அமெரிக்க அரசு வெளிநாட்டவர்களுக்கு, தன் நாட்டில் பணியாற்ற அளிக்கும் ஹெச்1பி விசாவில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு தற்போது அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்து இந்திய இளைஞர்களின் அமெரிக்கக் கனவை குழிதோண்டி புதைத்து வருகிறது.
இந்நிலையில் டிரம்ப் அரசு தற்போது புதிதாகச் சில உத்தரவை வெளியிட்டுள்ளது.

உரிமைகள்
ஹெச்1பி விசா வெளிநாட்டவர்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடாது என்பதில் குறியாய்ச் செயல்படும் டிரம்ப், தற்போது குடியுரிமை அமைப்பின் நிர்வாகத் தலைவர்களுக்குப் புதிய ஹெச்1பி விசா மற்றும் விசா நீட்டிப்புக் காலத்தைத் தாராளமாக ரத்து செய்யும் உரிமையைக் கொடுத்துள்ளது.

இந்திய நிறுவனங்கள்
அமெரிக்காவில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் தற்போது பெரிய தொழில்நுட்பத்தில் பணியாற்றத் துவங்கியுள்ள நிலையில், இந்த வாய்ப்புகளை வெளிநாட்டு நிறுவனங்கள் தட்டிச்செல்லும் காரணத்தால் அதனைத் தடுக்க வேண்டும் என்பதை மையாக வைத்தே தற்போதையே உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

வருவாய்
இதுகுறித்து நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் கூறுகையில், அமெரிக்க நிறுவனங்கள் தற்போது அதிகளவிலான தொகையை முதலீடு செய்து புதிய தொழில்நுட்பத்தில் பணியாற்றத் திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் உருவாகும் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளைத் தன் நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கும் வகையில் திட்டமிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

வருவாய்
இந்திய ஐடி நிறுவனங்கள் மூன்றில் இரண்டு பகுதி வருவாயை அமெரிக்கச் சந்தையில் இருந்து பெறுகிறது. இதை வைத்தே அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ஆதிக்கத்தை நீங்கள் உணர முடியும்.

உரிமைகள்
டிரம்ப் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன் USCIS அமைப்பு விண்ணப்பங்களை request for evidence (RFE) அல்லது notice of intent to deny (NOID) அளிக்காமலேயே ரத்து செய்யும் உரிமையை அளித்துள்ளது.

விசா புதுப்பிப்பு
சில வாரங்களுக்கு முன் விசா புதுப்பிப்புக்காகக் காத்திருக்கும் நபர்களை அரசே அழைத்து notice to appear (NTA) விசாரணை செய்யும் உரிமையை அளித்துள்ளது. இப்படி நோட்டீஸ் அளிக்கப்படும் நபர்களுக்கு விசா ரத்துச் செய்ய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

செலவுகள் அதிகம்
இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்னரே அல்லது ப்ரீமியம் முறையில் விசாவை புதுப்பிப்பது என்பது நிறுவனங்களுக்குக் கூடுதல் செலவுகளைக் கொடுக்கும் இதனால், இந்த முறையை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்தாது.
ஆதலால் இந்தியர்கள் பலரும் அமெரிக்காவை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகும் எனச் சந்தை நிலவரங்கள் கூறுகிறது.

செப்டம்பர் 11
மேலும் புதிய உரிமைகள் அனைத்தும் செப்டம்பர் 11ஆம் தேதி டிரம்ப் அரசு நடைமுறைப்படுத்துகிறது.