மத்திய அரசு எல்பிஜி மற்றும் பிற பொது விநியோக சேவைகளுக்கான மானியங்களை நேரடியாகப் பயனரின் வங்கி கணக்குகளில் அளிப்பதினால் 2018-ம் ஆண்டு மட்டும் 32,984 கோடி ரூபாயினைச் சேமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அது மட்டுமில்லாமல் கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017-2018 நிதி ஆண்டில் நேரடி மானியம் விநியோகிப்பது என்பது 2.5 மடங்கு அதிகரித்து 1.91 லட்சம் கோடியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். நேரடி மானியம் விநியோகிக்கும் முறை தொடர்ந்ததில் இருந்து மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 984 கோடி ரூபாய் என 58 சதவீதம் மிச்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நேரடி மானியம் விநியோகம்
2013-2014 நிதி ஆண்டு முதல் 2017-2018 நிதி ஆண்டு வரை 3.7 லட்சம் கோடி ரூபாய் நேரடி மானியமாகப் பயனர்களுக்கு வங்கி கணக்கு மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மொத்த சேமிப்பு
நேரடி மானியம் அறிமுகம் செய்ததில் இருந்து 2018 நிதி ஆண்டு வரை மத்திய அரசுக்கு 90,013 கோடி ரூபாய் மத்திய அரசு சேமித்துள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.

திட்ட வாரியான தரவு
2017-2018 நிதி ஆண்டில் நேரடி மானியம் மூலம் போலி பயனர்களை நீக்கியதால் 32,984 கோடி ரூபாய் மத்திய அரசு சேமித்துள்ளது. அதில் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் முறையில் 15,708 கோடி ரூபாயும், எல்பிஜி மானிய திட்டத்தில் 12,506 கோடி ரூபாயும், வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 4,332 கோடி ரூபாயும் மத்திய அரசுக்குச் சேமிப்பாகக் கிடைத்துள்ளது.

2017-ம் ஆண்டு
நேரடி மானிய திட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு 2017-ம் ஆண்டு 20,855 கோடி ரூபாய்ச் சேமித்தது இருந்தது.

ஆதார்
பொது விநியோக சேவைகளில் ஆதார் இணைப்பினை கட்டாயமாக்கப்பட்ட நிலையில் தான் மத்திய அரசால் போலிகளைக் கண்டறிந்து குறைத்து மானியங்களை நேரடியாகப் பயனர்களின் வங்கி கணக்கிலும் அளிக்க முடிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.