பழைய காராக இருந்தாலும் இதற்குச் சந்தையில் மவுசு அதிகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்றைய தலைமுறைக்குச் சொந்த வீடு ஒரு கனவாக இருந்த நிலையில் இன்றைய தலைமுறைக்குக் கனவாக இருப்பது கார் தான். இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் பட்டப்பட்டிபை படித்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் பெரும்பாலானோர் படித்து முடித்து 2 -3 வருடத்தில் மாதம் 20,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கத் துவங்குகின்றனர்.

 

இதனால் இன்றைய இளைஞர்கள் மத்தியில் கார் வாங்கும் எண்ணம் அதிகமாக உள்ளது.

கார்

கார்

முதல் கார் வாங்க திட்டமிடும் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய குழப்பம் என்னவென்றால், பழைய காரை வாங்கலாமா இல்லை நேரடியாகப் புதிய காரை வாங்கலாமா என்பது தான். புதிய கார் வாங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை, பணம் இருந்தால் போது புக் செய்த சில வாரங்களில் நம்முடைய கார் வந்துவிடும்.

பழைய கார்

பழைய கார்

இன்று முதல் காரை வாங்கும் பல ஆரம்பகட்டத்தில் குறைவான அளவிலேயே முதலீடு செய்யத் திட்டமிடுகின்றனர். குறைவான பட்ஜெட்டுக்கு அனைத்துச் சேவைகளையும் கொண்ட காரை வாங்குவது மிகவும் கடினம்.

ஆதலால் அவர்கள் பழைய கார் அதாவது பயன்படுத்தப்பட்ட காரை (Second handed car) வாங்க விரும்புகின்றனர்.

பிரச்சனை
 

பிரச்சனை

ஆனால் பழைய கார் வாங்கும் போது பலவற்றை நாம் கவனிக்க வேண்டியுள்ளது, அதில் குறிப்பாக வாங்கிய காரை அடுத்தச் சில வருடத்தில் திரும்ப விற்றால் நல்ல விலைக்குப் போகுமா என்பதில் துவங்கி வண்டியின் கண்டிஷன், காரின் பிராண்டு எனப் பலவற்றைப் பார்க்க வேண்டும்.

அதிகக் கார் விற்பனை

அதிகக் கார் விற்பனை

இந்தியாவில் 2015-16ஆம் நிதியாண்டில் சுமார் 32.8 லட்சம் புதிய கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இதே காலக்கட்டத்தில் 38 லட்சம் பழைய கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஓஎல்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சந்தையில் புதிய கார்களை விடவும் பழைய கார்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என்பது தெளிவாகியுள்ளது.

 விலை மாற்றம்..

விலை மாற்றம்..

புதிய கார்களை நீங்கள் ஷோரூம்-இல் டெலிவரி செய்த அடுத்த நொடி அதன் விலை 30 சதவீதம் குறைந்துவிடும். இதனால் சில வருடங்களே பயன்படுத்திய கார்களை நீங்கள் தாராளமாக மலிவான விலைக்கு வாங்க முடியும்.

15 கார்கள்

15 கார்கள்

கடந்த 2 வருடத்தில் இந்தியா முழுவதும் அதிகளவில் தேடிப்படித்து வாங்கப்படும் பழைய கார் மாடல்களை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

இப்பட்டியில் இடம்பெறும் கார்களுக்குச் சந்தையில் மவுசு மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஹேச்பேக்

ஹேச்பேக்

மாருதி சுசூகி ஷிப்டி

மாருதி சுசூகி ஆல்டோ 800

மாருதி சுசூகி வேகன் ஆர்

ஹூண்டாய் கிரான்ட் ஐ10

இண்டிகா விஸ்டா

ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் எலைய்ட் ஐ20

செவ்ரோலெட் பீட்

டட்சன் ரெடிகோ

போக்ஸ்வேகன் போலோ

செடான்

செடான்

மாருதி சுசூகி டிசையர்

ஹோண்டா சிட்டி

ஹூண்டாய் அக்சென்ட்

போர்டு பிகோ

ஹோண்டா அமேஸ்

டோயோட்டோ ஈடியோஸ்

எஸ்யூவி மற்றும் எம்யூவி

எஸ்யூவி மற்றும் எம்யூவி

மஹிந்திரா பொலிரோ

மாருதி சுசூகி விட்டாரா ப்ரீசா

டோயோட்டோ இன்னோவா

மஹிந்திரா ஸ்கார்பியோ

மாருதி சுசூகி யெர்டிகா

போர்டு ஈகோஸ்போர்ட்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

மக்கள் விருப்பம்

மக்கள் விருப்பம்

பழைய கார்களை வாங்கும் மக்களின் விருப்பத்தின் அடிப்படியிலேயே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், மேல் குறிப்பிட்ட கார்களை நீங்கள் வாங்கினாலும் சரி, விற்பனை செய்தாலும் சரி இதற்குச் சந்தையில் மவுசு அதிகம் இருப்பதை உணர்ந்து விலையைத் தீர்மானிக்கவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 15 used car models that people are buying most

Top 15 used car models that people are buying most
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X