யார் இவங்க. லோடி ரோட் ப்ராஜெக்ட்ல வீடு வாங்குனவங்க... டைம் இல்ல அப்புறம் பாக்கலாம்.

ansal housing and construction company fails to give home for the last 8 years. அன்சல் நிறுவனம் கடந்த எட்டு வருடங்களாக ஒரு திட்டத்தை முடிந்து தர வேண்டிய 750 வீடுகளைத் தரவில்லை.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 யார் இவங்க. லோடி ரோட் ப்ராஜெக்ட்ல வீடு வாங்குனவங்க... டைம் இல்ல அப்புறம் பாக்கலாம்.

தலைப்பிலேயே புரிந்திருக்கும். ஒரு ரியல் எஸ்டேட் முதலாளியிடம் காசு கொடுத்துவிட்டு, அவர்கள் எப்போது வீட்டைக் கட்டி முடிப்பார்கள், பால் காய்ச்ச தேதி குறிக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் ஒரு சராசரி இந்தியக் குடிமகனின் பிரச்னை. அந்த நிறுவனத்தின் பெயர் Ansal housing and construction.

 

ரியல் எஸ்டேட்  நிறுவனம்

ரியல் எஸ்டேட் நிறுவனம்

அன்சல் ஹவுசிங் & கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி, லோடி ரோட்டில் "அன்சல் 86" என்கிற அபார்ட்மெண்ட் ரக வீட்டு கட்டுமானத் திட்டத்தை 2010-ல் தொடங்கியது. மொத்த நிலப்பரப்பு 10.5 ஏக்கர். மொத்த வீடுகளின் எண்ணிக்கை (அதாவது ஏமாறியவர்களின் எண்ணிக்கை) 750. கட்டுமானம் சட்டப்பட முடிய வேண்டிய ஆண்டு 2014.

கடன் வாங்கிக் கொடுத்த பணம்

கடன் வாங்கிக் கொடுத்த பணம்

அன்சல் 86 திட்டத்தில் இருந்த மொத்த வீடுகளையும் மக்கள் வாங்கிய பிறகு , கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை வாங்கியவர்களிடம் இருந்து மொத்த வீட்டுக்கான தொகையையும் வாங்கிக் கொண்டார்கள், அன்சல் நிறுவன் ஆட்கள். iந்ஹ 750 பேரில் சுமாராக 90 சதவிகிதத்தினர், இந்த வீட்டுக்கான தொகையை தங்கள் கடன் தொகையில் இருந்து தான் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். திட்டம் தொடங்கிய ஒரு வருடத்துக்குள்ளேயே அனைத்து வீடுகளையும் விற்று விட்டது அன்சல் நிறுவனம்

என்ன பிரச்னை
 

என்ன பிரச்னை

இப்போது நாங்கள் வீட்டுக்கு தனியாக வாடகையையும் கொடுத்துக் கொண்டிருக்கும், வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ-க்களையும் செலுத்திக் கொண்டிருக்கிறோம், நாங்கள் செலுத்தும் இ.எம்.ஐ-க்களுக்கு வரி விலக்கு எடுத்துக் கொள்ள முடியாததால், செலுத்தும் இ.எம்.ஐ-க்களுக்கும் சேர்த்து வரியைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு விஷயத்தால் மூன்று முனைகளில் இருந்து வரும் நிதிப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது.

போராட்டம்

போராட்டம்


2014-ம் ஆண்டிலேயே சொன்ன நேரத்தில் வீடுகள் கொடுக்கப்படவில்லை என்று 750 வீட்டு ஓனர்களும் ஒன்று சேர்ந்து நிறுவனத்தை முற்றுகையிட்டு நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பல கட்ட சமாதானத்துக்குப் பிறகு 2017-ம் ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்துக்குள் இந்த திட்டத்தை முடித்துக் கையில் கொடுத்துவிடுவோம் என்று உறுதி அளித்தது அந்த நிறுவனம்.

திரண்ட ஓனர்கள்

திரண்ட ஓனர்கள்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அன்சல் ஹவுசிங் அண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் (Annual General Meeting) நடக்க இருந்ததை அறிந்த வீட்டு ஓனர்கள், அனைவரும் ஒன்று திரண்டு நிறுவனரை சந்திக்கச் சென்றிருக்கின்றனர்.

டைம் இல்ல, டைம் இல்ல

டைம் இல்ல, டைம் இல்ல

பிரச்னையை புரிந்து கொண்ட அன்சல் நிறுவனம், வீட்டு ஓனர்களை அருகில் கூட வந்து பேசாமல் தங்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பி இருக்கிறார்கள். அந்த அன்சல் நிறுவனத்தின் நிறுவனர் வெளியே வந்து இவர்கள் யார் என்று செக்யூரிட்டிகளிடம் கேட்டிருக்கிறார், நம் நிறுவனத்தின் அன்சல் 86 லோடி ரோட் ப்ராஜெக்ட்ல வீடு வாங்குனவங்க... என்று சொன்னதும் "டைம் இல்ல அப்புறம் பாக்கலாம்." என்று தன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

நான்கு மணிநேரக் காத்திருப்பு

நான்கு மணிநேரக் காத்திருப்பு

நாங்கள் ஏதோ பிச்சைக் காரர்கள் போல இந்த நிறுவனத்திடம் எங்கள் வீட்டுக் கடன் காசைக் கொடுத்துவிட்டு காத்திருக்கிறோம் என்று கதறுகிறார்கள் வீட்டு ஓனர்கள். எங்களில் பல பேர் சர்க்கரை நோயாளிகள். இவர்களுக்கு குடிக்க ஒரு வாய் தண்ணீர் கூட தரவில்லை. நான்கு மணி நேரமாக இவர்களைச் சந்திக்க காத்திருந்தோம் "நேரமில்லை என்று சொல்கிறார்கள். இந்த கருமத்தை வீடு வாங்கும் போது சொல்லி இருந்தால் எங்களுக்கு இந்த பிரச்னையே வந்திருக்காதே" என்று அழுகை கலந்த புலம்பலைக் கேட்க முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: home house rent housing
English summary

ansal housing and construction company fails to give home for the last 8 years

Ansal housing and construction company fails to give home for the last 8 years.
Story first published: Saturday, September 29, 2018, 16:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X