மோடி அரசின் 4 வருட ஆட்சியை பஞ்சராக்கிய பா சிதம்பரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னாள் நிதி அமைச்சரான பா சிதம்பரம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஏற்றுமதி, தனியார் முதலீடுகள் மற்றும் தனியார் நுகர்வு போன்றவை சரிந்துள்ளதால் இந்திய பொருளாதாரமே பஞ்சராக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பண மதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி மாற்றத்தினால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் மோசம் அடைந்துள்ளது மட்டும் இல்லாமல் மக்களிடம் வெறுப்பினையும் சம்பாதித்துள்ளதாகச் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை சர்வே
 

ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை சர்வே

2018 மே மாதம் வெளியான ஆர்பிஐ-ன் நுகர்வோர் நம்பிக்கை சர்வேயில் 48 சதவீதத்தினர் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த ஒரு ஆண்டில் மோசம் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டு இருந்ததைச் சுட்டிக்கட்டியுள்ளார். இந்தச் சர்வே மிகவும் பின்தங்கிய பகுதிகளில் எல்லாம் எடுக்கவில்லை, ஒருவேலை நடைபெற்று இருந்தால் 48 சதவீதம் என்பது மேலும் சரிந்து இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய உற்பத்தி விலை மற்றும் எம்எஸ்பி

விவசாய உற்பத்தி விலை மற்றும் எம்எஸ்பி

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கான மதிப்புகள் சர்ந்து விலை வாசிகள் ஏறி இருப்பதே அவர்கள் சாலையில் வந்து போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சில விவசாயப் பொருட்களுக்கு மட்டும் எம்எஸ்பி கீழ் விலை உயர்வு அளிப்பதால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அவர்களது வருவாயினை இரட்டிப்பாக்க எல்லாம் முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு மோடி ஆட்சியில் உயர்ந்துள்ள நிலையில் மக்களிடம் கோவம் அதிகரித்துள்ளதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள இந்த விலை உஅர்வுக்கு எந்த ஒரு காரணமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்பின்மை
 

வேலை வாய்ப்பின்மை

இந்தியாவில் வேலை வாய்ப்பினை பெரும் அளவில் அதிகரித்துள்ளதாகவும் சில ஆயிரங்களில் மட்டுமே வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதை சமீபத்திய தரவுகள் காண்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அச்சே தின் மூலம் ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பினை உருவாக்கி அளிப்பதாக உறுதி குறி மக்களை ஏமாற்றியுள்ளார். இது வரை யாரும் கூறாத பக்கோடா விற்பனை செய்வதையும் வேலை வாய்ப்பு என்று மோடி கூறியதையும் சாடியுள்ளார்.

பஞ்சரான இந்திய பொருளாதாரம்

பஞ்சரான இந்திய பொருளாதாரம்

இந்தியாவின் நான்கு முக்கிய டயர்களான ஏற்றுமதி, தனியார் முதலீடுகள், முதலீடுகள் உருவாக்குதல் மற்றும் தனியார் நுகர்வு போன்றவற்றினை மோடி அரசு பல்வேறு வகையில் பஞ்சர் ஆக்கியுள்ளதாகவும் பா சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பண மதிப்பு நீக்கம்

பண மதிப்பு நீக்கம்

பண மதிப்பிற்கு முன்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்த நிலையில் து 2017-2018 நிதி ஆண்டில் 6.7 சதவீதமாகச் சரிந்துள்ளது. தமிழக அரசு 50,000 சிறு குறு நிறுவனங்கள் 2017-2018 நிதி ஆண்டில் மூடப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மட்டும் 5,00,000 லட்சம் நபர்கள் தங்களது வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர். திருப்பூரில் ஆண்டுக்கு 50,0000 கோடி ரூபாய் வருவாய் ஏற்றுமதி மூலம் கிடைத்து வந்துள்ள நிலையில் அது 2017-2018 நிதி ஆண்டில் 36,000 கோடி ரூபாய் ஆகச் சரிந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு ஜிஎஸ்டி ஆர் 2 மற்றும் ஜிஎஸ்டிஆர் 3 படிவங்களில் இன்னும் குழப்பம், இன்று வரை ஜிஎஸ்டி தக்கல் இணையதளம் சரியாக இயங்காதது, ஜிஎஸ்டி ரீஃபண்டு அளிக்கப்படாதது போன்றவற்றால் வணிகங்கள் மிகப் பெரிய அளவில் பாதிப்பினை சந்தித்துள்ளன.

 வாரா கடன்

வாரா கடன்

பாஜக ஆட்சிக்கு வரும் போது 2,63,000 கோடியாக இருந்த வாரா கடன் 10,30,000 கோடி ரூபாயாகக் கடந்த 4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. வங்கிகள் பெரும் மதிப்பில் கடன் அளிக்கவே பயப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் கிரெடிட் மதிப்பு 5.6, 2.7, -1.9 மற்றும் 0.7 சதவீதமாக உள்ளது. வங்கிகள் ஒழுங்குமுறை ஆணையம் முழுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது. அரசால் வங்கிகளுக்கு மறு மூலதனம் அளித்தாலும் சரிசெய்ய முடியாத சிக்கல் உருவாகியுள்ளது.

 பணவீக்கம்

பணவீக்கம்

ஆரிபிஐ ரெப்போ விகிதத்தினை அன்மையில் உயர்த்தியுள்ள நிலையில் பணவீக்கமும் மிகப் பெரிய அளவில் உயர வாய்ப்புள்ளது. வட்டி விகிதங்கள் நுகர்வோருக்கும், உற்பத்தியாளர்களுக்கு மிகப் பெரிய தக்கத்தினை ஏற்படுத்தும்.

 சமுக நல திட்டங்கள்

சமுக நல திட்டங்கள்

சமுக நல திட்டங்களை அரசு புறக்கணித்து வருகிறது, மருத்துவக் காப்பீடு திட்டம் மிகப் பெரிய ஏமாற்று வேலை, உணவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை, பயிற் காப்பீடு திட்டத்தில் 30 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே காப்பீடு அளிக்கப்படுகிறது. அதுவும் முறையாகச் செயல்படுவதில்லை என்று மோடி அரசு 4 வருடப் பொருளாதாரத்தினைப் பா சிதம்பரம் கேள்விக்குள் ஆக்கியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

P Chidambaram Punctured Modi GOVT's 4 yrs Economic Policies

P Chidambaram Punctured Modi GOVT's 4 yrs Economic Policies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X