5 வருடத்தில் 3 மடங்கு லாபம்.. மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கு யோகம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

எல்லோருக்கும் தங்களிடம் இருக்கும் பணத்தை பல மடங்கு உயர்த்த வேண்டும் என்பதே முதன்மை கனவு, அதிலும்குறுகிய காலத்தில் அடைய வேண்டும். உண்மையில் இது சாத்தியமா..?

சாத்தியமாகியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? சுமார் 23 முக்கியமான மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடுசெய்தவர்களுக்கு கடந்த 5 வருடத்தில் தங்களின் முதலீட்டுத் தொகைக்கு 3 மடங்கு வரையிலான லாபம் கிடைத்துள்ளது. இது யோகம் என்றும் சொல்லலாம், சரியான திட்டமிடல் என்றும் சொல்லலாம்.

மியூச்சவல் பண்ட் திட்டங்கள்

லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் மல்டி கேப் திட்டங்களை மட்டுமே தற்போது ஆய்விற்கு எடுத்துக்கொண்டுள்ள நிலையில், ஸ்மால்கேப், ELSS திட்டங்கள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

5 ஆண்டுக் காலம்

கடந்த 5 ஆண்டில் மட்டும் மிட்கேப் திட்டப் பிரிவில் சுமார் 25 திட்டத்தில் 17 திட்டங்கள் முதலீட்டுத் தொகையை 3 மடங்குவரையில் உயர்த்திக் காட்டியுள்ளது.

முதல் இடம்

இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது மிட்கேப் பிரிவை சேர்ந்த கனரா ரோபெகோ எமர்ஜிங் ஈக்விட்டி பண்ட்தான். இத்திட்டம் கடந்த 5 வருடத்தில் சுமார் 290 சதவீத லாபத்தை அளித்துள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், இத்திட்டத்தில் நீங்கள் 1 லட்சம் ரூபாயை மே 2013இல் முதலீடு செய்திருந்தால் ஏப்ரல் 2018இல்3,90,000 ரூபாய் கிடைத்திருக்கும். இதில் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் லாபம்.

 

லார்ஜ் கேப் திட்டம்

இப்பிரிவில் டாடா ஈக்விட்டி P/E பண்ட் திட்டம் சுமார் 207.28 சதவீத லாபத்தை அளித்துள்ளது. அதாவது 1 முதலீடுசெய்திருந்தால் 5 வருடத்தில் 3,07,284 ரூபாய் கிடைத்திருக்கும்.

மிட்கேப் திட்டங்கள்

முதல் இடத்தை கனரா ரோபெகோ திட்டம் பெற்ற நிலையில் அடுத்த இடத்தில் மீரே அசர்ட் எமர்ஜிங் ப்ளூசிப் 285.45 சதவீதம்
எல் அண்ட் டி மிட்கேப் பண்ட் 277.17 சதவீதம்
எடெல்வீஸ் மிட் கேப் பண்ட் 259.60 சதவீதம்
யூடிஐ மிட்கேப் பண்ட் 256.88 சதவீதம்
ஆதித்யா பிர்லா எஸ்எல் ஸ்மாரல் அண்ட் மிட்கேப் பண்ட் 252.10 சதவீதம்
பிரின்சிபெல் எமர்ஜிங் ப்ளூசிப் பண்ட் 246.03 சதவீதம்
ஹெச்டிஎப்சி மிட் கேப் ஆப்பர்டினுடீஸ் பண்ட் 241.56 சதவீதம்
சுந்தரம் மிட் கேப் பண்ட் 239.38 சதவீதம்
கோட்டாக் எமர்ஜிங் ஈக்விட்டி 239.35 சதவீதம்
ஐசிஐசிஐ ப்ரூ மிட்கேப் பண்ட் 234.27 சதவீத லாபத்தை அளித்துள்ளது.

பகுதி 2

மட்கேப் பிரிவில் 200 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை அள்ளித்தந்த திட்டங்கள் பட்டியில் இடம்பெற்றுள்ள பிறநிறுவனங்கள்.

எஸ்பிஐ மேக்னம் மிட்கேப் பண்ட் 230.42 சதவீதம்
DSPBR மிட்கேப் பண்ட் 227.99 சதவீதம்
பிராக்லின் இந்தியா ப்ரீமா பண்ட் 222.64 சதவீதம்
டாடா மிட் கேப் குரோத் பண்ட் 218.15 சதவீதம்
இன்வெஸ்கோ இந்தியா மிட்கேப் பண்ட் 206.72 சதவீதம்
கோட்டாக் மிட்கேப் 205.24 சதவீதம் லாபத்தை அளித்துள்ளது.

 

மல்டிகேப் திட்டங்கள்

ஆதித்யா பிர்லா எஸ்எல் ப்யூர் வேல்யூ பண்ட் 274.91 சதவீதம்
ஆதித்யா பிர்லா எஸ்எல் இந்தியா ஆப்பர்டிடூடிஸ் பண்ட் 240.27 சதவீதம்
எல் அண்ட் டி இந்தியா வேல்யூ பண்ட் 224.57 சதவீதம்
ரிலையன்ஸ் போகஸ்டு ஈக்விட்டி பண்ட் 211.16 சதவீதம்
இன்வெஸ்கோ இந்தியா மல்டிகேப் பண்ட் 209.30 சதவீதம்

பங்குச்சந்தை

இந்த 5 வருட காலத்தில் சென்செக்ஸ் 78 சதவீதமும், பிஎஸ்சி மிட்கேப் 166 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual fund schemes tripled investors money in 5 years

Mutual fund schemes tripled investors money in 5 years
Story first published: Thursday, May 17, 2018, 12:36 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns