‘தொழிற்சாலைகள் வளரும் நாடுகளின் தெய்வம்’ வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆதரவாக டிவிட் போட்ட பாபா ராம்தேவ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்ச்சைக்குரிய யோகா ஆசிரியர், காவி உடை அணிந்த பிஸ்னஸ் மேன் எனப் பாபா ராம்தேவ்க்கு பல முகங்கள் உண்டு. தமிழகத்தின் தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் பெரும் அளவில் திரண்டு ஆலையினை மூடியுள்ள நிலையில் இது வெளிநாட்டு நிறுவனங்களின் சதி என்று வேதாந்தா குழுமத்தினை ஆதரித்து டிவிட் போட்டுள்ளார்.

 

டிவிட் 1

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் மற்றும் அவரது மனைவி உடன் பாபா ராம்தேவ் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் பாபா ராம்தேவ் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் ‘தேசத்தைக் கட்டமைக்கும் செயலில் லட்ச கணக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதாரச் செழிப்புக்கான இவரது பங்களிப்பிற்குத் தலைவணங்குகிறேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

டிவிட் 2

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பாபா ராம்தேவ் "சர்வதேச சதிகாரர்கள் இந்தியாவின் தெற்கில் உள்ள வேதாந்தாவின் ஆலை ஒன்றில் அப்பாவி உள்ளூர் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். வளரும் நாடுகளுக்குத் தொழிற்சாலைகள் எல்லாம் கோயில்கள்:. அவர்களை அதனை மூட கூடாது" என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 சர்ச்சை
 

சர்ச்சை

பாபா ராம்தேவ்-ன் டிவிட்டர் பதிவில் காற்று, நிலம், நீர் மாசு போன்ற காரணங்களா தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காதது குறித்தும், காவல் துறையினர் 13 நபர்களைக் கொன்றது குறித்தும் எதுவும் குறிப்பிடவில்லை. அது மட்டும் இல்லாமல் அவரது பதிவில் தூத்துக்குடி என்ற வார்த்தையே இல்லை. இந்தியாவின் தெற்கு பகுதி என்று மட்டுமே உள்ளது.

தமிழ் நாட்டு மக்கள்

தமிழ் நாட்டு மக்கள்

தமிழ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மக்கள் ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தி வரும் மாசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

தூத்துக்குடி போராட்டம்

தூத்துக்குடி போராட்டம்

2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் மிகத் தீவிரமான போராட்டங்களில் இறங்கி 99 நாட்கள் அமைதியாக நடைபெற்ற நிலையில் காவல் துறையினரை ஏவி மிகப் பெரிய கலவரம் என்ற நிலைக்குச் சென்றது. இந்தப் போராட்டத்தில் இறுதியில் தொழிற்சாலையினை இழுத்து மூட தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தாலும் அது வீரியமாக இல்லை. எளிதாக உடைத்து விட்டு ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

போராட்டத்தின் போது காவல் துறையினை நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்து அந்த 13 நபர்களின் தியாகம் என்னவென்று இந்தப் பாபா ராம்தேவ் போன்ற காவி பிஸ்னஸ் மேன்களுக்கு எங்குத் தெரியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

'Industries Are The Temples Of Development For The Nation' Ramdev Tweeted In Support Of Sterlite

'Industries Are The Temples Of Development For The Nation' Ramdev Tweeted In Support Of Sterlite
Story first published: Tuesday, June 26, 2018, 19:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X