மாருதி 800-ல் போகும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி தெரியுமா?#HBDManmohanSingh

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன்மோகன் சிங், ஒரு பஞ்சாபி, காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த அப்பாவி, பொருளாதார மேதை போன்ற பொதுவான விஷயம் தெரியும். வேறு என்ன எல்லாம் தெரியும். பாருங்களேன்

 

படிப்பில் படுசுட்டி மன்மோகன் சிங்

படிப்பில் படுசுட்டி மன்மோகன் சிங்

இளங்கலை மற்றும் முதுகலைப் பொருளாதாரம், பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர். முதல் மாணவராகவே படிப்பை தொடங்கினார், முடித்தார்.

Economics Tripos என்கிற தலைப்பில், இங்கிலாந்தின் கேம்பிரிட்க் பல்கலைக்கழகத்தில் படித்தார். அதிலும் 1st க்ளாஸ் தான்.

பின் முனைவர் பட்டத்துக்கு "இந்தியாவின் ஏற்றுமதி 1951 - 60 வரை, இனி இந்ஹிய ஏற்றுமதி எப்படி எல்லாம் வலரும் மற்றும் அதற்கான திட்டங்களை அமல்படுத்துவது"என்கிற தலைப்பில் தீவிரமாக ஆராய்ந்து ஆக்ஸ்ஃபோர்டில் சமர்பித்து தன் டாக்டர் பட்டம் பெற்றார்.

 

முதல் புத்தகம்

முதல் புத்தகம்

அவருடைய முனைவர் பட்டத்துக்கு செய்த ஆராய்ச்சியே "India's Export Trends and Prospects for Self-Sustained Growth" என்கிற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியானது. அநேகமாக இது தான் அவரின் கடைசி புத்தகமும் கூட என்று நினைக்கிறேன். அவருடைய சுய சரிதையைக் கூட "Strictly Personal" என்கிற பெயரில் தமன் சிங் எழுதினார்.

 ஜுவான் ராபின்ஸன்
 

ஜுவான் ராபின்ஸன்

மன்மோகன் சிங்கைக் கவர்ந்த திறமையான இங்கிலாந்து பொருளாதார மேதை மற்றும் ஆசிரியை. இவர் எழுதிய "An Essay on Marxian Economics" பிரசித்தி பெற்ற பொருளாதார புத்தகங்களில் ஒன்று. இவருக்கு வலுவான இடதுசாரிப் பொருளாதார கொள்கைகள் மீது நம்பிக்கை உண்டு. நம் முன்னாள் பிரதமர் இவரிடமும் பாடம் படித்தார். மன்மோகன் சிங்குக்கு பிடித்தமான ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.

 ஹிந்தி பிரச்னை

ஹிந்தி பிரச்னை

இவருக்கு ஹிந்தி அவ்வளவாக வராது. தாய் மொழி பஞ்சாபி, இவர் பிறந்த இடம் பழைய ஒருங்கிணைந்த இந்தியாவில் காஹ் (Gah) எனும் இடம் தான். தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபோடு இருக்கிறது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எனவே ஹிந்தியில் பேச வேண்டியவைகளை எல்லாம் உருதுவில் எழுதப்படும், அதை வைத்து தான் மேற்படி சமாச்சாரங்கள் எல்லாம்.

பிரதமர் பதவி

பிரதமர் பதவி

நேருவுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிரதமராக இருந்த பெருமை நம் சிங்கையே சேரும். அதோடு இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமரும் நம் சிங் தான்.

திறமையால் வந்த அரசியல் வாய்ப்பு

திறமையால் வந்த அரசியல் வாய்ப்பு

பி வி நரசிம்மா ராவ் காலம் வரை அரசுப் பதவிகளில் மட்டுமே பணியாற்றி வந்த மன்மோகன் சிங், நரசிம்மா ராவ் காலத்தில் தான் நிதி அமைச்சர் ஆகிறார். அதுவும் நரசிம்மா ராவின் கட்டாயத்தின் பேரில். அதுவரை அரசியலில் ஈடுபாடே கிடையாது. இவரை முதன் முதலில் கண்டு பிடித்து இந்திய அரசாங்க வேலைகளுக்கு மடைமாற்றியவர் லலித் நாராயண் மிஸ்ரா.

எந்த பிரதமருக்கும் இல்லாத பொருத்தம்

எந்த பிரதமருக்கும் இல்லாத பொருத்தம்

இவர் மட்டும் தான் திட்டக் குழுவில் பணியாற்றியது, ஆர்பிஐ-ன் தலைவராக இருந்தது, முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்தது என்று நாட்டின் பல்வேறு நுணுக்கமான பொருளாதார பதவிகளில் இருந்து பிரதமர் ஆனவர். நிதி அமைச்சராகக் கூட இந்திரா காந்தி போன்ற சில பிரதமர்கள் இருந்திருக்கிறார்கள்.

மன்மோகன் சிங்குக்கு பிடித்த ஸ்நாக்ஸ்

மன்மோகன் சிங்குக்கு பிடித்த ஸ்நாக்ஸ்

இவருக்கு சமோஸாவும், கச்சோரியும் மிகவும் பிடிக்குமாம். என்ன பிஸ்கெட் பிடிக்கும் என்றால் மேரி பிஸ்கேட்டும், டீயும் அத்தனை பிடிக்குமாம். இது போல தோக்லா என்கிற வட இந்திய கேக்கும் ரொம்பப் பிடிக்குமாம்.

1991

1991

இந்த காலகட்டத்தில் தான் LPG என்றழைக்கப்பட்ட லிபரலைசேஷன், பிரைவெட்டைசேஷன் மற்றும் குளோபலைசேஷன் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தின் சூத்திரதாரி நம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தான். அந்த முடிவு சரியோ தவறோ, ஆனால் அன்றைய தேதியில் இந்தியாவுக்கு இல்லாத அந்நிய செலவாணியை அதிகரிக்கச் செய்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஓரளவுக்கு இந்தியாவின் நிதி நிலைமையை சீராக்கிய பெருமை நிச்சயமாக இவரைச் சேரும். இதற்கு இவர் எடுத்த முடிவுகள், செய்த திட்டங்களை எல்லாம் தனியாக ஒரு புத்தகமே போடலாம் அந்த அளவுக்கு பெரிய சப்ஜெக்ட்.

மாருதி 800

மாருதி 800

இவர் ஆட்சிக் காலத்தில் தான் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் என்று லட்சம் கோடி ஊழல்கள் எல்லாம், உருவெடுக்கத் தொடங்கி இருந்தது. ஆனால் இந்த மனிதர் இவ்வளவு வாங்கி இருப்பார் என்று ஒரு இந்தியர் கூட மன்மோகன் சிங் மீது குற்றம் சாட்டவில்லை. அந்த அளவுக்கு நேர்மையானவர், கை சுத்தமானவர். இன்று வரை தன் பழைய மாருதி 800-ல் தான் டெல்லியில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அந்த பழைய மாருதி 800-ம் இவர் நேர்மையின் சாட்சியமாக ஓடிக் கொண்டிருக்கிறது.#HDBManmohanSingh

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

do you know this facts about india's ex prime minister manmohan singh

do you know this facts about india's ex prime minister manmohan singh
Story first published: Wednesday, September 26, 2018, 14:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X