ரூ. 15 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் இருக்கா? அப்ப கார் ஓட்டலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையமான ஐஆர்டிஏஐ கார் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் 750 ரூபாய் அளித்துக் காப்பீடு பெற்று இருக்கும் நிலையில் சாலை விபத்தில் இறக்க நேர்ந்தால் இருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வரையில் காப்பீடு அளிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றைக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது.

 

தற்போது இரண்டு சர்க்கர வாகனங்கள் மற்றும் தனியார் கார் / வணிக வாகன உரிமையாளர்கள் தங்களுக்கான பாலிசியை 700 ரூபாய் பிரிமியம் செலுத்தி வாங்கும் போது 1,00,000 முதல் 2,00,000 ரூபாய் வரை மட்டுமே காப்பீடு தொகை மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.

காப்பீட்டு நிறுவனங்கள்

காப்பீட்டு நிறுவனங்கள்

சில காப்பீட்டு நிறுவனங்கள் இப்போதே ஆட் ஆன் திட்டங்கள் மூலம் அதிகக் காப்பீட்டினை அளித்து வந்த நிலையில் அதற்குக் கூடுதல் கட்டணத்தினைச் செலுத்த வேண்டி இருந்தது. இந்தக் காப்பீடு தொகையினை உயர்த்த வேண்டும் என ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஐஆர்டிஏஐயிடம் நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வந்தன.

உயர் நீதிமன்றம்

உயர் நீதிமன்றம்

இதற்கிடையில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ்க்கு எதிராக வழக்கு தொடர்ந்த ரேக்கா தனது கணவர் இறப்புக்கு இவர்கள் அளிக்கும் 1 லட்சம் ரூபாய் காப்பீடு போதாது என்று வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 35 லடம் ரூபாயினை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்து இருநத்து.

யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ்
 

யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ்

இதனை எதிர்த்து யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பிட்டு ஒழுங்கு முறை ஆணையத்திடம் சென்றது. இது குறித்து விசாரித்த ஐஆர்டிஏஐ 15,00,000 லட்சம் ரூபாயாகக் காப்பீட்டுத் தொகையினை உயர்த்தி அறிவித்துள்ளது.

 ஐஆர்டிஏஐ

ஐஆர்டிஏஐ

ஐஆர்டிஏஐ வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினால் கார் உரிமையாளர்கள் மோட்டார் காப்பீடு பெறும் போது கார் ஓட்டுநருடன் சேர்த்து 15 லட்சத்தினை உறுதிப்படுத்திய தொகையாக அளிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 எப்போது முதல்?

எப்போது முதல்?

காப்பீட்டு நிறுவனங்கள் இந்தச் சுற்றறிக்கையினைப் பெற்றது முதலே பாலிசிதார்களுக்கு இந்த 15 லட்சம் ரூபாய் காப்பீட்டு நன்மையுடன் விற்கலாம் என்றும் ஐஆர்டிஏ குறிப்பிட்டுள்ளது.

பிற விதிமுறைகள் எல்லாம் முன்பு இருந்தது போலவே தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 வரவேற்பு

வரவேற்பு

ஐஆர்டிஏஐ-ன் இந்த முடிவு வரவேற்க தக்கது என்றும் இதனால் கார் உரிமையாளர்கள் மட்டும் இல்லாமல் ஓட்டுனர்களின் குடும்பமும் பெறும் அளவில் பயனடையும் என்றும் ஓசூர் டாடா ஏஐஜி கிளையின் சிஎஸ்எம் அருன் குமார் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் தெரிவித்தார்.

மேலும் கார் உரிமையாளர் வாகனத்திற்கான காப்பீடும், ஓட்டுனர் தனது உரிமத்தினைக் காலாவதி ஆகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் காப்பீடு தொகையினைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றறிக்கை

சுற்றறிக்கை

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IRDAI Makes Rs 15 lakh accident cover must for motor owners

IRDAI Makes Rs 15 lakh accident cover must for motor owners
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X