#Market Live: சரிவில் மும்பை பங்குச்சந்தை.. சோனியா காந்தியின் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கிய போது காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளுக்கும் கிட்டத்தட்டச் சமமான தொகுதிகளில் முன்னிலை வகித்ததால் சென்செக்ஸ் மற்றும் நிப்டி என இரண்டும் பிளாட்டாகத் துவங்கியது.

 

பின்னர்ப் பாஜக 120-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கச் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு அதிகமாக உயர்ந்தது. ஆனால் பிற்பகல் 2 மணிக்கு ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்தால் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்ற நிலை உருவாகிய உடன் பங்கு சந்தைச் சரிவை நோக்கிச் சென்றது. காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணியைத் தற்போது இரண்டு கட்சிகளும் உறுதியும் செய்துள்ளனர்.

3.35PM: தற்போது பிஜேபி 106 இடத்திலும், காங்கிரஸ் 76 இடத்திலும், ஜேடிஎஸ் 38 இடத்திலும் வெற்றி வாய்ப்பை எட்டும் நிலையில் உள்ளது.

3.30PM: பிஜேபி வெற்றியை நம்பி காலையில் அதிகளவில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், காங்கிரஸ் கட்சியின் முடிவால் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 12.77 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 4.75 புள்ளிகள் சரிந்து 10,801.85 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

3.20PM: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது மட்டும் அல்லாமல், குமாரசாமி அவர்களுக்கு முதல்வர் பதவியை அளிக்கக் காங்கிரஸ் உயர்மட்ட குழு முடிவு செய்துள்ளதால் பிஜேபி ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

3.10PM: காலாண்டு முடிவுகள் மற்றும் தேர்தல் முடிவுகளால் கர்நாடக வங்கியின் பங்குகள் இன்று 4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

3:00PM: காங்கிரஸ் உடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தயார்: தேவ கவுடா

2:55PM: இன்று மாலை காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் பிறருடன் இணைந்து ஆளுநரிடம் ஆட்சி அமைக்க கோரிக்கை வைப்போம். குலாமநபி ஆசாத்

2:52PM: காங்கிரஸ் ஜேடிஎஸ்-ஐ ஆதரிக்க தயார், மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: சித்தராமையா

 

2:41PM: சென்செக்ஸ் நிலவரம்

#Market Live: சரிவில் மும்பை பங்குச்சந்தை.. சோனியா காந்தியின் அதிரடி..!

2:28PM: தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 7.20 புள்ளிகள் என 0.07 சதவீதம் சரிந்து 10,799.40 புள்ளிகளாக வரித்தகம் செய்யப்பட்டு வருகிறது.

2:26PM: மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 16.40 புள்ளிகள் என 0.05% சரிந்து 35,5040.314 புள்ளிகளாக சரிந்துள்ளது.

2.25PM: இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் காலை 400 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ், சோனியா காந்தியின் அறிவிப்பிற்குப் பிறகு 7 புள்ளிகள் சரிந்தது.

2.15PM: காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முதல்வர் பதவியை ஜடிஎஸ் கட்சியின் குமாரசாமி அவர்களுக்கு அழிப்பதாக அறிவித்து இருகட்சிகளின் கூட்டணியை உறுதி செய்துள்ளார்.

#Market Live: சரிவில் மும்பை பங்குச்சந்தை.. சோனியா காந்தியின் அதிரடி..!

2.10PM: வாக்கு எண்ணிக்கையில் காலையில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிஜேபி மதிய நேரத்தில் 104 இடங்களில் மட்டுமே முன்னணியாக இருந்தது. இதே தருவாயில் காங்கிரஸ் 75 வரையில் உயர்ந்தது.

2:00PM:

1:15PM: உலக முதலீட்டாலர்கள் "2019-ம் ஆண்டும் மோடி ஆட்சி" என்றும் மேலும் அடுத்தடுத்து வரும் மக்களவைத் தேர்தல்களில் கிராமப்புற பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக பல்வேறு ஊக்க விருப்பங்களை அரசு கருத்தில் கொள்ளலாம் என்று கருதுகின்றனர்.

1.00PM: தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும் போது கர்நாடக தேர்தலில் பிஜேபி கண்டிப்பாக 100 இடங்களில் வெற்றிபெறும் எனத் தெரிகிறது

12.50PM: ஆசிய சந்தையில் ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஜப்பான், தைவான் ஆகிய சந்தைகள் சரிரவில் இருக்கும் நிலையில், சீனா 0.57 சதவீதமும், மும்பை பங்குச்சந்தை 0.61 சதவீதமும் உயர்ந்துள்ளது.

12.45PM: அமெரிக்காவின் வட்டி உயர்த்தும் முடிவு ஜூன் மாதத்தையும் தாண்டி சென்றுள்ள நிலையில், இதன் சாதகமான சூழ்நிலையில் ஆசிய சந்தையில் தெரியவில்லை. ஆயினும் கர்நாடக தேர்தல் முடிவுகள் இந்திய சந்தையில் முதலீட்டு அளவுகள் கணிசமாக உயர்ந்துள்ளது.

12.30PM: கர்நாடகாவில் பிஜேபியின் வெற்றி 4 மாதங்களாக மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் ஏற்பட்டுள்ள மந்தமான வர்த்தகச் சூழ்நிலையைச் சீர் செய்யும் நம்பிக்கையை முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது என நாட்டின் முன்னணி முதலீட்டாளரான பொருஞ்சு வெளியாத் தனது டிவிட்டரில் தெரிவதுள்ளார்.

12.15PM: வேதாந்தா நிறுவனம் எலக்ட்ரோஸ்டீல் நிறுவனத்தைக் கைப்பற்ற CCI அமைப்பிடம் இருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது.

11.25AM: மாண்டியாவின் 7 தொகுதிகளிலும் ஜேடிஎஸ் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் ஹைதராபாத் கர்நாடகாவில் பிஜேபி முன்னிலை வகிக்கிறது.

11.15AM: கர்நாடக தேர்தலில் பிஜேபி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில், முதலீடு சந்தையில் தற்போது நிலவும் நிலையற்ற தன்மை நீங்கி நிலையான வர்த்தகப் பாதைக்குச் செல்லும் எனத் தெரிகிறது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்குக் குறுகிய கால லாபம் அதிகரிக்கும்.

11.00AM: மார்ச் காலாண்டு முடிவுகள் வெளியானதையொட்டி 52 வார உயர்வில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன பங்குகள். 1,504.95 ரூபாயில் துவங்கிய HUL பங்குகள் காலாண்டு முடிவுகள் எதிரொலியாக 2.54 சதவீதம் வரையில் உயர்ந்து 1,543.25 ரூபாய் என்ற நிலையை அடைந்துள்ளது.

10.50AM: 121 இடங்களில் பிஜேபி முன்னிலை. தொடர் உயர்வில் மும்பை பங்குச்சந்தை

10.40AM: காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகள் சேர்த்தாலும் பிஜேபி முன்னிலை வகிக்கும் இடங்களைப் பிடிக்க முடியாத நிலையில் தான் உள்ளது.

10.30AM: கர்நாடக தேர்தல் வாக்குக் கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில் சுமார் 100க்கும் அதிகமான இடங்களில் பிஜேபி முன்னிலை வகித்து வருகிறது. இது மத்தியில் ஆளும் கட்சியின் ஆதிக்கத்தைக் காட்டுகிறது என்பதால் முதலீட்டுச் சந்தையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

10:25AM: ஜேடிஎஸ் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தாலும் ஆட்சி அமைக்க முடியாத சூழல். சென்செக்ஸ் 420 புள்ளிகள் வரை உயர்வு.

10.10AM: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 67.62 ரூபாய்க்கு சரிவு. நாணய சந்தை துவக்கத்தில் 28 பைசா வீழ்ச்சி அடைந்து 67.79 ரூபாய் வரையில் வீழ்ச்சி அடைந்து 16 மாத சரிவை அடைந்தது.

10.05AM: சரிவில் இருந்து மீண்டது இன்போசிஸ். 0.36% உயர்ந்து 1,193 ரூபாய்க்கு இந்நிறுவன பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகிறது.

10.00AM: 350 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ், 92.15 புள்ளிகள் உயர்வில் நிஃப்டி.

கர்நாடக மாநில தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் பிஜேபி முன்னிலை வகித்து வரும் நிலையில் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்து வருகிறது.

9.45 மணியளவில் காங்கிரஸ் 71, பிஜேபி 103, ஜேடிஎஸ் 41, பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தும் எனப் பரவலான பேசப்பட்ட நிலையில் மோடியின் அதிரடி பிரச்சாரத்தின் மூலம் தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் படி பிஜேபி முன்னிலை வகித்து வருகிறது.

இன்றைய வர்த்தக உயர்வுடனே துவங்கி நிலையில் 9.50 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 241.13 புள்ளிகள் உயர்ந்து 35,797.84 புள்ளிகளை எட்டியுள்ளது, அதேபோல் நிஃப்டி குறியீடு 60.95 புள்ளிகள் உயர்ந்து 10,867.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மேலும் காலை வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ், மாருதி ஆகிய நிறுவனங்கள் சரிவில் இருக்கும்போது பவர்கிரிட், டாடா ஸ்டீல், யெஸ் வங்கி, எல் அண்ட் டி, எச்டிஎப்சி வங்கி ஆகியவை 1.5 சதவீதத்திற்கும் அதிமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex zooms nearly 200 points on Karnataka election trends

Sensex zooms nearly 200 points on Karnataka election trends - Tamil Goodreturns | 200 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ்.. ஆரம்பமே அட்டகாசம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X