அமேசான் அலெக்ஸாவிற்குப் பின்னால் இருக்கும் இந்தியர் ரோகித் பிரசாத் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

By Vivek Sivanandam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் உதவியாளர்அலெக்ஸாவின் பின்னால் மூளையாக இருந்து செயல்பட்டவர் ஒரு இந்தியர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் பிறந்த பொறியாளரான ரோகித் பிரசாத், அலெக்ஸாவிற்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் எனக் கூறலாம்.

 

இந்தச் செயல்திட்டம் துவங்கியதில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக இதன் தொழில்நுட்ப பிரிவை தலைமையேற்று நடத்திவருகிறார். இவர் இந்தியாவின் ராஞ்சி பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தியாவில் வேர்கள்

இந்தியாவில் வேர்கள்

ரோகித்தின் குடும்பம் இன்னும் ராஞ்சியில் தான் உள்ளது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் இவர் ராஞ்சிக்கு வருகிறார். பள்ளிப்படிப்பு முதல் பொறியியல் பட்டப்படிப்பு வரை இந்தியாவில் தான் பயின்றார். ராஞ்சியில் உள்ள பிர்லா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் பொறியியல் படித்த இவர், அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி-ல் முதுகலை மின்னணுவியல் பொறியியல் பட்டம் பெற்றார். அநேகமாக அங்குத் தான் பேச்சை கண்டறியும்( speech recognition )துறையில் ஆர்வம் உருவாகியிருக்க வேண்டும்.

'ஸ்டார் டிரிக்'ஆல் உருவான ஆர்வம்

'ஸ்டார் டிரிக்'ஆல் உருவான ஆர்வம்

2008ல் அமேசானில் சேர்ந்த பிரசாத், வாடிக்கையாளர்கள் எப்படி அமேசானின் கருவிகள் மற்றும் சேவைகளுடன் ஊடாடுகின்றனர் என்பதில் புரட்சியை ஏற்படுத்த விரிவாகப் பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அலெக்ஸா செயற்கை நுண்ணறிவின் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டார். இவரின் பயணத்தைப் பற்றிக் கேட்டதிற்கு, " நாங்கள் ஸ்டார் டிரக் சகாப்தத்தில் வளர்ந்தவர்கள். அது தான் எங்களுக்கு உத்வேகத்தை அளித்தது" என்கிறார்.

பிபிஎன் டெக்னாலஜிஸ்
 

பிபிஎன் டெக்னாலஜிஸ்

அமேசானில் பணியாற்றுவதற்கு முன்பு, பாதுகாப்புத் துறை சார்ந்த ரேதியான் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை நிறுவனமான பிபிஎன் டெக்னாலஜி நிறுவனத்தில் பணியாற்றினார். இது இன்டர்நெட் உடைய முந்தைய வடிவமான ஆர்பாநெட் தளத்தைக் கண்டறிந்த நிறுவனம் ஆகும்.

முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் பட்டியல்

முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் பட்டியல்

வாடிக்கையாளர் அனுபவ பிரிவில் பணியாற்றிய பிரசாத் மற்றும் அவரின் சக பணியாளரான டோனி ரைட், 2017ஆம் ஆண்டின் தொழில்நுட்ப, தொழில் மற்றும் ஊடகத்துறையில் ரிகோட் சிறந்த 100நபர் பட்டியலில் 15ஆம் இடம் பிடித்தனர். அலெஸ்கா ஒவ்வொரு வீட்டின் அங்கமாக இவர்கள் மாற்றிவிட்டனர் என்கிறது ரீகோட். பாஸ்ட் நிறுவனம் வெளியிட்ட 2017ஆம் ஆண்டிற்கான தொழில் துறையில் புதுமையாகச் சிந்திக்கும் 100பேர் பட்டியில் பிரசாத் 9வது இடமும், டோனி 10வது இடமும் பிடித்தனர். இவர்கள் இருவரால், வாடிக்கையாளர் அனுபவ பிரிவை வரையறை செய்யும் ஒன்றாக அலெக்ஸா உள்ளதாகப் பாஸ்ட் நிறுவனம் கூறுகிறது.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

தெளிவற்ற கட்டளைகள் மற்றும் விடுமுறையைத் திட்டமிடுவது போன்ற சிக்கலான பணிகளைக் கையாளும் வகையில், அலெஸ்காவின் அடிப்படை நுண்ணறிவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார் பிரசாத்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Meet Rohit Prasad, the Indian brain behind Amazon's Alexa

Meet Rohit Prasad, the Indian brain behind Amazon's Alexa
Story first published: Thursday, July 26, 2018, 12:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X