வருமான வரி தாக்கல் செய்வதற்கான 7 மின்னணு படிவங்களும் வெளியானது.. எந்தப் படிவம் எதற்கு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரித் துறை சனிக்கிழமை 2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான 7 மின்னணு படிவங்களையும் பயன்பாட்டிற்கு அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மத்திய நேரடி வரி ஆணையம் 2018-2019 மதிப்பாண்டிற்கான புதிய ஐடிஆர் 1 படிவத்தினை 2018 ஏப்ரல் 5-ம் தேதி அறிமுகம் செய்தது. வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய 7 மின்னணு படிவங்களும் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.

எனவே 7 வகையான ஐடிஆர் படிவங்கள் பற்றியும் இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

ஐடிஆர்-1 சஹாஜ்

ஐடிஆர்-1 சஹாஜ்

மாத சம்பளம் மற்றும் முதலீடுகளின் மூலம் வரும் வட்டி வருவாய் பெறும் தனிநபர்கள் தங்களது வருமான வரியை ஐடிஆர்-1 சஹாஜ் மூலம் தாக்கல் செய்யலாம்.

 ஐடிஆர் 2

ஐடிஆர் 2

தனி நபர் மற்றும் வணிகம் செய்யாத இந்து கூட்டுக் குடும்பம் அல்லது தொழில்முறை வருமானம் பெறுபவர்கள் ஐடிஆர் 2 படிவம் மூலம் வரி தாக்கல் செய்யலாம்.

 ஐடிஆர் 3

ஐடிஆர் 3

வணிகம் ஒன்றில் தனிநபர்களாக மற்றும் இந்து கூட்டுக் குடும்பமாகக் கூட்டாளிகளாக உள்ளவர்கள் மற்றும் வணிகம் இல்லா பிற வழிகள் வருவாய் பெறுபவர்கள் அல்லது தொழில் முனைவோராக உள்ளவர்கள் ஐடிஆர் 3 -ன் கீழ் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.

ஐடிஆர் 4
 

ஐடிஆர் 4

சொந்தமாகப் பிஸ்னஸ் அல்லது தொழில் செய்து வரும் தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் ஐடிஆர் 4-ன் கீழ் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.

ஐடிஆர் 4எஸ் (சுகம்)

ஐடிஆர் 4எஸ் (சுகம்)

தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் வியாபாரம் மூலம் வருவாய் பெரும் போது ஐடிஆர் 4எஸ் (சுகம்) கீழ் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.

 ஐடிஆர் 5

ஐடிஆர் 5

நிறுவனங்கள், சங்கங்கள் போன்றவற்றை நடத்துபவர்கள் ஐடிஆர் 5-ன் கீழ் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.

 ஐடிஆர் 6

ஐடிஆர் 6

u/s 11-கீழ் வரி விலக்கு கோராத நிறுவனங்கள் வரி தாக்கல் செய்யக் கூடிய படிவம் ஐடிஆர் 6 ஆகும்.

 ஐடிஆர் 7

ஐடிஆர் 7

வருமான வரி சட்ட பிரிவு 139(4A) / 139(4B) / 139(4C) /
139(4D) இன் கீழ் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய உதவும் படிவம். ஆனால் மின்னணு முறைக்கு அனுமதியில்லை.

 அக்னாலெஜ்மெண்ட் அல்லது ஒப்புகை ஐடிஆர் -V

அக்னாலெஜ்மெண்ட் அல்லது ஒப்புகை ஐடிஆர் -V

ஐடிஆர் 1, ஐடிஆர் 2, ஐடிஆர் 3, ஐடிஆர் 4, ஐடிஆர் 5, ஐடிஆர் 6 போன்றவற்றுக்கு வருமான வரி தாக்கல் செய்யாதற்கான அக்னாலெஜ்மெண்ட் அல்லது ஒப்புகை ஐடிஆர் -V ஆகக் கிடைக்கும்.

 வருமான வரி தக்கல்

வருமான வரி தக்கல்

ஒவ்வொரு நிதி ஆண்டின் வருமான வரியும் நிதி ஆண்டு முடிவடைந்த உடன் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டும்.

 புதிய படிவங்கள்

புதிய படிவங்கள்

2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்யப் படிவங்களில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜிஎஸ்டி எண் மற்றும் சம்பள விடிவம் குறித்த விவரங்களை எல்லாம் குறிப்பிடுவது அவசியம் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 efiling income taxes are released: Central Board of Direct Taxes

7 efiling income taxes are released: Central Board of Direct Taxes
Story first published: Saturday, May 26, 2018, 14:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X