2018-ம் ஆண்டுக்கான உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலைத் தொடர்ந்து இந்தியாவிற்கான கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் பாதித்ததினை தொடர்ந்து தற்போது சீராகி வேகமாக வளர்ந்து வருகிறது.
பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற சூறாவளிகளில் இருந்து வெளியேறி இந்த ஆண்டு இந்திய கோடீஸ்வரர்களின் செல்வ மதிப்பு அதிகரித்து இருப்பதைக் காண முடிகிறது. எனவே 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் 2018-ம் ஆண்டு இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் யார் மற்றும் அவர்களது செல்வ மதிப்பு எவ்வளவு என்று இங்குப் பார்ப்போம்.

10. கவுதம் அதானி
அதானி குழுமத்தின தலைவரான கவுதம் அதானியின் செல்வ மதிப்பு 11.9 பில்லியன் டாலர்கள் ஆகும்.

9. குமார் மங்களம் பிர்லா
ஆத்தயா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லாவின் செல்வ மதிப்பு 12.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.

8. திலிப் ஷாங்வி
சன் பார்மாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான திலிப் ஷாங்வியின் செல்வ மதிப்பு 12.6 பில்லியன் டாலர்களாகும்.

7. கோத்ரேஜ் குழுமம்
கோத்ரேஜ் குழுமத்தின் மொத்த செல்வ மதிப்பு 14 பில்லியன் டாலர்கள் ஆகும்.

6. ஷிவ் நாடார்
எச்சில் நிறுவன தலைவரான ஷிவ் நாடாரில் மொத்த செல்வ மதிப்பு 14.6 பில்லியன் டாலர் ஆகும்.

5. பொலஞ்சி மிஸ்ட்ரி
ஷாபூர்ஜி பொலஞ்சி குழுமத்தின் முன்னாள் தலைவரான ப்லஞ்சி மிஸ்ட்ரியின் மொத்த செல்வ மதிப்பு 15.7 பில்லியன் டாலராகும்.

4. இந்துஜா குழுமம்
இந்துஜா குழுமத்தின் இந்துஜா பிரதர்ஸ்களின் மொத்த செல்வ மதிப்பு 18 பில்லியன் டாலர்களாகும்

3. லக்ஷ்மி மிட்டல்
அர்செலோர் மிட்டல் நிறுவனத்தின் தலைவரான லக்ஷ்மி மிட்டலின் மொத்த செல்வ மதிப்பு 18.3 பில்லியன் டாலராகும்.

2. அசிம் பிரேம்ஜி
விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜியின் மொத்த செல்வ மதிப்பு 21 பில்லியன் டாலராகும்.

1. முகேஷ் அம்பானி
ஃபோர்ப்ஸ் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 11 வது ஆண்டாக முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரராக உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானியின் மொத்த செல்வ மதிப்பு 47.3 பில்லியன் டாலராகும்.