ராயல் என்ஃபீல்டின் டிரேடு மார்க் விரைவில் மாறி எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் திட்டத்தில் உள்ளது எனத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
உலகம் நாடுகள் முழுவதிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கிளாசிக் 350 மோட்டார் சைக்கிளுக்குப் பேர் போன ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் எலக்ட்ரிக் வாகனம் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை தகவல் அளித்துள்ளார்.

ஆய்வு
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைவரான ருத்ரதேஜ் சிங் தூய்மையான மோட்டார்சைக்கிள்களைத் தயாரிப்பதற்காக எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு குறித்து இங்கிலாந்து தொழில்நுட்ப மையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான முயற்சி
உலகின் பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் வித்தியாசமாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இன்னும் நிறையக் கற்றுக்கொண்டு வருவதாகவும் கூறினார்.

சென்னை
இங்கிலாந்து மட்டும் இல்லாமல் சென்னையில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஆலையிலும் எலக்ட்ரிக் வாகன உருவாக்கம் குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது எனக் கூறப்படுகிறது.

போட்டி நிறுவனங்கள்
இந்தியாவில் இரண்டு சக்கர வாகன சந்தையில் மிகப் பெரிய மாற்றங்களை நிகழ்த்திய ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ லிமிடெட், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஹோண்டா மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் இந்தியா நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறன. சில நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் தங்களது முதலீடுகளையும் செய்துள்ளனர்.

மாசு கட்டுப்பாட்டு விதிகள்
வரும் ஆண்டுகளில் வர இருக்கும் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்றவாறு ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் மாற்றங்களைச் செய்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்களைக் கட்டமைப்பது தேவைப்படும் போது உதவும் என்றும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு உதவும் என்றும் இதற்காகச் சிறிய குழு இயங்கி வருகிறது என்று மட்டும் தற்போது தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

புதிய அவதாரம் எடுக்கும் தினேஷ் கார்த்திக்!
சென்னை பையன்.. தோனிக்கு போட்டி.. விடா முயற்சி.. புதிய அவதாரம் எடுக்கும் தினேஷ் கார்த்திக்!

அசராத அனில் அகர்வால்..
அசராத அனில் அகர்வால்.. அடுத்த அதிரடி திட்டத்தில் வேதாந்தா குழுமம்!
கோவையில் முதல்முறையாக டூ வீலருக்கு டிரைவர்!
கோவையில் முதல்முறையாக டூ வீலருக்கு டிரைவர்