பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரியின் தகவலை திருடி 20 கோடி ரூபாய் கேட்ட உதவியாளர் கைது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேடிஎம் மொபைல் வாலெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜய் சேகர் சர்மாவின் தனிநபர் விவரங்களைத் திருடி 20 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக அவரது தனிப்பட்ட உதவியாளர் உட்பட 3 நபர்களைக் காவல் துறையினைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

விஜய் சேகர் ஷர்மாவின் தனிப்பட்ட உதவியாளராக இருந்து வந்த அந்தப் பெண் ஊழியருக்கு அவரது லேப்டாப்பில் உள்ள கோப்புகளை அணுக அனுமதிகள் வழங்கப்பட்டு இருந்தது. அதனைப் பயன்படுத்திய அந்தப் பெண் உதவியாளர் அந்தத் தகவல்களைத் திருடி 20 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

மூன்று குற்றவாளிகள்

மூன்று குற்றவாளிகள்

அந்தப் பெண் ஊழியருடன் ரியல் எஸ்டேட் வணிகம் செய்து வரும் அவரது கணவர் மற்றும் பேடிஎம்-ன் மற்றோறு ஊழியரான தேவேந்திர குமாரும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

10 வருட உதவியாளர்

10 வருட உதவியாளர்

விஜய் சேகர் ஷர்மாவின் அண்ணன் அஜய் சேகர் ஷர்மாவும் பேடிஎம் நிறுவனத்தின் மூத்த துணை தலைவராக உள்ளார். அவர் இந்த மோசடி குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்ட போது ‘அந்தப் பெண் உதவியாளர் தனது தம்பிக்குக் கீழ் கடந்த 10 வருடங்களாகப் பணிபுரிந்து வந்ததாகவும், அவருக்கு விஜய் சேகர் ஷர்மாவின் கணினியில் உள்ள கோப்புகளை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது என்றும் அதனைப் பயன்படுத்தி இந்த மோசடி நடைபெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

 பேடிஎம் ஊழியர்
 

பேடிஎம் ஊழியர்

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் அட்மின் பிரிவில் உள்ள தேவேந்திர குமார் என்பவர் கொல்கத்தாவில் உள்ள தனக்குத் தெரிந்த ரோகித் சோமால் என்பவரின் மூலம் விஜய் சேகர் ஷர்மா மற்றும் அவரது அண்ணன் அஜய் சேகர் சர்மாவினையும் தொடர்புக்கொன்று 20 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.

2 லட்சம் ரூபாய்

2 லட்சம் ரூபாய்

இதனை அடுத்து எந்த மாதிரியான தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள 2 லட்சம் ரூபாயினைச் சம்மந்தப்பட்ட வங்கி கணக்கில் பணத்தினைச் செலுத்தியுள்ளனர். பின்னர்ச் சோல்மால், பெண் ஊழியர், அவரது கணவர் மற்றும் தேவிந்தரா உள்ளிட்டவர்கள் தகவல் திருடியதை தெரிவித்து 10 கொடி ரூபாயினைக் கேட்டுள்ளார்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

பின்னர்ப் பேடிஎம் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் மூவரையும் கைது செய்து பிரிவு 381 (கடத்தல்காரன் அல்லது பணியாளர் உரிமையாளர் அல்லது சொத்துடைமை மூலம் திருட்டு), 384 (மிரட்டலுக்குத் தண்டனை), 386 (அச்சத்தில் ஒரு நபரைக் கொல்வது), 420 (ஏமாற்றுதல்), 408 (குற்றம் அல்லது ஊழியர் ), இந்திய தண்டனைச் சட்டத்தின் 120B (கிரிமினல் சதி) மற்றும் IT சட்டத்தின் பிரிவு, 2008 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காவல் துறைக்கு எதற்காக அந்தத் தகவல்கள் திருடப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை.

பேடிஎம் விளக்கம்

பேடிஎம் விளக்கம்

ஆனால் பேடிஎம் நிறுவனத்தில் திருடு போன தகவல்கள் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுடைய தனிப்பட்ட விவரங்கள். இதற்குச் சாட்சி இவர்கள் போன் அழைப்புகள் மூலம் மிரட்டிய ஆடியோ ரெக்கார்டிங். இதனால் பேடிஎம் பயனர்களால் அச்சம் அடையத் தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

3 held for blackmailing Paytm CEO with stolen personal data

3 held for blackmailing Paytm CEO with stolen personal data
Story first published: Tuesday, October 23, 2018, 16:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X