ஜெயின் சமுக எதிர்ப்பால் செம்மறி ஆடுகளை ஐக்கிய அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்வதை ரத்து செய்த அரசு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து செம்மறி ஆடுகளை ஐக்கிய அமேரகத்திற்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று சில ஜெயின் சமுக அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் நிகழ்ச்சியை அரசு இரத்தி செய்துள்ளது.

செம்மறி ஆடுகளை வளர்ச்சி கறி கடைகளுக்கு விற்பதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் பார்த்து வந்த நிலையில் அதனை ஏற்றுமதி செய்வதன் மூலம் அவர்களது வருவாயினை அதிகரிக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டு இருந்தது.

ஏற்றுமதி
 

ஏற்றுமதி

அதன் முதற்கட்டமாகக் கடந்த சனிக்கிழமை நாக்பூர் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2,000 செம்மறி ஆடுகளை விமானம் மூலம் ஐக்கிய அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு இருந்தனர்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள்

முதல்வர் மற்றும் அமைச்சர்கள்

செம்மறி ஆடுகள் ஏற்றுமதியினைத் துவங்கி வைக்க மகாராஷ்ட்டிரா முதல்வர் தேவேந்திர ஃபேண்ட்விஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோர் வருகை தர இருந்தனர்.

ரத்து மற்றும் ஒத்திவைப்பு

ரத்து மற்றும் ஒத்திவைப்பு

ஆனால் சில ஜெயின் சமுக அமைப்புகள் ஆடுகளை ஏற்றுமதி செய்வதற்கு எதிராக நடத்திய போராட்டத்தினாலும், ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் உதவியை நாடியதாலும் இந்த நிகழ்ச்சியைக் காலவரையின்றி ஒத்தி வைப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

ஜெயின் அமைப்பு

ஜெயின் அமைப்பு

இது குறித்துத் திகம்பர் ஜெயின் மகாசபை குழுவின் தலைவரிடம் விசாரித்துப் போது விவசாயிகளின் வருவாயினை அதிகரிக்கப் பல வழிகள் உள்ளது. அதற்காக ஆடுகளை ஏற்றுமதி செய்வதை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

வழக்கு
 

வழக்கு

செம்மறி ஆடுகளை ஏற்றுமதி செய்வதை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜெயின் சமூகத்தினர் சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

நாக்பூர் விமான நிலையம்

நாக்பூர் விமான நிலையம்

நாக்பூர் விமான நிலைய அதிகாரிகளிடம் இது குறித்து விசாரித்த போது சனிக்கிழமை பிறப்கள் 1 மணி அளவில் துபாய்க்கு செம்மறி ஆடுகளை ஏற்றுமதி செய்வதற்காக விமானம் தயாராக இருந்த நிலையில் அன்று காலை ரத்துச் செய்யப்பட்டது என்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government cancels export of sheep, goats to UAE after protests by Jains

Government cancels export of sheep, goats to UAE after protests by Jains
Story first published: Tuesday, July 3, 2018, 15:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X