சொத்துக்களை விற்று 60% கடனை குறைத்த அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனில் அம்பானி மற்றும் அவருடைய குழும நிறுவனங்கள் மயிரிழையில் தப்பியுள்ளன என்று தான் கூறவேண்டும். கடன் என்னும் சுனாமியில் சிக்கி மூழ்கவிருந்த நிலையில், அம்பானி சரியான நேரத்தில் தனது சில சொத்துக்களை விற்று, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரை காப்பாற்றியுள்ளார்.

 

அம்பானி சகோதரர்களில் இளையவரின் ரிலையன்ஸ் குழுமம் தனது சொத்துக்களை விற்ற பிறகு, 60% கடன்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் முதல் மெட்ரோ வரை வர்த்தகம் செய்யும் இந்தக் குழுமம் மார்ச் மாத நிலவரத்தில் 1 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் வைத்திருந்திருப்பதாகவும், அதற்கு ஆண்டு வட்டியாக ரூ10,000கோடிக்கும் அதிகமாகச் செலுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்துகளை விற்ற பிறகு கடன் மதிப்பு ரூ48,645 கோடியாகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் தனது தொலைத்தொடர்பு கோபுரங்கள், அலைக்கற்றை, அசையாசொத்துக்கள் மற்றும் டிடிஎச் தொழில் போன்றவற்றை விற்று ரிலையன்ஸ் குழுமத்தின் கடன் குறைப்பு முயற்சியில் முக்கியப் பங்குவகிக்கிறது. சமீபத்தில் ரிலையன்ஸ் கட்டுமான நிறுவனம் தனது மின்சார வணிகத்தை அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்திற்கு விற்றது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் நிறுவனம் விற்ற சொத்துக்களின் பட்டியல் இதோ.

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ்

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ்

முகேஷ் அம்பானியால் நிறுவப்பட்டு, மொபைல் போன்களைப் பெரிய அளவில் பயன்படுத்தச் செய்ய இந்த நிறுவனம், முந்தைய நிதியாண்டில் ரூ47,000கோடிக்கும் அதிகமான கடனை வைத்திருந்தது. ஆனாலும் இந்தத் தொலைதொடர்பு நிறுவனம் தனது தொலைதொடர்பு கோபுரங்கள், அலைகற்றை,பைபர் கேபிள் மற்றும் மற்ற அசையாசொத்துக்களை விற்று ரூ25,000 கோடி கடனை திரும்பச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு ரூ10,000 கோடி கடனை, நவிமும்பையில் உள்ள 125ஏக்கர் ரியல் எஸ்டேட் சொத்தை விற்பதன் மூலம் திரும்பச் செலுத்தவுள்ளது.

ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்

ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்

பாதுகாப்புத்துறை,பொறியியல் மற்றும் கட்டுமானத்துறை எனத் தனது வர்த்தகத்தைச் சுருக்கிக்கொண்ட இந்நிறுவனம், தனது மும்பை டிரான்ஸ்மிஷன் சொத்துக்களை அதானி குழுமத்திற்கு விற்றுவிட்டது.

2006க்குப் பின் முதல்முறையாக மார்ச் 2020ல் மீண்டும் கடன் இல்லாத நிறுவனமாக மாறும் என இந்நிறுவனத்தின் தலைவரான அம்பானி தெரிவித்துள்ளார். சுமார் 3மில்லியன் நுகர்வோர்ஙளுக்கு மின்சாரத்தைப் பகிர்ந்தளிக்கும் மும்பை அலகு ரூ18,800 கோடிக்கு விற்கப்படுகிறது.

"கட்டமைப்புத் துறையில் இது தான் மிகப்பெரிய கடன் குறைப்பு மற்றும் இதுதான் மின்சாரத்துறையின் மிகப்பெரிய பரிமாற்றம்"என்கிறார் அம்பானி.

 

ரிலையன்ஸ் நாஃவல்
 

ரிலையன்ஸ் நாஃவல்

ரிலையன்ஸ் நாஃவல் மற்றும் இன்ஜினியரிங் லிமிடேட் நிறுவனம் ரூ5300கோடி அளவில் கடன் வைத்துள்ள நிலையில், கடன் வழங்கிய நிறுவனங்களிடம் கடனுக்குத் தீர்வு காணும் திட்டத்தைக் கேட்டுள்ளது. எனினும் இது நொடித்துப்போன தீர்வு வழிமுறையில் தான் முடிவடையும்.

இந்தியாவில் கடற்படை ஒப்பந்தங்களைப் பெற போட்டுப்போடும் இருபேரும் தனியார் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.கப்பல் கட்டுமான துறையில் சர்வதேச அளவில் நிலவும் மந்தநிலை மற்றும் பாதுகாப்புதுறை ஒப்பந்தங்ஙளில் தாமதம் காரணமாக, கப்பல் கட்டுமான நிறுவனமான இது கடந்த நான்கு வருடங்களாக நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.

 

ரிலையன்ஸ் பவர்

ரிலையன்ஸ் பவர்

அனில் அம்பானி குழுமத்தில் உள்ள வங்கியில்லா நிறுவனங்களில், ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மட்டுமே இதுவரை கடன் திரும்பச் செலுத்துதல் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்காமல் உள்ளது. இந்நிறுவனத்தின் கடன் மதிப்பீடு அதிக வருமானம் மற்றும் மறுநிதியளிப்பு ஆபத்தால் ஐசிஆர்ஏ-ஆல் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார்த்துறை ஆற்றல் உற்பத்தியாளர்களில் ஒன்றான ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் மொத்த கடன் குறைந்திருந்தாலும், வட்டிசுமையைச் சமாளிக்கும் திறன் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிறுவனம் ரூ713 கோடி மதிப்பிலான ஒரு மின்சாரத் திட்டத்தை விற்றுள்ளது.

 

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

இதற்குப் பிறகு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஷ் நிறுவனம் கண்டிப்பாகச் 'சப்மெரைன் கேபிஸ் சிஸ்டம்' நிறுவனத்துடன் நிறுவனசேவை வழங்குனராக மாற வேண்டும். ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான வர்த்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், ரிலையன்ஸ் நிப்பான் அசட் மேனேஜ்மென்ட் என அனில் அம்பானியின் குழுமம் வங்கி, நிதிச்சேவைகள் மற்றும் காப்பீட்டு துறையிலும் இருக்கின்றன. ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நிப்பான் நிறுவனங்களின் மூல நிறுவனமான ரிலையன்ஸ் கேபிடல், தனது பொதுக் காப்பீடு வர்த்தகத்தை விற்க முயற்சிக்கிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anil Ambani Group’s Debt To Fall 60% After Asset Sales

Anil Ambani Group’s Debt To Fall 60% After Asset Sales
Story first published: Thursday, September 6, 2018, 17:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X