்லாஸ் 2,700 ரூபாய் என்றும் லாபக் 6 சதவீதம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பயோகான்

பயோகான்

பார்மா நிறுவனமான பையோகான் பங்குகளை 634 ரூபாய்க்கு வாங்கினால் 4 சதவீத லாபத்துடன் 658 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் 610 ரூபாய் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபினான்ஸ்
 

இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபினான்ஸ்

இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபினான்ஸ் நிறுவன பங்குகளை 1,218 ரூபாய்க்கு வாங்கினால் 1,297 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் 1,195 ரூபாய் ஆகும்.

மஹிந்திரா & மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா பங்குகளை 850 ரூபாய் கொடுத்து வாங்கினால் 925 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. 847 ரூபாய் என்ற நிலையில் நட்டத்தினைத் தவிர்க விற்கலாம்.

வெல்ஸ்பன் இந்தியா

வெல்ஸ்பன் இந்தியா

ஜவுளி நிறுவனமான வெல்ஸ்பன் இந்தியா பங்குகளை 66 ரூபாய்க்கு வாங்கினால் 74 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் 57 ரூபாய். 12 சதவீதம் வரை லாபம் அளிக்க வாய்ப்புகள் உள்ளது எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரெயின் இண்டஸ்ட்ரீஸ்

ரெயின் இண்டஸ்ட்ரீஸ்

கெமிக்கல்ஸ் மற்றும் சிமெட் போன்றவற்றை உற்பத்தி செய்யும் ரெயின் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 256 ரூபாய் இலக்கு என்றும் ஸ்டாப் லாஸ் 290 என்றும் லாபம் 7 சதவீதம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மகேந்திரா லைப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ்

மகேந்திரா லைப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ்

 மகேந்திரா லைப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் பங்குகளை 513 ரூபாய்க்கு வாங்கினால் 5 சதவீதம் என 545 ரூபாய் உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் 495 ரூபாய் ஆகும்.

பிடிசி இந்தியா

பிடிசி இந்தியா

பிடிசி இந்தியா பங்குகளை 90 ரூபாய்க்கு வாங்கினால் 104 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் 85 ரூபாய் ஆகும்.

எக்சைட் இண்டஸ்ட்ரீஸ்

எக்சைட் இண்டஸ்ட்ரீஸ்

எக்சைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளை 258 ரூபாய்க்கு வாங்கினால் 280 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. 8 சதவீதம் வரை லாபம் அளிக்கும். லாபம் 8 சதவீதம் ஆகும்.

இ-கிளர்க்ஸ் சர்வீசஸ்

இ-கிளர்க்ஸ் சர்வீசஸ்

இ-கிளர்க்ஸ் சர்வீசஸ் பங்குகளை 1,3753 ரூபாய்க்கு வாங்கினால் 10 சதவீதம் வரை உயர்ந்து 1,525 ரூபாய் வரை லாபம் அளிக்க வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் 1,300 ரூபா ஆகும்.

குறிப்பு

குறிப்பு

இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Karnataka election verdict: stock ideas that could offer up to 15% return

Karnataka election verdict: stock ideas that could offer up to 15% return
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X