சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுடன் போட்டி போட்டு சியோமி, வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சேவை அளிக்கும் திட்டத்தில் டிவி சந்தைக்குள் நுழைந்தது சியோமி.

ஆதிக்கம்
டிவி விற்பனை சந்தையில் தற்போது சாம்சங், சோனி ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்து வரும் நிலையில், இச்சந்தையில் தனது ஆஸ்தான பார்மூலாவை அதாவது குறைவான விலையில் தரமான பொருட்கள் என்பதை மையமாக வைத்துள்ள சியோமி இறக்கியது.

இறக்குமதி வரி
இந்திய டிவி சந்தையில் சியோமி அறிமுகம் செய்துள்ள 3 மி டிவிகள், மக்கள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் டிவிகள் மீதான வரியை 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தியது.

விலை உயர்வு
இதனால் சியோமி அறிமுகம் செய்த 55இன்ச் ஸ்மார்ட் டிவி விலை 5,000 ரூபாய் அதிகரித்து 44,999 ரூபாயாகத் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய முடிவு
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கத் தற்போது சியோமி இந்தியாவிலேயே டிவி தயாரிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. டிவிகளை இறக்குமதி செய்வதைத் தவிர்த்து பாக்ஸ்கான் நிறுவனத்தின் வாயிலாக இந்தியாவிலேயே டிவி தயாரிப்பில் இறங்க சியோமி முடிவு செய்துள்ளது.

சியோமி - பாக்ஸ்கான்
இதற்கான பேச்சுவார்த்தையில் சியோமி மற்றும் பாக்ஸ்கான் கடைசிக் கட்டத்தில் உள்ள நிலையில் சியோமி டிவி வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் தயாரிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.

குறைவான லாபம்
சியோமி இந்தியாவில் டிவியைத் தயாரிக்க முக்கியக் காரணம், இறக்குமதி வரி உயர்வால் டிவி விற்பனையில் இந்நிறுவனத்திற்கு அதிகளவிலான லாபம் குறைந்துள்ளது.

சோனி
ஏற்கனவே சோனி இந்தியாவில் டிவி தயாரிக்கத் துவங்கியுள்ள நிலையில் தற்போது சியோமியும் இறங்கியுள்ளது. சியோமியின் மேக் இன் இந்தியா டிவிகள் தீபாவளிக்குச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.

தீபாவளி
தீபாவளிக்கு 55 இன்ச் சியோமி டிவி 40,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.