அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ரூபாய் ஆகச் சரிந்தள்ளது இந்திய பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பிரச்சனையாக உள்ள அதே நேரத்தில் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் என்ஆர்ஐகளுக்கு இது மிகப் பெரிய வர பிரசாதம் ஆக அமைந்துள்ளது.
வெளிநாட்டில் உள்ள என்ஆர்கள் இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்களுக்குப் பணத்தினை டாலர் மதிப்பில் அனுப்பும் போது 1 டாலருக்கு 70 ரூபாய் பெறுவார்கள்.

அன்னிய செலாவணி
இந்தியாவிற்கு அதிகளவிலான அன்னிய செலாவணி வரவும் வாய்ப்புகள் உள்ளது என்றாலும் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற நிலைக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

எண்ணெய் நிறுவனப் பங்குகள்
மேலும் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்து வரும் முதலீட்டாளர்கள் எண்ணெய் நிறுவனப் பங்குகளை அதிகளவில் வாங்கும் போது அதிக லாபங்களைப் பார்க்கலாம்.

பயன் அடையும் ஏற்றுமதி நிறுவனங்கள்
ரூபாய் மதிப்பு சரியும் நேரங்களில் இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யும் போது குறைந்து விலைக்குச் சர்வதேச சந்தைக்குச் செல்லும். அதன் மூலம் இந்திய பொருட்கள் சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படுவது மட்டும் இல்லாமல் பெரிய அளவிலான சந்தையினையும் பெறும்.

எந்தத் துறை/நிறுவனப் பங்குகளை எல்லாம் வாங்கலாம்?
இந்தியாவில் இருந்து ஐடி, பார்மா, ஆட்டோமொபைல் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் இந்த நிறுவனங்களின் பங்குகள் எல்லாம் விலை உயரவும் வாய்ப்புகள் உள்ளது.
ரூபாய் மதிப்பு சரிந்து இருக்கும் நேரத்தில் எந்த நிறுவனங்களுக்கு எல்லாம் குறைந்த அளவில் கடன் உள்ளதோ அதனைக் குறைக்க முயல்கிறார்களோ அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். கடனை அவர்கள் செலுத்துவதன் மூலம் நிறுவனத்தின் நிதி சிக்கல் மற்றும் ரிஸ் குறைகிறது.

தங்கம்
கச்சா எண்ணெய் விலை உயரும் போது மற்றும் ரூபாய் மதிப்பு சரியும் போது அதில் தங்கமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியா போன்று கச்சா எண்ணெய்யினை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அவர்கள் கரன்சி மதிப்புச் சரியும்போது தங்கம் மிகப் பெரிய சொத்தாக அமையும். தங்கத்தினை விற்று ரூபாய் மதிப்பு சரிவின் தாக்கத்தினைக் குறைக்க அரசு முயலும்.

விவசாயிகள்
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதினை குறைத்து எத்தனால் பயன்படுத்திப் பெட்ரோல் விற்க மத்திய அரசு புதன் கிழமை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் கரும்பு விவசாயிகளின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் ரூபாய் மதிப்பு சரிவும் சிறிய அளவில் குறையும்.