165 நாட்களில் 52 நாடுகள் சென்ற மோடி.. மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்ற 48 மாதங்களில் 41 வெளிநாட்டுப் பயணங்களில் 52 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளதாகவும், இதற்காக 355 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 165 நாட்கள் வெளிநாடுகளில் இவர் இருந்ததும் தெரியவந்துள்ளது.

 

ஆர்டிஐ ஆர்வலரான பீமப்பா கதாத் என்பவர் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 ஆண்டுகளில் சென்ற வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அதற்கான செலவு குறித்துக் கேட்ட போது பிரதமர் அலுவலகம் இந்தப் பதிலினை அளித்துள்ளது.

அதிகமாக செலவு செய்யப்பட்ட வெளிநாட்டுப் பயணம்

அதிகமாக செலவு செய்யப்பட்ட வெளிநாட்டுப் பயணம்

பிரதமர் மோடி அவர்கள் 52 நாடுகளுக்கு 41 பயணங்கள் சென்றுள்ள நிலையில் அதிகபட்சமாகப் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு ஏப்ரல் 9 முதல் 15 வரை 2015-ம் ஆண்டுச் சென்ற போது அதிகபட்சமாக 31,25,78,000 ரூபாய் செலவாகியுள்ளது.

குறைவாக செலவு செய்யப்பட்ட வெளிநாட்டு பயணம்

குறைவாக செலவு செய்யப்பட்ட வெளிநாட்டு பயணம்

அதே நேரம் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் பூட்டானிற்குச் சென்று வந்த போது குறைந்தபட்சமாக 2,45,27,465 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு பயணங்கள்

உள்நாட்டு பயணங்கள்

மேலும் ஆர்டிஐ கேள்வியில் பிரதமர் மோடி அவர்கள் சென்ற உள்நாட்டுப் பயணங்கள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்த கேள்விக்குப் பதிலைப் பிரதமர் அலுவலகம் அளிக்கவில்லை.

 செலவை பற்றி தான் கேட்டேன், பாதுகாப்பு அம்சங்கள் அல்ல
 

செலவை பற்றி தான் கேட்டேன், பாதுகாப்பு அம்சங்கள் அல்ல

பிரதமர் அலுவலகத்துடன் நான் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கேட்கவில்லை. எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்று தான் கேட்டேன். அதற்கு அவர்கள் பதில் அளிக்காததின் காரணங்கள் தெரியவில்லை என்று பீமப்பா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?

வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?

பிரதமர் மோடி அவர்கள் அதிகமாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வது விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில் ஒரு ஆர்வத்தில் தான் பிரதமர் அலுவலகத்திடம் இந்த ஆர்டிஐ கேள்வியைக் கேட்டதாகவும், அரசு மோடி அவர்களின் பயணத்தால் ஏற்பட்ட நன்மைகளையும் விளக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

பாராளுமன்றம்

பாராளுமன்றம்

கடந்த 4 ஆண்டுகளில் 800 நாட்கள் பிரதமர் மோடி அவர்கள் அவரது கட்சிக்காக வாக்கு சேகரிக்கவும் பொது மக்களைச் சந்திக்கவும் நேரத்தினை செலவிட்டுள்ளதாகவும், 165 நாட்கள் வெளிநாட்டுப் பயணங்களிலும், 19 நாட்கள் மட்டும் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார் என்று அன்மையில் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Narendra Modi Went 41 Foriegn trips to 52 countries in 4 years & spent Rs 355 crore: RTI

PM Narendra Modi Went 41 Foriegn trips to 52 countries in 4 years & spent Rs 355 crore: RTI
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X