இளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலத்திற்கு ஏற்றார் போல விருப்பங்களும் மாறுபட்டுக் கொண்டே இருக்கின்றன. சில குறிப்பிட்ட மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்ததால் போதும் என்ற மனநிலையை, இன்றைய இளைஞர்கள் பலமைல்தூரம் தாண்டி விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

 

வாசலில் நின்று கூப்பிட்டாலும் செல்லப்போவதில்லை என்ற முன்னணி நிறுவனங்களின் வேலை வாய்ப்பை அலட்சியப்படுத்தும் அளவுக்கு இன்றைய இளைஞர்கள் வந்து விட்டனர். அவர்களின் திறமையும், முதிர்ச்சியும், கனவு நிறுவனங்கள் பட்டியலில் இருந்து பின்னுக்குத் தள்ளியுள்ளது.

வெளியேற்றப்பட்ட நிறுவனங்கள்

வெளியேற்றப்பட்ட நிறுவனங்கள்

இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ், ஹெச்.சி.எல் மற்றும் டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் தான், ஒரு காலத்தில் வேலை தேடுவோரின் தேர்வாக இருந்து வந்தது. அந்தப் பட்டியலில் இருந்து இந்த நிறுவனங்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளன.

புதிய தலைமுறை நிறுவனங்ள்

புதிய தலைமுறை நிறுவனங்ள்

லிங்க்டின் நடத்திய ஆய்வில், இந்தியாவில் புதிய தலைமுறை நிறுவனங்களாக அறியப்படும் டைரக்டி, பிளிப்கார்ட், பேடிஎம் மற்றும் ஓயோ நிறுவனங்கள்தான், வேலை தேடுவோரின் விருப்பமாக மாறி இருப்பது தெரியவந்துள்ளது.

வேலை தேடுபவர்கள் விரும்பும் நிறுவனங்கள்
 

வேலை தேடுபவர்கள் விரும்பும் நிறுவனங்கள்

உலக அளவில் அமேசான், மைக்ரோசாப்ட், கூகிள், Anheuse busch Inbev, KPMG, Ernst& young உள்ளிட்டவை வேலை தேடுவோர் அதிகம் நேசிக்கும் நிறுவனங்களாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன. 10 வது இடத்தில் இந்திய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனம் 167 பில்லியனுடன் 10 வது இடத்தில் உள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பின்மை மற்றும் பிற்போக்குத்தனமான தொழில் நுட்பங்களால் பழைய நிறுவனங்களைக் கடந்து போய், புதிய நிறுவனங்களை விரும்புவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

ஆளுமையை நோக்கிய விருப்பத்தேர்வு

ஆளுமையை நோக்கிய விருப்பத்தேர்வு

வேலை தேடுவோரின் அதீதமான விருப்பங்களைப் பிரதிபலிப்பதாக இருப்பதால் சூழல் மாறியுள்ளது என்று, கிரேட் லேனிங் நிறுவனத்தின் நிறுவனர் மோகன் லகம்ராஜூ கூறினார்.மிகப்பெரிய ஐ.டி. நிறுவனங்களில் ஓபனிங் இருந்தாலும், வேலை வாய்ப்புகள் குறைந்த விழுக்காடு அளவே இருப்பதால் வேலை தேடுவோர் விரும்புவதில்லை.

ஜாவா போன்ற தொழில்நுட்பங்கள், பயன்பாடு, பராமரிப்பு, மென்பொருள் ஏற்றுமதியைக் கணித்தே விருப்பமும் அமைகிறது. தரவு விஞ்ஞானிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய திறனாளர்களைக் கொண்ட நிறுவனங்களை வேலை தேடுவோர் தேடி செல்வதாக, பொயனிக்ஸ் டேலண்ட் பிராண்டிங் நிறுவனத்தின் அமந்தீப் கவுர் தெரிவித்தார்.

 

கலாச்சாரச் சாராம்சங்கள்

கலாச்சாரச் சாராம்சங்கள்

புதிய தலைமுறைக்கான நிறுவனங்களில் பணியில் ஒரு நேர்மையான கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது.அவர்களுக்கான பங்களிப்பும், படிநிலைகளும் சரியாக வழங்கப்படுவதால் அதனை விரும்புவதாக, ஜாப்ஸ் பார் ஹர் நிறுவனத்தின் நிறுவனர் நேகா பகாரியா கூறினார். புதிய ஊழியர்களுக்குத் தொடக்கத்திலேயே 15000- 20000 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை போன்றவையும் அளிக்கப்படுவதால் தொழிலாளர்களின் மனோநிலையில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஒரே நிறுவனத்தில் வேலை, மன அழுத்தங்கள், வேலை கிடைப்பதில் தோல்வி போன்ற காரணங்களால், புதிய நிறுவனங்களில் வாய்ப்பைப் பெற முயற்சிப்பதாகக் கவுர் கூறினார். கலாச்சாரம், வாழ்க்கை இருப்பு மற்றும் சமூக அறிவு உள்ளிட்ட காரணங்கள் முக்கியக் காரணமாக இருப்பதாக எட்ஜ் நெட்வொர்க்கின் பிரதாப் தெரிவித்தார். இது போன்ற காரணங்களால் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் புதிய நிறுவனங்களில் பணியில் சேரவே விரும்பி வருகின்றனர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big IT Companies Are Not Aa Choice Of Youg Job Seekers List

Big IT Companies Are Not Aa Choice Of Youg Job Seekers List
Story first published: Wednesday, July 18, 2018, 17:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X