சேவை கட்டண பெயரில் வங்கி வசூலிக்கும் பணத்தை காப்பாற்ற 12வழிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில் அவர்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை வழங்கி வருகின்றன. எனினும் இந்த சேவைகள் இனிமேலும் இலவசமாகத் தொடருமா என்பது சந்தேகமே. ஒருவேளை இந்த சேவைகளை இலவசமாக தொடர்ந்தாலும் அதற்கு மத்திய அரசு விதிக்கும் வரியை வங்கிகள் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சேவைகளுக்கான வரியாக பல ஆயிரம் கோடியை வங்கிகள் செலுத்த வேண்டிய நிலை வரலாம். வருமான வரித் துறையின் கோரிக்கை உறுதிசெய்யப்பட்டால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் பல்வேறு இலவச சேவைகளுக்கு எதிர்காலத்தில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

எனவே நாங்கள் இங்கே உங்களுக்கு உதவும் நோக்கில், வங்கிக்கு மேலும் பணம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டிய 12 எளிய வழிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

ஏ டி எம் ஐ புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும்

ஏ டி எம் ஐ புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும்

காரணம்: பல வங்கிகள் தங்களுடைய சொந்த ஏடிஎம்களில் கூட ஒரு மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளை மட்டுமே அனுமதிக்கின்றன. ஒரு வேலை உங்களால் பணம் இல்லாமல் சமாளிக்க இயலாது எனில், ஏ டி எம் இல் இருந்து அதிக பணத்தை எடுத்து விடுங்கள். இது ஏ டி எம் பரிவர்த்தனை கட்டணத்தை குறைக்க உதவும்.

உங்களுக்கான சேமிப்பு: ஒவ்வொரு முறை பணத்தை திருப்ப எடுக்கும் பரிவார்த்தனைகளுக்கும் ரூ 10 முதல் 20 வரை சேமிக்க இயலும். நிதி அல்லாத பரிமாற்றங்களுக்கு ரூ 5 முதல் 8.50 வரை சேமிக்க இயலும்.

 

காசோலைகளைகளுக்கு பதில் நெட்பேங்கிங்கிற்கு மாற்றவும்

காசோலைகளைகளுக்கு பதில் நெட்பேங்கிங்கிற்கு மாற்றவும்

காரணம்: வங்கிகள் தாங்களுக்கு வழங்கும் ஒவ்வொரு கூடுதல் காசோலைகளுக்கும் கட்டணம் வசூலிக்கின்றன. எனவே இதைடீ தவிர்க்க இலவசமாகக் கிடைக்கும் நெட்பேங் மூலம் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடவும்.

உங்களுக்கான சேமிப்பு: வங்கி காசோலை புத்தங்களை பொறுத்தது ரூ 20 முதல் 150 வரை சேமியுங்கள்.

 

கிரெடிட் கார்டு பில்களை உரிய காலத்தில் செலுத்தவும்

கிரெடிட் கார்டு பில்களை உரிய காலத்தில் செலுத்தவும்

காரணம்: கிரெடிட் கார்ட் நிலுவைத் தொகைகளை அதிக வட்டி விதிக்கப்படுகின்றது.

உங்களுக்கான சேமிப்பு: நிலுவை தொகைக்கு வட்டியாக ஆண்டுக்கு 39 முதல் 42 சதவீதம் விதிக்கப்படுவதால் இதை நீங்கள் சேமிக்கலாம் மூன்று நாட்கள் தாமததத்திற்கு 750 ரூபாய் வரை தாமதக் கட்டணம் விதிக்கப்படுகின்றது. அதையும் நீங்கள் சேமிக்க இயலும்.

 

கார்டு பில்களுக்கு ஆட்டோ டெபிட் வழியை தேர்ந்தேடுங்கள்

கார்டு பில்களுக்கு ஆட்டோ டெபிட் வழியை தேர்ந்தேடுங்கள்

காரணம்: கிரெடிட் கார்ட் பில்களை உரிய காலத்தில் செலுத்த ஆட்டோ டெபிட் வழியைத் தேர்ந்தெடுத்து மொத்த பில் தொகையில் சுமார் 5 சதவீதத்தை காட்டுமாறு வழி செய்திடுங்கள். இது தாமத கட்டணத்தை தவிர்க்க உதவும்.

உங்களுக்கான சேமிப்பு: செலுத்தப்படாத நிலுவைத் தொகையின் மீது விதிக்கப்படும் 39 முதல் 42 சதவீத கட்டணத்தை உங்களால் சேமிக்க இயலும்.

 

பில் பே சேவைகளுக்கு பதிவு செய்திடுங்கள்

பில் பே சேவைகளுக்கு பதிவு செய்திடுங்கள்

காரணம்: பலவேறு சேவை நிறுவனங்கள், தங்கள் வழங்கும் சேவைக்கு பல்வேறு கடடனங்களை விதிக்கின்றன. அத்தகைய கட்டணங்களை தாமதமாக செலுத்தும் பொழுது அதற்கு தாமதக் கடடணம் விதிக்கப்படுகின்றது. உங்கள் வங்கிகள் வழங்கும் பில் பே வசதியில் இத்தகைய கட்டணத்தை செலுத்த ஒரு நிரந்தர அறிவுறுத்தல்களை நிறுவுங்கள்.

உங்களுக்கான சேமிப்பு: சேவை நிறுவனங்கலைப் பொறுத்து ரூ 40 முதல் ரூ .100 வரையிலான அபராதங்களைத் தவிர்த்திடுங்கள்.

 

மின்னஞ்சல் வழியே பிரதி அறிக்கைகளை பெற்றிடுங்கள்.

மின்னஞ்சல் வழியே பிரதி அறிக்கைகளை பெற்றிடுங்கள்.

காரணம்: வங்கிகள் இயற்பியல் வங்கி கணக்கு அறிக்கைகள் அல்லது பாஸ் புத்தகங்களை வழங்க கட்டணத்தை வசூலிக்கின்றன.

உங்களுக்கான சேமிப்பு: ரூ. 100

 

வங்கிக் கிளைகளில் பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும்

வங்கிக் கிளைகளில் பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும்

காரணம்: வங்கிகள் ஒரு மாதத்தில் தங்களுடைய கிளைகளில் 3 முதல் 4 இலவச பண பரிமாற்றங்களை அனுமதிக்கின்றன.

உங்களுக்கான சேமிப்பு: ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ 50 முதல் 150 வரை சேமிக்க இயலும்.

 

எல்லா நேரங்களிலும் குறைந்தபட்ச இருப்பு தொகையை வாங்கிக் கணக்கில் பராமரிக்கவும்

எல்லா நேரங்களிலும் குறைந்தபட்ச இருப்பு தொகையை வாங்கிக் கணக்கில் பராமரிக்கவும்

காரணம்: தேவையான குறைந்தபட்ச இருப்பு தொகை வாங்கிக் கணக்கில் இல்லாத பொழுது, அந்த கணக்கிற்கு வங்கிகள் பராமரிப்பு கட்டணங்களை விதிக்கின்றன.

உங்களுக்கான சேமிப்பு: ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ 10 முதல் 600 வரை உங்களால் சேமிக்க இயலும்.

 

போதுமான இருப்புத் தொகை இல்லாதபோது காசோலைகளை யாருக்கும் கொடுக்க வேண்டாம்

போதுமான இருப்புத் தொகை இல்லாதபோது காசோலைகளை யாருக்கும் கொடுக்க வேண்டாம்

காரணம்: காசோலைகளுக்கு ஈடான பணம் வங்கிக் கணக்கில் இல்லாத பொழுது அதற்குரிய அபராத கட்டணம் விதிக்கப்படுவதுடன், இது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு அந்த வாடிக்கையாளரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்களுக்கான சேமிப்பு: ஒரு காசோலைக்கு ரூ 500 முதல் 750 வரை உங்களால் சேமிக்க இயலும்.

 

ஆன்லைனைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வழிமுறைகளை நிறுத்தவும்

ஆன்லைனைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வழிமுறைகளை நிறுத்தவும்

காரணம்: ஒரு சில வங்கிகள் நீங்கள் வழங்கிய காசோலைகளை நிறுத்த நீங்களே உத்தரவிடும் பொழுது அதற்கு கட்டணம் வசுலிக்கின்றனர். இதைத் தவிர்க்க ஆன்லைனை பயன்படுத்தி காசோலைகளை நிறுத்தும் உத்தரவை நீங்கள் வழங்கலாம்.

உங்களுக்கான சேமிப்பு: ரூ. 100 முதல் 200.

 

உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணத்தை எடுக்காதீர்கள்

உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணத்தை எடுக்காதீர்கள்

காரணம்: வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய வட்டியைத் தவிர்த்து கூடுதலாக வங்கிகள் பரிவர்த்தனை கட்டணத்தை வசுலிக்கின்றனர்.

உங்களுக்கான சேமிப்பு: நீங்கள் எடுத்த பணத்தில் 2.5 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் ரூ 300 முதல் 500 வரை.

 

கடன் வரம்பை மீறாதீர்கள்

கடன் வரம்பை மீறாதீர்கள்

காரணம்: உங்களுடைய கடன் அட்டை பயன்பாடு, அதற்குரிய வரம்பை மீறுகிறது என்றால், அட்டை வழங்கிய நிறுவனம் அதற்குரிய கட்டணத்தை விதிக்கும்.

உங்களுக்கான சேமிப்பு: வரம்பை மீறிய செலவில் 2.5 சதவீதம் அல்லது ரூ 500.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

12 ways to avoid paying more for bank services

12 ways to avoid paying more for bank services - Tamil Goodreturns | சேவை கட்டண பெயரில் வங்கி வசூலிக்கும் பணத்தை காப்பாற்ற 12வழிகள்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, June 10, 2018, 10:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X