மோடியின் மருத்துவ காப்பீடு திட்டம்: ஆதார் வேணும்னு சொல்லல.. இருந்தா நல்லா இருக்கும்னு செல்றோம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் என்ற தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ஆதார் வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்றும் இருந்தால் நல்லது என்றும் தெரிவித்துள்ளது.

மோடியின் மருத்துவக் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயம் என அரசிதழில் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து மத்திய அரசு இதனைத் தெரிவித்துள்ளது.

ஊடக செய்திகள்
 

ஊடக செய்திகள்

மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்ட பயனாளிகள் ஆதாரை ஆவணமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

 தேசிய மருத்துவக் காப்பீடு திட்டம்

தேசிய மருத்துவக் காப்பீடு திட்டம்

ஆயுஷ்மான் பாரத் - தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் பயனாளிகளிடம் ஆதார் கார்டினை ஆவணமாகப் பெற வேண்டும் என்றும், இது அவர் தான் சரியான பயனாளியா என்பதற்காக என்றும் குறிப்பிட்டு இருப்பது மட்டும் இல்லாமல் அதே நேரம் கட்டாயமாகத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆதார் இல்லை என்றால் என்ன ஆகும்?

ஆதார் இல்லை என்றால் என்ன ஆகும்?

ஆதார் எண் இல்லை என்பதற்காக மருத்துவக் காப்பீட்டிற்கான நன்மையை மறுக்கக் கூடாது என்றும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான ஜே பி நந்தா ஆதார் கார்டு இருந்தாலும், இல்லை என்றால் தகுதி உள்ள பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு நன்மையினை அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

ஆயுஷ்மான் பாரத்
 

ஆயுஷ்மான் பாரத்

ஆயுஷ்மான் பாரத் திட்டமானது 10.74 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டமாக 2018-2019 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாற்று வழி

மாற்று வழி

ஆதார் கார்டுக்கு மாற்றாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றினைச் சமர்ப்பித்து மருத்துவக் காப்பீட்டிற்கான நன்மைகளைப் பெறலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சகம்

சுகாதாரத் துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர விரும்புபவர்கள் ஆதார் இல்லை என்றால் பிற அரசு ஆவணங்களை எடுத்து வர வேண்டும் வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aadhaar Desirable But Not Mandatory To Avail Benefits Of Ayushman Bharat, Government Clarifies

Aadhaar Desirable But Not Mandatory To Avail Benefits Of Ayushman Bharat, Government Clarifies
Story first published: Thursday, July 12, 2018, 18:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X