ரூ. 14,000 கோடி டீல்..தோற்ற ரிலையன்ஸ், தேற்றிய ப்ரூக்ஃபீல்ட்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் லிமிடெட் என்கிற ரிலையன்ஸின் கேஸ் போக்குவரத்து மற்றும் உற்பத்தி நிறுவனத்தை ப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில்14,000 கோடி ரூபாய்க்கு) வாங்க இருக்கிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால் இந்த 2 பில்லியன் அமெரிக்க டாலரைத் தரப் போவதும் ஒரு இந்திய நிறுவனம் தான். முதற்கட்ட பேச்சுவார்த்தையாக ஐசிஐசிஐ-இடம் பேசி இருக்கிறது ப்ரூக்ஃபீல்ட்.

 

ப்ரூக்ஃபீல்டின் ஸ்பெஷல் கம்பெனி

ப்ரூக்ஃபீல்டின் ஸ்பெஷல் கம்பெனி

ப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் இந்தக் கையகப்படுத்துதல் பணியை செய்ய இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்மெண்ட் ட்ரஸ்ட் என்கிற நிறுவனத்தை ஸ்பான்சர் செய்திருக்கிறது. இது ஒரு ஸ்பெஷல் இன்வெஸ்ட்மென்ட் வெஹிகள். இந்த கையகப்படுத்துதல் பணி முடிந்த உடன் இந்த நிறுவனம் கலைக்கப்படும்.

ரிலையன்ஸின் ஸ்பெஷல் கம்பெனி

ரிலையன்ஸின் ஸ்பெஷல் கம்பெனி

ப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் எப்படி இந்த கையகப்படுத்துதலுக்கு தனி நிறுவனத்தை நிறுவி இருக்கிறதோ, அதே போல ரிலையன்ஸ் நிறுவனமும் பைப்லைன் இன்ஃப்ராஸ்ரக்சர் பிரைவேட் லிமிடெட் என்கிற ஸ்பெஷல் இன்வெஸ்ட்மெண்ட் வெஹிகள் ரக நிறுவனத்தை நிறுவி இருக்கிறது. இந்த நிறுவனமும் கையகப்படுத்துதல் பணி முடிந்த உடன் கலைக்கப்படும்.

ஏன் இந்த ஸ்பெஷல் கம்பெனிகள்
 

ஏன் இந்த ஸ்பெஷல் கம்பெனிகள்

பொதுவாக ஒரு நிறுவனத்துக்கு வரும் லாபத்துக்கு வரி செலுத்த வேண்டும். ஆகவே தான், இது போன்ற மெர்ஜர் & அக்வசிஷன்களுக்கு என்று தனியாக நிறுவனங்களைத் தொடங்கி பர்வர்த்தனைகள் முடிந்த பின் நிறுவனத்தைக் கலைக்கிறார்கள். இதனால் பெரிய அளவிலான வரிச் சுமை குறையும்.

 எப்பேர்பட்ட நிறுவனம்

எப்பேர்பட்ட நிறுவனம்

ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் லிமிடெட் நிறுவனம், காவிரி கோதாவரி பேஸின் என்றழைக்கப்படும் கேஜி பேஸினில் இருந்துநேரடியாக பயன்பாட்டாளருக்கே தரும் அளவுக்கு அடிப்படைக் கட்டுமானங்களைக் கொண்டது. ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் இருந்து குஜராத்தில் உள்ள பரூச் என்கிற இடம் வரை சுமாராக 1,400 கிலோமீட்டர் தூரத்துக்கு இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் அளவுக்கு பைப்லைன் வசதிகள் கொண்டது.

அதுமட்டும் இன்றி இந்த பைப்லைனை கெயில் போன்ற மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் ரீதியில் வடிவமைக்கப்பட்டிருப்பது கூட்தல் ப்ளஸ்.

சிசிஐ, செபி, என்.சி.எல்.டி அனுமதி

சிசிஐ, செபி, என்.சி.எல்.டி அனுமதி

காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா, செபி, தேசிய நிறுவன விதிகள் தீர்ப்பாயம் போன்ற அரசு அமைப்புகளிடம் ப்ரூக்ஃபீல்ட் நிறுவனமும் ரிலையன்ஸும் இந்த பர்வர்த்தனைகளைப் பற்றி தெரிவித்து முறையான அனுமதிகளைப் பெற்றிருக்கிறது.

ஏன் விற்கிறது ரிலையன்ஸ்

ஏன் விற்கிறது ரிலையன்ஸ்

கடந்த மார்ச் 2017-ல் ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய் 884 கோடி இருப்பினும் நிகர நஷ்டம் 715 கோடி ரூபாய் என்றால் எந்த அளவுக்கு செயல்பாட்டுச் செலவுகள் (Operating Expenses) இருக்கும் என்பதை கணக்கிட்டு பாருங்கள்.

உயராத உற்பத்தி

உயராத உற்பத்தி

2012 - 13 நிதி ஆண்டில் ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் லிமிடெட் நிறுவனம் நாள் ஒன்றுக்கு, 23 MMSCMD (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு க்யூபிக் மீட்டர்) ஆக இருந்தது. அடுத்த வந்த ஆண்டுகளில் நாள் ஒன்றுக்கு 5 MMSCMD ஆக குறைந்துவிட்டது. ரிலையன்ஸும் சுமாராக 12826 கோடி ரூபாய் கடன் மற்றும் ப்ரிஃபரென்ஸ் ஷேர்களாக பணத்தை கொடுத்துப் பார்த்தும் வேலைக்கு ஆக வில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறது.

அம்பானிக்கே அதிகரிக்கும் வட்டிச் சுமை

அம்பானிக்கே அதிகரிக்கும் வட்டிச் சுமை

இந்த நிறுவனம் வங்கிகளில் கடன் வாங்கித் தான் வியாபாரம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மொத்தக் கடன் தொகை கடந்த 2017 மார்ச் நிலவரப்படி 13,715 கோடி ரூபாய், ஆனால் இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பே 11,000 கோடி ரூபாய் தான். இப்படி அதிகரிக்கும் வட்டிச் சுமை காரணமாக இதில் லாபம் பார்க்க முடியவில்லை என்று இந்தியாவின் சூப்பர் ஸ்ஆர் பிசினஸ் மேன் முகேஷ் அம்பானி கைவிரித்திருக்கிறார்.

எண்ணெய் நிறுவனம் நடத்தி ஜெயிக்கத் தெரிந்த ரிலையன்ஸுக்கு, கேஸ் நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்பதை தானாகவே முன் வந்து விற்கத் துணிந்திருக்கிறார் முகேஷ் அம்பானி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance accept the defeat in gas business, brookfield to acquire east west pipeline limited

Reliance accept the defeat in gas business, brookfield to acquire east west pipeline limited
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X