15 லட்சத்தில 6.5 லட்சம் போட்டாச்சுங்க, கணக்கு சொல்லும் Modiji ! மோடியுடன் ஒரு தமிழனின் நேர்காணல்..!

By வாசகர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாமானியன்:

ஐயா மோடிஜி (Modiji), நீங்க ஆட்சிக்கு வந்ததும் எல்லோருக்கும் தரேன்னு சொன்ன 15,00,000 லட்சம் பணம் எப்ப தருவீங்க...⁉️ ஏழை பால மக்களுக்கு ஒவ்வொருத்தருக்கா போய் கொடுக்க முடியாதுன்ன ஜன் தன் திட்டம் மூலமா பேங்க் அக்கவுன்ட் எல்லாம் ஓப்பன் பண்ணிக் கொடுத்தீங்க. எங்க பேங்க் அக்கவுன்ட்ல எப்ப காச வரவு வெக்கப் போறீங்க?

 

#1

#1

மோடி:
தம்பி, எந்த காலத்துல இருக்கீங்க...? உங்க அக்கவுன்டுல ஏற்கனவெ பணம் போட்டாச்சு. சரியா செப்டம்பர் 2018 வரைக்கும் 6,37,200 ரூபாய் வரவு வெச்சுட்டோம். என்ன நீங்க, கவனமா இருக்க வேண்டாமா?

சாமானியன்:
சார், எனக்கு இருக்குறதே மூனு பேங்க் அக்கவுன்ட் தான். எந்த பேங்க் அக்கவுன் ட்லயும் நீங்க சொல்ற 6,63,750 ரூபாய் பணம் வரல. நீங்க சொன்னதால ஆதார் கார்ட் எல்லாம் கூட இணச்சிட்டேன். கொஞ்சம் என்னன்னு பாருங்க.

 

#2

#2

மோடி:
தம்பி கொடுத்தா காசாத் தான் திரும்ப கொடுக்கணுமா..? எந்த பேங்க் அக்கவுண்டலயு வரவு வெக்கல. உங்களுக்கு சேமிச்சுக் கொடுத்திருக்கேன்.

சாமானியன்:
எப்புடிங்க ஐயா.

 

#3
 

#3

மோடி:
அதுக்குத் தான் எல்லோருக்கும் ஜியோ சிம் கார்ட் கொடுத்தாச்சே?

சாமானியன்:
என்னாது ஜியோ சிம் கார்டா? அதுக்கும்
இந்த 15,00,000 லட்சத்துக்கும் என்ன சம்பந்தம்.

 

#4

#4

மோடி:
ஒரு நோட்டு ஒரு பேனா எடுத்துக்குங்க.

சாமானியன்:
ஓகே சார்.

 

#5

#5

மோடி:
எங்க ஆட்சி வர்றதுக்கு முன்னாடி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்துல அதாவது 2014க்கு முன்னாடி 1 ஜிபி டேட்டா எவ்வளவுக்கு வாங்குனீங்க ???

சாமானியன்:
தோராயமா 300 ரூபாய்க்கு.

 

#6

#6

மோடி:
கரெக்டா சொல்றீங்களே... சூப்பர். இப்போ எவ்ளோ ரூபாய்க்கு வாங்குறீங்க?

சாமானியன்:
சுமாராக 150 ரூவாக்கு, 30 நாளுக்கு 1 ஜிபி டேட்டா. அப்படி 150 / 30 =5. ஐயா ஒரு ஜிபி 5 ரூபா கணக்கு வருதுங்க.

 

#7

#7

மோடி:
பகுத் அச்சா பேட்டா... இப்ப 2014க்கு முன் 1 ஜி பி டேட்டாக்கு கொடுத்த 300 ரூவா, மைனஸ் 2018-ல் 1 ஜிபிக்கு டேட்டாக்கு கொடுக்குற 5 ரூவா பண்ணா எவ்வளவு வருது?

சாமானியன்:
295 ரூபாய். வருதுங்க ஐயா.

 

#8

#8

மோடி:
எந்த ஸ்கூல்ல படிச்சீங்க. டக்டக்குன்னு பதில் சொல்றீங்க. சரி இப்ப ஒரு மாசத்துக்கு நீங்க 30 ஜிபி பயன்படுத்துறீங்க. அத கணக்குல, ஒரு நாளைக்கு 1 ஜிபி யூஸ் பண்ணுறீங்க. அப்பிடினா,
ஒரு மாசத்துக்கு எவ்வளவு 295 ரூபாய் மிச்சம்?

சாமானியன்:
30 x 295 = 8,850 ரூவாங்க.

 

#9

#9

மோடி:
3 பேரு இன்டர்நெட் யூஸ் பண்ணுற ஒரு குடும்பத்துல, ஒரு மாசத்துக்கு எவ்வளவு 8,850 ரூவா மிச்சமாகும்.

சாமானியன்:
8850 x 3 = 26,550 ரூபாய். (மைண்ட் வாய்ஸ்: என்ன நாம கேட்ட கேள்விக்கு என்னமோ கணக்கு சொல்றாரு)

மோடி:
அப்போ ஒரு வருஷத்துக்கு எவ்ளோ 26,550?

சாமானியன்:
26550 x 12 = 3,18,600 ரூபாய்.

 

#10

#10

மோடி:
ஜியோ சிம்ம எப்ப தொடங்கி வெச்சேன்.

சாமானியன்:
நியாபகம் இல்லிங்களே... என்னயா தமிழன் நீ. என் போட்டோவ கூட அம்பானிப் பய ஜியோ லாஞ்ச அப்ப யூஸ் பண்ணி பெருசா டிரெண்ட் எல்லாம் ஆனுச்சே. செப்டம்பர் 1-ம் தேதி, ரிலையன்ஸ் Annual General Meeting கூட டிரெண்டு ஆனுச்சேப்பா..? உங்க ஊர் காரணுக என்னன்ன கருப்பு பலூன் எல்லாம் விடுறாய்ங்க. நீ என்னடான்னா விவரம் தெரியாம இருக்கியேப்பா.

சாமானியன்:
ஆமாங்க... நியாபகம் வந்துருச்சு, 01 செப்டம்பர் 2016.

மோடி:
இன்னிக்கு என்ன தேதி 06 அக்டோபர் 2018. சரி செப்டம்பர் 2018 வரை கணக்கு வெச்சுப்போம். ஆக 25 மாசம். மாசத்துக்கு 26,550 -ஐ 25 மாசத்துக்கு பெருக்கு.

 

#11

#11

மோடி:
இப்ப கணக்கு சரியா வந்துருச்சா. நான் மேல சொன்ன 6,63,750 ரூவாய உங்களுக்கு எந்த வரிப் பிடித்தம், காலால் வரி, சுங்க வரி எல்லாம் இல்லாம மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கேன். இதுவே நீங்க வருமான வரித் துறை கிட்ட ஒரு வீட்டு லோனோ, வீட்டு வாடகையோ கணக்கு காட்டனும்னா கூட அதுக்கு தேவையான தஸ்தாவேஜ் எல்லம் வேணும். அதெல்லாம் இல்லாம ரொம்ப சிம்பிளா பண்ணிக் கொடுத்திருக்கேன் தம்பி. "ஹமார் டாமிழ் பாய்யோ, அவுர் பெஹனோ, இப்போதிக்கு 6,63,750 ரூவா கொடுத்திருக்கேன், இனிமே ஒவ்வொரு செப்டம்பர் மாசம் வர்றப்பவும் உங்களுக்கு என்னோட 17-ம் தேதி பொறந்த நாள் நியாபகம் வர்ர அதே நேரத்துல இந்த வருஷம் நமக்கு மோடி 3,18,600 ரூவா கொடுத்திருக்கிறது நியாபகம் வரட்டும், ஜெய் ஸ்ரீராம்".

சாமானியன்:

உங்கள எங்க பிரதமர்-ன்னு சொல்லிக்கறதுக்கே ரொம்ப பெருமையா இருக்குங்க. இந்தியா வெளங்கிடும். அடுத்து எங்க ஊர் சுத்தப் போறீங்க சார்.

மோடி:
"டீகே... டீகே... தேகேங்கே, ஹம்கோ மதராஸ் பகுது க்ளோஸ் ஹே" பலூனாடா விடுறீங்க பலூனு, இப்ப கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வருதா...?

 

#12

கொய்யால... இனி 15 லட்சம் பத்தி வாயத் தொறப்ப...

வசு தேவ கிருஷ்ணா என்பவர் "மோடியின் ஒரு கையெழுத்துக்கு 78 பில்லியன் டாலர் விலை கொடுத்த இந்தியா... சிரிக்கும் அமெரிக்கா.!"

என்கிற கட்டுரைக்கு முகநூலில் தன் கமென்டைப் பதிவு செய்திருந்தார். அந்த கருத்தை கொஞ்சம் மெருகேற்றி இருக்கிறோம். உண்மையான கமெண்டைப் பார்க்க மேலெ கொடுத்திருக்கும் லிங்கை க்ளிக்கவும்.

ஏங்க நீங்க பாட்டுக்கு இப்ப 15 லட்சம் ரூபாய்க்கு கணக்கு சொல்லிக் காட்டிட்டீங்க... பாஜகாவும் இந்த ஐடியா நல்லா இருக்கேன்னு, இதே விளக்கத்த மக்கள்கிட்ட சொல்லிட்டா மொத்த இந்தியாவும் உங்கள ஒரு வழிப் பண்ணிடுவாங்க.... கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க பாஸ்.

15 லட்சம் ரூபாய் கெடச்சிருச்சு சரி... அப்ப பெட்ரோல், டீசல் மத்த விலை வாசி எல்லாத்தையும் எந்த கணக்குல கொண்டு போய் சேப்பீங்க. அடுத்த விளக்கத்துக்கு ரெடியாவுங்க பாஸ்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A common tamilian interview with narendra modiji

A common tamilian interview with narendra modiji
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X