நிச்சயமா சம்பளம் தர்றோம், வேலைய பாருங்க ப்ளீஸ் - கதறும் ஜெட் ஏர்வேஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் விமான சேவை நடத்தும் நிறுவனங்கள் மொத்தம் நான்கு தான். ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ. இதில் இண்டிகோ நிறுவனம் மட்டுமே லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

 

என்ன பிரச்னை

என்ன பிரச்னை

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பணி புரியும் பலருக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் முழுமையாகத் தரப்படவில்லை. முதல் தவனையாக ஆகஸ்ட் மாத சம்பளம் கொடுக்கப்பட வேண்டிய நேரத்தில் 50 சதவிகித சம்பளத்தை மட்டுமே கொடுத்தது ஜெட் ஏர்வேஸ்.

கொந்தளித்த பணியாளர்கள்

கொந்தளித்த பணியாளர்கள்

வேலைய மட்டும் கரெக்டா வாங்கத் தெரியுதுல்ல, எங்க சம்பளம் என்று பணியாளர்களும் சரமாரியாக நிர்வாகத்தை கேட்டிருக்கிறார்கள். எப்படியும் தருவோம் என்று சப்பைகட்டு கட்டிய நிர்வாகத் தினரிடம் திட்ட வட்டமான தேதியை தெரிந்து கொள்ளாமல் போக மறுத்தனர்

அடுத்த மாதத்துக்குள்

அடுத்த மாதத்துக்குள்

எப்படியோ பிரச்னை மேலிடம் வரை போக, அடுத்த செப்டம்பர் 2018-க்குள் தங்களுக்கு முழு ஆகஸ்ட் சம்பளத்தையும் கொடுத்துவிடுவோம் என்று உறுதியளித்த பின்னரே பணியாளர்கள் சமாதானம் அடைந்து விலகிச் சென்றனர்.

 பாதி சம்பளம்
 

பாதி சம்பளம்

செப்டம்பர் மாதம் கொடுக்க வேண்டிய ஆகஸ்ட் மாத சம்பளத்தில், முதலில் விமான ஓட்டிகள், முக்கிய அதிகாரிகள், டெக்னிக்கல் பணியாளர்கள் என்று மிக முக்கியமானவர்களுக்குச் சேர வேண்ய மீதமுள்ள 50 சதவிகித ஆகஸ்ட் சம்பளத்தில் பாதி தொகையை மட்டுமே தற்போது வழங்கி இருக்கிறது ஜெட் ஏர்வேஸ். மீதமிருக்கும் பணியாளர்களுக்கு இன்னும் சம்பளம் கொடுப்பது பற்றி பச்சே எடுக்கவில்லை.

மீதி சம்பளம்

மீதி சம்பளம்

மீதமுள்ள 25 சதவிகித சம்பளத்தை வரும் அக்டோபர் 09, 2018க்குள் வழங்கப்படும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பணியாளர்களுக்கு வாக்கு உறுதி அளித்திருக்கிறது.

 பெட்ரோல் செலவுக்கே காசு இல்ல

பெட்ரோல் செலவுக்கே காசு இல்ல

ஜெட் ஏர்வேஸ் நிறுவனமோ, அதிகரித்து வரும் ஏர் டர்பைன் ஃப்யூலலின் (Air Turbine Fuel) விலையை (விமான எரிபொருள்) சமாளிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதோடு கடாந்த ஜூன் 2018 காலாண்டில் 1,323 கோடி ரூபாய் நஷ்டத்தையும் பதிவு செய்தது ஜெட் ஏர்வேஸ். இந்திய விமான நிறுவனங்களான பைஸ் ஜெட்டும் கடந்த ஜூன் காலாண்டில் 97 சதவிகித நஷ்டத்தையே பதிவு செய்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

We will pay the salary please get bace to work, request by jet airways to their staff

We will pay the salary please get bace to work, request by jet airways to their staff
Story first published: Thursday, September 27, 2018, 13:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X