கூவத்தூர் vs கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ குமாரசாமி கூட்டணி எவ்வளவு செலவு செய்யப்போகிறது?

Written By:
Subscribe to GoodReturns Tamil

கர்நாடகா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 104 இடங்களில் வெற்றி அடைந்தும் பாரதிய ஜனதா கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் ஆளுநரிடம் ஆட்சி அமைக்கக் கோரிக்கை வைத்த போது 6 நாட்கள் வரை கால அவகாசம் கேட்டுள்ளார்.

மறுபக்கம் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து குமாரசாமி முதல்வராகப் பதவி ஏற்பார் என்று அறிவித்துள்ள நிலையில் பாஜக காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ-க்களை 100 கோடி ரூபாய் வரை விலை பேசி வாங்க முயற்சிப்பதாகவும் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இச்சூசழலில் தங்களது எம்எல்ஏ-க்களை அவர்களது வீடுகளில் இருந்தால் பாஜக-வினர் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கிவிடும் என்ற நிலையில் காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏ-க்கள் மைசூர் செல்லும் வழியில் உள்ள ஈகல்டன் ரிசார்ட்-ல் காங்கிரஸ் சார்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்ற ஒரு சூழல் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பு வர சிறைக்குச் சென்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் எங்குத் திமுக அதிமுக எம்எல்ஏக்களை வாங்கி விடுமோ, ஓபிஎஸ் எம்எல்ஏ-க்களைத் தன் வசம் இழுத்துச் சென்று ஆட்சி அமைத்துவிடுவாரோ என்று பயந்து கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் ஆதிமுக எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டனர். அப்போது எம்எல்ஏ-க்களுக்கு ஒவ்வொரு நாளும் லட்சங்களைச் செலவு செய்தது சசிகலா தரப்பு.

இன்று அதே போன்ற ஒரு சூழலில் காங்கிரஸ் & ஜேடிஎஸ் கட்சிகள் 'ஈகல்டன் ரிசார்ட்'ல் தங்களது எம்எல்ஏ-க்களைக் கடத்தி வைத்துள்ள நிலையில் இந்த ரிசார்ட்டில் எவ்வளவு செலவு ஆகும் என்பதை இங்குப் பார்க்கலாம்.

அறை கட்டணங்கள்

மேக்மைடிரிப் & யாத்ரா இணையதளங்களில் உள்ள தகவலின் படி ஈகல்டன் ரிசார்ட்டில் 107 அறைகள் உள்ளன. குறைந்தது 1500 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை அறை கட்டணங்கள். காங்கிரஸ் 78 எம்எல்ஏ, ஜேடிஎஸ் 38 எம்எல்ஏ என்றாலும் 116 அறைகள் தேவை. ஒரு அறையில் இரண்டு நபர்கள் தங்க முடியும் என்பதால் சிக்கல் இல்லை.

இலவசங்கள்

7,000 ரூபாய் கட்டணத்தில் அறை புக் செய்யும் போது காலை டிபன் மற்றும் 24 மணி நேரமும் வைஃபை, குடிநீர் இலவசம்.

கோல்ஃப் மைதானம்

ஈகல்டன் ரிசார்ட் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது. மிகப் பெரிய கோல்ஃப் மைதானமும், பூங்காக்களும் அமைந்துள்ளன.

உணவு மற்றும் மது

உணவிற்கு என்று 6 வகையான ரெஸ்டாரண்ட்கள் ஈகல்டன் ரிசார்ட்டில் உள்ளன. மது பானங்களுக்காகவே கிங்ஃபிஷர் ஸ்விங் பார் உள்ளது. காபி ஷாப் ஒன்றும் உள்ளது.

பொழுதுபோக்கு

கூவத்தூரில் எம்எல் ஏ-க்கள் தங்க வைக்கப்பட்ட போது அவர்களின் பொழுதுபோக்கிற்காக இசை, நாடகம் பொன்ற கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெற்ற நிலையில் குமாரசாமி கூட்டணி என்ன செய்ய இருக்கிறது என்று தெரியவில்லை.

போக்குவரத்துச் செலவு

எம்எல்ஏ-க்களைச் சொகுசாகப் பேருந்தில் கொண்டு செல்ல வர மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக எப்படியும் செலவு ஆகும்.

உடைகள்

தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் திடீர் என்று கூவத்தூர் கொண்டு செல்லப்பட்டதால் ஆடைகளுக்காக மட்டும் 12 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டது. ஆனால் கர்நாடகாவில் என்ன நிலை என்று தெரியவில்லை.

உணவிற்கான செலவு

150 நபர்கள் மொத்தமாக ரிசார்ட்டில் உள்ளார்கள் என்றால் தலை ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2000 ரூபாய் என்றாலும் 6 நாட்களுக்கு 18,00,000 ரூபாய் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

கூவத்தூர் பிளாஷ்பாக்

எம்எல்ஏ-க்களை ‘கோல்டன் பே ரிசார்ட்டில்'தங்க வைக்கச் சசிகலா செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?

2 மடங்கு அதிக சொத்து..!

குமாரசாமி-யை விட அவரது மனைவிக்கு 2 மடங்கு அதிக சொத்து..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Congress & JDS MLA's in Eagleton Resort. How much Kumarasamy & congress going to spend?

Congress & JDS MLA's in Eagleton Resort. How much Kumarasamy & congress going to spend?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns