எஸ்பிஐ கல்வி கடன் பற்றி கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எஸ்பிஐ என்று அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி பல வகையிலான கல்வி கடனை அளிக்கிறது. கல்வி கடன் என்றால் இந்திய குடிமக்கள் தங்களது மேல் படிப்பை நிதி சிக்கல் இல்லாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படிப்பதற்காக அளிக்கப்படும் திட்டம் என்று sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்பிஐ கல்வி கடன் 5 வகையாக உள்ளது: ஸ்காலர் லோன், குலோப எட்-வாண்டேஜ், ஸ்டூடண்ட் லோன், ஸ்கிள் லோன் மற்றும் கல்வி கடன். கடன் பெற்று படிப்பை முடித்த ஒருவருடத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்த துவங்கினால் போது. பணத்தினை திருப்ப செலுத்தத் துவங்கியதில் இருந்து 15 வருடத்திற்குள் முழுமையாகச் செலுத்த வேண்டும்.

எஸ்பிஐ கல்வி கடன் வகைகள் பற்றி விளக்கமாக இங்கு பார்க்கலாம்.

ஸ்காலர் லோன்

ஸ்காலர் லோன்

இந்த கடன் திட்டமானது இந்தியாவில் உள்ள ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, ஏயிம்ஸ் மற்றும் பிற பிரீமியம் கல்வி நிறுவங்களில் பயிள இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். ஒருவரால் 30 லட்சம் ரூபாய் வரை இந்த கடன் திட்டம் கீழ் கடன் பெற முடியும்.

குலோபள் எட்-வாண்டேஜ்

குலோபள் எட்-வாண்டேஜ்

வெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முழு நேர படிக்கும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரை கடன் அளிக்கப்படுகிறது.

மாணவர் கடன்
 

மாணவர் கடன்

இந்தியா மற்றும் வெளிநாடு என இரண்டு இடங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் கீழ் கடன் அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் கீழ் இந்தியாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் 10 லட்சம் ரூபாய் வரையிலும், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் 20லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெற முடியும்.

ஸ்கிள் லோன்

ஸ்கிள் லோன்

இந்தியாவில் அரசு அனுமதி பெற்ற தொழில் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் சேர கடன் தேவைப்படும் போது ஸ்கிள் லோன் திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும்.

கல்வி கடனை டேக் - ஒவர் செய்தல்

கல்வி கடனை டேக் - ஒவர் செய்தல்

கல்வி கடனை டேக் - ஒவர் செய்தல் என்றால் ஒரு நிறுவனத்தில் கல்வி கடன் பெற்று இருக்கும் போது மாத தவணையை குறைப்பதற்காக எஸ்பிஐ வங்கிக்குக் கடனை மாற்றம் செய்ய கூடிய ஒரு திட்டமாகும்.

எஸ்பிஐ வங்கியில் கல்வி கடன் பெறும் போது தெரிந்துகொள்ள வேண்டியவை

 

கடன் தொகை:

கடன் தொகை:

இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.

சில நேரங்களில் இந்திய மாணவர்களுக்கு அவர்கள் நிலையைப் பொருத்து கல்வி கடன் வரம்பு உயரவும் வாய்ப்புள்ளது.

வெளிநாட்டில் படிக்க விம்பும் மாணவர்களுக்கு அதிக கடன் தேவை என்றால் எஸ்பிஐ-ன் குலோபள் எட்-வாண்டேஜ் திட்டத்தினை தேர்வு செய்வது நல்லது.

 

மானவர் கடன்

மானவர் கடன்

கடன் வரம்பு 1 ஆண்டு MCLR பரவலான வட்டி விகிதம் மீட்டமை காலம்
ரூ 7.5 லட்சம் வரை 8.15% 2.00% 10.15% 1 வருடம்
ரூ. 7.5 லட்சத்திற்கு மேல் 8.15% 2.75% 10.90% 1 வருடம்

 

சலுகை

சலுகை

மாணவிகள் என்றால் வட்டி விதத்தில் கூடுதலாக 0.50 சதவீதம் வரை சலுகை பெறலாம். கடன் தவணையினை சரியாகச் செலுத்திக்கொண்டு வரும் போது கூடுதலாக 1 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படுகிறது.

செக்யூரிட்டி

செக்யூரிட்டி

ரூ. 7.5 லட்சம் வரை கடன் பெறும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் கடனை பெறலாம். துணை பாதுகாப்பு அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதம் தேவையில்லை.

இதுவே 7.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெரும் போது பெற்றோர் / பாதுகாவலர் மட்டுமே இணை-கடனாளியாக இருக்க முடியும் மற்றும் உறுதியான இணைப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதாவது சொத்து ஆவணங்கள் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டியது வரும்.

ஒருவேலைத் திருமணமானவர் என்றால் பெற்றோர் அல்லது துணை அல்லது சட்டப்பூர்வமாக பெற்றோர்களாகக் கருதப்படுபவர்கள் தான் கடனுக்கு பொறுப்பு ஆகும்.

 

மார்ஜின் அல்லது விளிம்பு

மார்ஜின் அல்லது விளிம்பு

மார்ஜின் தொகை என்பது கடன் பெறுபவர்கள் செலுத்த வேண்டிய தொகை, மீத தொகை வங்கிகள் செலுத்தும்.

4 லட்சம் ரூபாய் வரை மார்ஜின் இல்லை, அதற்கு அதிகம் என்றால் இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் 5% மற்றும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15% மார்ஜின் தொகை செலுத்த வேண்டி வரும்.

 

கடனைத் திருப்பி அடைத்தல்

கடனைத் திருப்பி அடைத்தல்

இரண்டாம் முறையாகவும் கடன் பெற்று மேல் படிப்பை தொடரும் போது இரண்டாவது படிப்பை முடித்த 15 வருடத்தில் கடனை மொத்தமாக அடைக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI's Education Loan: Rate Of Interest, Security, Repayment And Other Details

SBI's Education Loan: Rate Of Interest, Security, Repayment And Other Details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X