சிஎஸ்கே வெற்றியால் ஐபிஎல் உலக சாதனை.. தோனி-ன்னா சும்மாவா..?

தூத்துக்குடி மக்களின் போராட்டத்தால் தமிழகம் முழவதும் கண்ணீரில் மிதக்கும் நிலையில் மறுபுறம் ஐபிஎல் போட்டிகள் கொண்டாட்டத்தில் மக்கள் மூழ்கியுள்ளது.

மே 22ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முதல் தகுதி போட்டியில் விளையாடினார், இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிச்சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கும் காரணத்தால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் உருவானது.

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

இப்போட்டியில் வழக்கம்போல் சிஎஸ்கே வெற்றிபெற்றாலும், மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியிலேயே போட்டியை வென்றது. சிஎஸ்கே அணிக்குச் சரிசமமாகச் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிதால் கடைசி ஓவர் வரையில் சுவாரஸ்யம் நீண்டது.

ஸ்டார் குழுமம்

ஸ்டார் குழுமம்

இந்த ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் குழுமம் இணையத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்து வருகிறது. அப்படிச் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டியும் ஆன்லைனில் வைவ் ஆக ஒளிப்பரப்புச் செய்யப்பட்டது.

 83 லட்சம் பேர்

83 லட்சம் பேர்

கிரிக்கெட் ரசிகர்களின் அதீத ஆர்வத்தால் இப்போட்டியை சுமார் 83 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

இதுல என்ன இருக்கிறது என்று கேட்காதீர்கள், லைவ் ஸ்ட்ரீம் வீடியோவை இதுவரை உலகில் அதிகம் பார்த்த வீடியோ பட்டியலில் இப்போட்டி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

 

மொபைல்

மொபைல்

இந்த 83 லட்சம் பேரில் 97 சதவீதம் பேர் மொபைல் வழியாகவே பார்த்துள்ளது. இது ஆன்லைன் உலகில் மிகப்பெரிய சாதனை, இந்தச் சாதனை இந்தியா செய்துள்ளது மகிழ்ச்சி.

லைவ்ஸ்ட்ரீம் வீடியோவில் வரும் விளம்பரங்களுக்கு டிவியில் காட்டப்படும் விளம்பரங்களை விடவும் அதிக வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அகாமாய்

இதுகுறித்து உலகின் முன்னணி கனெடென்ட் டெலிவரி நிறுவனமான அகாமாய் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான டாம் லெய்ங்டன் தனது டிவிட்டரில் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

இதோடு இந்தச் சாதனைக்கு மத்தியில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சில எதிர்ப்பும் உள்ளது.

 

பிரின்ட்

இதை விளம்பரப்படுத்தவும் உங்களுக்கு ஆன்லைன் மீடியா போதாது பிரின்ட் மீடியா தான் தேவை. இதுதான் பிரின்ட்-இன் சக்தி

வெட்கம்

இதுதான் நாம் எதிர்காலம் என்று சொல்கிறோமா..? வெட்கம்

இலவசம்

இதை இலவசமாக மக்களுக்கு அளித்து பாருங்கள், இந்த எண்ணிக்கை 2 மடங்கு உயரும்.

42 நாட்களுக்கு முன்பு

5.5 மில்லியன் எடுத்ததும் சிஎஸ்கே போட்டியில் தான்.

மட்டமான சேவை

ஹாட்ஸ்டார் அமெரிக்காவில் மிகவும் மோசமான வகையில் இயங்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+