ஜியோ போன், ஜியோ ஜிகாபைபர் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.. ஆடிப்போன வர்த்தக சந்தை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41வது ஆண்டு பொது கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் ஜியோ ஃபைபர்னெட் பிராடுபேண்ட் சேவை அறிமுகம் மற்றும் ஜியோ பியூச்சர் போனுக்கு புதிய சலுகைகள் மற்றும் ஜியோ ஸ்மார்ட்போன் போன்ர திட்டங்களைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி அறிவித்து வருகிறார். அது குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.

  ஜியோ போனில் புதிய அம்சங்கள்

  ஜியோ பியூச்சர் பொனில் இது வரை பெரும்பாலும் ஜியோ செயலிகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில் பேஸ்புக், வாட்ஸ்ஆப், யூடியூப் போன்ற செயலிகள் எல்லாம் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஆகாஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

  பேஸ்புக்

  ஆண்டிராய்டு போன்களில் பேஸ்புக் எப்படி இயங்குகிறதோ அதே போன்று இயங்கு என்று ஈஷா அம்பானி தெரிவித்துள்ளார்.

  மீடியா

  ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 69 சேனல்கள் உள்ளதாகவும், இந்தியாவின் மிகப் பெரிய தொலைக்காட்சி சேவை நிறுவனமான வளர்ந்துள்ளதாகவும், ஜியோ, மியூசிக், போன்ற சேவைகளையும் இதன் கீழ் வழங்கி வருவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

  பங்கு சந்தை

  ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் 11:52 மணி நிலவரத்தின் படி பங்குகள் ஆனது 3.55 புள்ளிகள் என 0.36 சதவீதம் உயர்ந்து 993.50 ரூபாய் ஒரு பங்கு என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  ஜியோ ஜிகாபைபர்

  எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ ஜிகாபைபர் திட்டத்தை ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள வீடுகளுக்கு அதிவேக இண்டர்நெட் சேவை அளிக்கப்படுகிறது.

   

  1,100 நகரங்கள்

  இந்தச் சேவையை வேண்டும் என நினைப்பவர்கள், மைஜியோ அல்லது ஜியோ.காம் தளத்தில் கோரிக்கை வைக்கலாம். மேலும் அதிவேக ஜிகாபைபர் இண்டர்நெட் இணைப்பை ஜியோ நாட்டில் 1,100 நகரங்களில் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

  இணைப்பு சேவை

  ஜிகாபைபர் திட்டத்துடன் செட் டாப் பாக்ஸ்-ம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் டிடிஹெச் சேவையை ரிலையைன்ஸ் பெரிய அளவிலான வர்த்தகத்தையும் வருவாயும் உருவாக்க உள்ளது.

  எல்லாவற்றுக்கும் மேலாக ஜியோ ரிமோர்ட் வாய்ஸ் கன்ட்ரோல் கொண்டதாக உள்ளது. இதன் சேவையை முகேஷ் அம்பானியில் மகள் ஈஷா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானியும் அறிமுகம் செய்து வைத்தனர்.

   

  புதிய செயலிகள் எப்போது முதல் கிடைக்கும்

  ஜியோ போன் 2-ல் யூடியூப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் செயலிகள் 2018 ஆகஸ்ட் 15 முதல் இயங்கு என்று முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

  வீட்டை கட்டுப்படுத்தும் மை-ஜியோ செயலி

  வீடுகளை ஸ்மார்ட்டாக இயக்கும் படி ஜியோஜிகாஃபைபர் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது, இது அனைவரை ஆச்சரியப்படுத்தும் படி இருக்கும் என்றும் ஆகாஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

  பிராண்ட்பேன்டு நிறுவனங்கள்

  ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஜிகாபைபர் திட்டம் அறிவிப்பிற்கே பங்குச்சந்தையில் இருக்கும் முன்னணி பிராண்ட்பேன்டு நிறுவனங்கள் அதிரடியான சரிவை சந்தித்துள்ளது.

  இந்நிலையில் ஹேத்வே கேபில் & டேட்டா காம் நிறுவன பங்குகள் 6 சதவீதமும், டென் நெட்வொர்க் 6.2 சதவீதமும், டிஷ் டிவி 0.4 சதவீதமும், சிட்டி நெட்வொர்க் 2.9 சதவீதமும் சரிந்துள்ளது.

   

  ஹைப்ரிட் ஈகாமர்ஸ்

  இந்திய ரீடைல் வர்த்தகச் சந்தையில் முடிசூடா மன்னாக இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  பாரத் இந்தியா ஜோடோ திட்டம்

  ரிலையன்ஸ் ரீடைல் மற்று் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களை இணைத்து ஹைப்ரிட் ஈகாமர்ஸ் தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் - ஆப்லைன் ஈகாமர்ஸ் தளமாக இக்கூட்டணி இயங்க உள்ளது.

  மேலும் இத்திட்டத்தின் பெயர் பாரத் இந்தியா ஜோடோ திட்டம்.

   

  ரிலையன்ஸ் ஃபைபர் விண்ணப்பங்கள் எப்போது கிடைக்கும்?

  ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஃபைபர் பிராடுபேண்ட் சேவைக்கான விண்ணப்பங்கள் 2018 ஆகஸ்ட் 15 முதல் கிடைக்கும் என்று அம்பானி தெரிவித்துள்ளார்.

  உலகின் முதல் நிறுவனம்

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் உலகளவில் எண்ணெய் மற்றும் டெலிகாம் வணிகத்தினை ஒரே நேரத்தில் செய்து வரும் நிறுவனமாக உள்ளது என்றும் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

  வேலை வாய்ப்பு உருவாக்கம்

  ரிலையன்ஸ் ஜியோ சேவை அறிமுகம் செய்த பிறகு நாடு முழுவதும் மறைமுகமாக 10 லட்சம் நபர்களுக்கு வேளை வாய்ப்பு உருவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

  ஜியோ + ரீடெயில்

  ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரீடெயில் வணிகம் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 13 சதவீத வருவாயினைக் கிடைப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.

  வாடிக்கையாளர்கள்

  ஜியோ 4ஜி வேவை 2016 -ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 22 மாதத்தில் 215 மில்லியனாக அதிகரித்துள்ளது.

  வரி

  இந்தியாவின் மிகப் பெரிய செய்தி நிறுவனமாக நியூஸ் 18 வளர்ந்துள்ளது, இந்தியாவிலேயே அதிகம் வரி செலுத்தும் நிறுவனமாக ரிலையன்ஸ் உள்ளது என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.