சிறந்த சலுகையில் தனிநபர், வீடு & ரீடெயில் கடன் அளிக்க பொது துறை வங்கிகளுக்கு ஒரே தளம் அரசு அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைத்துப் பொதுத் துறை வங்கி நிறுவனங்களின் கடன் சேவை எல்லாம் வழங்கும் விதமாக ஒரே தளம் ஒன்றை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் உடனடி தனிநபர் கடன், வீட்டு கடன் மற்றும் பிற ரீடெயில் கடனை வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த ஆஃபர்களுடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மக்களுக்கான கடன் திட்டங்களை மட்டும் அளிப்பது என்றும் அடுத்தக் கட்டமாகச் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்களை அளிக்கும் விதமாக இந்தத் தளம் இருக்கும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

எளிதாகக் கடன் பெறலாம்
 

எளிதாகக் கடன் பெறலாம்

மத்திய அரசு எடுத்து இருக்கும் இந்த முடிவின் மூலம் வங்கிகளால் வாடிக்கையாளர்களுக்கு எளிதாகக் கடன் அளிக்க முடியும் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது. பிராதன் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கீழ் சேமிப்பு கணக்குகளைத் துவங்க வைத்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுத் துறை வங்கி நிறுவனங்கள்

பொதுத் துறை வங்கி நிறுவனங்கள்

போது துறை வங்கிகளின் இடையில் இது குறித்துச் சூடாக விவாதம் நடைபெற்று வருவதாகவும், இந்த அமலுக்கு வரும் போது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பையும் அளிக்க இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

 தனியார் துறை வங்கிகள்

தனியார் துறை வங்கிகள்

தனியார் துறை வங்கிகளின் போட்டிக்கு இடையில் பொதுத் துறை வங்கி நிறுவனங்களால் ஈடு கொடுக்க முடியாத நிலையில் மத்திய அரசு இந்த முடிவினை மிகவும் தேவையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

கடன் வளர்ச்சி
 

கடன் வளர்ச்சி

2017-2018 நிதி ஆண்டில் பொதுத் துறை வங்கி நிறுவனங்களின் கடன் வளர்ச்சியானது 4.7 சதவீதமாக உள்ளது. அதே நேரம் தனியார் வங்கி நிறுவனங்களின் வளர்ச்சி 20.9 சதவீதமாக உள்ளது. அதனை இந்தத் திட்டம் மூலம் பொதுத் துறை வங்கிகள் தலைகீழாக மாற்றி அமைக்கும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தத் தளம் எப்படி இருக்கும்?

இந்தத் தளம் எப்படி இருக்கும்?

பொதுத் துறை வங்கி நிறுவனங்களுக்கான இந்த இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகளைத் தனிநபர் விவரங்களுடன் அளித்தால் போது எந்த வங்கி சிறந்த சலுகையுடன் தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவற்றை அளிக்கிறன என்ற விவரங்களை அளிக்கும். மேலும் இந்தத் தளத்தின் மூலமே கடன் பெற விண்ணப்பிக்கவும் முடியும் என்று கூறுகின்றனர்.

 புதிய தொழில்நுட்பங்கள்

புதிய தொழில்நுட்பங்கள்

பொதுத் துறை வங்கி நிறுவனங்களுக்குப் புதிய நிதி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வணிகத்தினைப் பொறுக்க மற்றும் பல முக்கிய வங்கி சேவைகளை எளிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு இந்தத் தளமும் பொதுத் துறை வங்கிகளுக்கு மிகவும் பயன் உள்ள ஒன்றாக அமையும்.

மறு மூலதனம்

மறு மூலதனம்

இந்திய அரசு பொதுத் துறை வங்கி நிறுவனங்களுக்கு மறு மூலதனத்தினை அளித்து இருந்தாலும் அது அவர்களது கடன் சேவைகளை வளர்க்க முடியவில்லை என்று மூடிஸ் தெரிவித்துள்ளது. அதே நேரம் பொதுத் துறை வங்கி நிறுவனங்களின் சேவைகளை எளிமையாக்க மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks mull common portal to offer competitive personal, housing & other retail loans

Banks mull common portal to offer competitive personal, housing & other retail loans
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X