காப்பாற்றப்படும் தேனா, கதறப் போகும் மற்ற வங்கிகள் ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017-ம் ஆண்டு, எஸ்பிஐ குழும வங்கிகளை ஒன்றிணைத்ததைத் தொடர்ந்து, தேனா வங்கி, வஜயா வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளையும் ஒரே வங்கியாக இணைக்கத் தீர்மானித்திருப்பதை அரசு வெளியிட்டது.

 

யார் காரணம்

யார் காரணம்

சில வருடங்களுக்கு முன் "alternative mechanism" என்கிற உள் அமைப்பை வங்கிகள் இணைப்பிற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டது. நேற்றும் இந்த குழுவிடம் கூடிப் பேசிய பின் தான் நிதி அமைச்சகம், இந்த இணைப்பைப் பற்றிய தகவல்கள் வெளியாயின.

அடுத்து என்ன

அடுத்து என்ன

மூன்று வங்கிகளும் தங்கள் இயக்குநர் குழுவோடு கூடிப் பேசி இந்த இணைப்புக்கான ரெசல்யூஷன் என்று சொல்லப்படுகிற தீர்மானங்களை பாஸ் செய்வார்கள். அதன் பின் தங்கள் பங்குதாரர்களிடம் அனுமதி பெற வேண்டும். மூன்று வங்கிகளும் தனித் தனியாக இந்த வேலைகளை முதலில் செய்து முடிக்க வேண்டும்.

நிதி அமைச்சர்
 

நிதி அமைச்சர்

"தனித் தனியாக பலவீனமான வங்கிகளாக இருப்பதற்கு பதிலாக ஒன்றிணைந்து வலுவான ஒரு வங்கியாக இருப்பது நல்லது தானே, ஆகவே நாட்டுக்க் நன்மை பயக்கும் இந்த இணைப்பை மேற்கொள்கிறோம். நிச்சயமாக ஒருங்கிணைந்த வங்கி வலுவானதாக அமையும்" என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்திருக்கிறார்.

நிதி சேவைகள் செயலாளர்:

நிதி சேவைகள் செயலாளர்:

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதி சேவைகள் துறையின் செயலாலர் ராஜிவ் குமாரிடம் இதைப் பற்றிக்கேட்ட போது " இந்த வங்கிகள் இணைப்பு நாங்கள் எதிர்பார்த்த பலன்களைக் கொடுக்கிறது. எனவே மேற்கொண்டு வங்கிகள் இணைப்பதையும் தீர ஆலோசித்து முடிவெடுத்திருக்கிறோம்" என்கிறார்.

உண்மை என்ன:

உண்மை என்ன:

பொதுவாக பேங்க் ஆஃப் ப்ரோடாவுக்கும், விஜயாவும் தேசம் முழுவதுமான பரந்துபட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். விஜயாவும், தேனாவும் பிராந்திய வாடிக்கையாளை தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள்.

எகிரும் பிசினஸ்:

எகிரும் பிசினஸ்:

மூன்று வங்கிகள் இணைந்தால் மொத்த கடன் (வங்கி வாடிக்கையாளருக்கு கொடுத்திருக்கும் கடன்) 6.4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கி இருக்கும் டெபாசிட் தொகை 8.41 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். மூன்று வங்கிகளின் மொத்த கிளைகள் 9,489க்கு உயரும்.

இறங்கும் என்பிஏ:

இறங்கும் என்பிஏ:

ரொம்ப முக்கியமான விஷயம் என்ன வென்றால் இந்த மூன்று வங்கிகளின் என்பிஏ, (வாராக் கடன்) வெறும் 80,000 கோடி ரூபாய் தான். இந்த மூன்று வங்கிகளையும் சேர்த்து நிகர வாராக்கடனைக் கணக்கிட்டால் வெறும் 5.71 % தான். தரவுகள் ஜூன் 2018 காலாண்டு முடிவுகளில் இருந்து எடுக்கப்பட்டவை.

மூன்றில் எது பெஸ்ட்

மூன்றில் எது பெஸ்ட்

பெயருக்கு ஏற்றார் போல வெற்றி வாகை சூடுகிறது விஜயா பேங்க். இந்தியாவில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத் துறை வங்கி. இதன் நிகர வாராக் கடன் வெறும் 4.1%. இதற்கு நேர் மாறாக விஜயாவை வாட்டி வதைக்கப் போகும் வங்கி தேனா. இதன் நிகர வாராக் கடன் 11.04%.

விவரங்கள்பேங்க் ஆஃப் பரோடாவிஜயாதேனாஇணைந்த பின்எஸ்பிஐஹெச்டிஎஃப்சி வங்கி
மொத்தக் கடன் * 4.48 1.22 0.69 6.4 19.9 7.08
மொத்த டெபாசிட் * 5.81 1.57 1.03 8.4 27.47 8.05
கிளைகள் எண்ணிக்கை 5502 2129 1858 9489 22428 4808
டயர் 1 கேப்பிட்டல் % 9.27 10.35 8.15 9.32 10.53 13.1
கேப்பிட்டல் அடிக்வஸி ரேஷியோ % 12.13 13.91 10.6 12.25 12.83 14.6
நிகர வாராக் கடன் % 5.4 4.1 11.04 5.71 5.29 0.4
* அனைத்தும் ரூ லட்சம் கோடியில், விவரங்கள் ஜூன் 2018 காலாண்டு முடிவுகள் படி

சிரிக்கும் சிஇடி (Tier 1):

சிரிக்கும் சிஇடி (Tier 1):

சி.இ.டி என்றழைக்கப்படும் டயர் 1 கேப்பிட்டல் இருப்பதிலேயே விஜயா பேங்குக்குத் தான் அதிகம். சுருக்கமாக டயர் 1 கேப்பிட்டல் என்பது தான் வங்கிக் கடன்கள் கொடுக்க டெபாசிட்தாரர்கள் பணம் கேட்டால் திரும்பக் கொடுக்க பயன்படுத்துவது. இந்த தொகை அதிகமாக இருக்கும் வங்கி நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம்.

கேப்பிட்டல் அடிக்வஸி ரேஷியோ:

கேப்பிட்டல் அடிக்வஸி ரேஷியோ:

இதுவும் டயர் கேப்பிட்டல் போன்றது தான். இந்த ரேஷியோவும் அதிக்மாக இருந்தால் வங்கி வலுவாக இருக்கிறது என்று பொருள். இதில் விஜயாவுக்கும் பேங்க் ஆஃப் பரோடாவும்க்கு அதிக வித்தியாசம் இல்லை. ஆனால் வழக்கம் போல தேனா சற்று பின் தங்கியே இருக்கிறது.

 எத்தனை மாதங்கள் ஆகும்

எத்தனை மாதங்கள் ஆகும்

பேங்க் ஆஃப் பரோடாவின் சி.இ.ஓ வான ஜெயக்குமார் இந்த முழுமையான இணைப்பு நடந்து முடிக்க 4 - 6 மாதங்கல் வரை ஆகும். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதாக் கூறி இருக்கிறார்.

தப்பித்த தேனா

தப்பித்த தேனா

தேனா வங்கியின் நஷ்டங்கள், கஷடங்கள் எல்லாம் இப்போது மற்ற இரண்டு வங்கிகளும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கும். ஏற்கெனவே தேனா வங்கி ஆர்பிஐயின் Prompt Corrective Action (PCA) என்கிற அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இவர்கள் மேற்கொண்டு எந்த புதிய பெரிய கடன்களையும் அனுமதிக்க இயலாத அளவுக்கு பிரச்னையில் தத்தளீக்கும் வங்கி இப்போது மற்ற இரண்டு வங்கிகளால் அப்பட்டமாக காப்பாற்றப்படுகிறது.

இக்ரா ரேட்டிங்:

இக்ரா ரேட்டிங்:

இக்ரா நிறுவனம் "அரசு எந்த அடிப்படையில் இப்படி வங்கிகளை இணைக்கிறதுஎன்று தெரியவில்லை, ஆனால் இந்த இணைப்புகள் மூலம் எந்த வங்கியும் தற்போதிக்கு வலுவிழக்காது என்று சொல்ல முடியும்" என்கிறது.

இணைப்புக்குப் பின்:

மொத்தக் கடன் வழங்குதலில் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிக்குப் பிறகு இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியாக இந்த வங்கி உருவெடுக்கும். கிளைகள் எண்ணிக்கையில் எஸ்பிஐக்குப் பிறகு இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். நிகர வாராக் கடனில் 5.71%த்துடன் முதல் இடத்தைப் பிடிக்கும்.

அடுத்த முறை

அடுத்த முறை

இந்த முறை மூன்று வங்கிகள் இணைப்பின் மூலம் ஒரு வங்கியின் நஷ்டத்தைப் பூசி முழுகிவிட்டோம், அடுத்த முறை இன்னும் வலுவான வங்கியோடு சேர்த்து அதையும் மழுங்கடித்துவிடுவோம். இப்படி இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளும் மூடப்பட்ட பின் தனியாருக்கு முழுமையாக வங்கிச் சேவைகளை திறந்துவிட்டு விட்டு வேடிக்கை பார்ப்போம் அது தானே. என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கடும் கோபத்தைத் பதிவு செய்திருக்கின்றனர்.

ரகுராம் ராஜன் சில தினங்களுக்கு முன் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. "லேஹ்மேன் பிரதர்ஸ் பிரச்னையை விடுங்கள் இந்தியா இன்னும் 2008 பொருளாதார நெருக்கடியில் இருந்தே இன்னும் விடுபவில்லை".

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dena,Vijaya,Bank of baroda bank merger A A basic details

Dena,Vijaya,Bank of baroda bank merger A A basic details
Story first published: Tuesday, September 18, 2018, 13:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X