பதறும் கார்ப்பரேட்..! மக்கள் பணம் 49,000 கோடி போச்சுங்க ஐயா..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னக்கி உலகமே ஒரு விஷயத்தப் பாத்து பயப்படுதுன்னா... அது fake news தான். போர், சூழலியல், அரசியல் எல்லாமே... எல்லாமே அடுத்து தான். யாருக்கும் பயப்படாத பெரியண்ணன் அமெரிக்கா கூட இப்ப fake news-ஐ பாத்து பம்முராங்க.

நாம தான்
 

நாம தான்

இத பரப்புறது... நம்மல மாதிரி சாதாரண ஜனங்க தான். ஒரு வேளை உண்மையா இருந்தா... நம்மலால நாலு பேர் தப்பிப்பாங்க-ங்குற நல்ல எண்ணத்துல தான் செய்றாங்க. ஆனா ஒரு செய்திய எப்படி உண்மையா பொய்யான்னு உறுதிப்படுத்துறது...? ஒரு செய்திய யார் அனுப்புனா...? அத யார் கொஞ்சம் எடிட் பண்ணி பொய்யான செய்தியாக்குனது? எதையும் கண்டு பிடிக்க முடியாது. அது தான் இங்க பிரச்னையே.

அரசியல் டூ கார்ப்பரேட்

அரசியல் டூ கார்ப்பரேட்

அரசியல் கட்சிகங்க, அரசியல் பிரமூகருங்க சம்பந்தப்பட்ட செய்திகளுங்க தான் fake news-ஆக வெளி வந்துக்கிட்டு இருந்துச்சு. இப்ப கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட செய்திகளும் fake news லைன்ல பிரவாகம் எடுக்க ஆரம்பிச்சு இருக்கு. அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள்-ன்னு சொல்றப்ப ஒரு தனி நபர் இல்லன்னா ஒரு கட்சியோட பெயர் தான் விவாதத்துக்கு உட்படும். அதனால் லாபமோ நஷ்டமோ பொருளாதார இழப்புக்களோ இருக்காது. ஆனா ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் பத்தி வெளி வர்ற பொய்யான செய்தி அந்த முதலாளியத் தாண்டி, அந்த நிறுவனத்துல வேலை பாக்குற தொழிலாளி, அந்த நிறுவனத்த நம்பி பிசினஸ் பண்ற காண்டிராக்டர்கள், சப் காண்டிராக்டர்கள், அந்த நிறுவனத்துல முதலீடு பண்ணி இருக்குற மக்கள்-ன்னு ஒரு பெரிய படையே நேரடியா பாதிக்கப்படும். இவங்க எல்லாத்துக்கு நஷ்டம்-ங்குற ரூபத்துல தான் இந்த செய்தி முதல் பாதிப்ப ஏற்படுத்தும். அதுக்கு அப்புறம் தான் அந்த செய்தி உண்மையா பொய்யாங்குற விவாத மேடைக்கே வரும்.

பிரமல் எண்டர்பிரைஸ்
 

பிரமல் எண்டர்பிரைஸ்

சமீபத்துல தான் பிரமல் எண்டர்பிரைஸ்-ன் துணை நிறுவனமான பிரமல் கேப்பிட்டல் அண்ட் ஹவுசிங் ஃபைனான்ஸ்-ங்குற நிறுவனத்துக்கு நஹர் டெவலப்பர்ஸ் மாதிரி பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாங்குன 1800 கோடி கடன திருப்பிக் கட்டலன்னு சொல்லி பங்குகள் விலையை 3050ல இருந்து 2000-க்கு கொண்டு வந்துட்டாங்க. இதனால் மட்டும் சுமாராக மக்கள் பணம் 20,469 கோடி ரூபாய் காலி. இந்த பிரச்னை வந்த உடனேயே பங்குச் சந்தைகள் கிட்ட தன்னுடைய முழு நிதி நிலை அறிக்கையோட ரியல் எஸ்டேட் கம்பெனிங்க லோன் கணக்குகலை சமர்பிச்சு ஒழுக்கமா பிசினஸ் பண்றவங்கன்னு நிரூபிச்சிது. ஆனால் நஷ்டப்பட்ட மக்களுக்கு என்னத்த தர முடியும்.

 திவான் ஹவுசிங்

திவான் ஹவுசிங்

பிரமல் நிறுவனத்துக்கு நடந்த அதே கதி தான் திவன் ஹவுசிங் நிறுவனத்துக்கும். திவான் ஹவுசிங் பங்குகள் சுமார் 610 ரூபாய்க்க்கு வித்துக்கிட்டு இருந்துச்சு. இவங்களுக்கு வர வேண்டிய கடன் வரலன்னு எவனோ போர போக்குல கிளப்பி விட்டாங்க. இப்ப பங்கு விலை 200 தாண்டல. சுமாராக இதுக்கு சுமாரா 12,000 கோடி ரூபாய் நஷ்டம். யார் பணம் மக்கள் பணம்.

இன்ஃபீபீம் அவென்யூ

இன்ஃபீபீம் அவென்யூ

இது ஒரு இ-காமர்ஸ் நிறுவனம். "இன்ஃபீபீம் நிறுவனத்தோட துணை நிறுவனர் வைத்திருக்கும் பங்குகளை, நிறுவனர் அல்லாதவர் வைத்திருக்கும் பங்குகள் என்று தங்கள் நிதி நிலை அறிக்கைகளில் தவறாகக் காட்டி இருக்கிறார்கள்"-ன்னு ஒரு fake news பரவ ஆரம்பிச்சுருச்சு. செப்டம்பர் 28, 2018 காலையில 14,245 கோடி ரூபாயாக இருந்த இந்த பங்குகளின் சந்தை மதிப்பு, அடுத்த சில மணி நேரங்களில் வெறும் 3,900 கோடி ரூபாயாக சரிந்துவிட்டது. மொத்த சரிவு மட்டும் 10,345 கோடி ரூபாய். இப்புடி ஒரே நாள்ள எங்கள நம்பி காசு போட்டு மக்களோட பணம் 70% நஷ்டமுங்க-ன்னு நிறுவனங்களோட அதிகாரிகளே கண்ணீர் விட்டு அழுதாங்க. வளர்ற கம்பெனி இல்ல. வலி அதீகமாத் தான இருக்கும்.

 கல்யான் ஜூவல்லர்ஸ்

கல்யான் ஜூவல்லர்ஸ்

எப்பா கல்யாண் ஜுவல்லர்ஸ்ல நகை நல்லா இல்லாதனால நகையே விக்கிறது இல்ல, சும்மா ஷோக்கு தான் கட நடத்துறாங்க, கருப்புப் பணத்த வெள்ளையா மாத்த கடை நடத்துராங்க, "நம்பிக்கை அதான எல்லாம்" -ன்னு பிரபுவ வெச்சு செஞ்ச விளம்பரத்துல மட்டும் 500 கோடி ரூவாக்கு மேல நஷ்டம், நகை செய்யுறதுல பாதிக்கு பாதி செப்பு கலக்குறாங்கன்னு சொல்லி பல fake news வந்துச்சு. அந்த பிரச்னைய கேரள உயர் நீதி மன்றத்துல முறையிட்டு முழுமையாக தீர்த்து நாங்க நல்ல பிசினஸ் மேன்-ன்னு நிரூபிச்சுது கல்யாண் ஜூவல்லர்ஸ். அதோடு அந்த யூடியூப் வீடியோ போட்டவங்க மேலயும் வழக்கு தொடுத்து தண்டனை வாங்கிக் கொடுத்தாங்க. ஆனா இந்த செய்திய கேட்டு எங்க கடைக்கு வராம போன கஸ்டமர்களை நாங்கள் ரொம்பவே மிஸ் பண்றோமுன்னு ஒரு வார்த்தைய மட்டும் சொன்னாங்க பாருங்க... அந்த வலி பிசினஸ் செய்யுறவங்களுக்கு மட்டும் தாங்க தெரியும்.

 பெப்ஸி

பெப்ஸி

இந்த மாதிரி வளர்ந்த எல்லாத்துக்கும் தெரியாத நிறுவனங்கள விடுங்க. பெப்ஸி உலக மக்கள் எல்லாத்துக்கும் தெரியும். பெப்ஸி குடிச்சுட்டு போலோ இல்லன்னா மென்டோஸ் சாப்டா ஹார்ட் அட்டாக் வரும்ன்னு கெளப்பிவிட்டது எல்லாம் நாம பாத்திருக்கோம். உலகம் முழுக்க இந்த மாதிரி fake news-ஆல் பாதிக்கப்பட்ட விற்பனை சுமாரா 30,000 கோடி ரூபாயாவது இருக்கும்னு பெப்ஸி தரப்பு சொல்றாங்க.

எத்தனை எத்தனையோ

எத்தனை எத்தனையோ

இந்த மாதிரி இன்னும் பல உதாரணம் இருக்கு. டயரி மில்ஸ் சாக்லேட்ல பன்னிக் கறி இருக்கு, குர் குரேல பிளாஸ்டிக் இருக்கு, ரெட் புல் எனர்ஜி டிரிங்க்ல மாட்டோட விந்து அணு இருக்கு-ன்னு சரியான ஆதாரங்கள் இல்லாம நிறைய செய்திங்க வரத் தான் செய்யுது. அத்தனை நிறுவனங்கள் பெப்ஸி மாதிரி சில பல கோடி ரூபாய் வணிகத்த இழக்கத் தான் செய்யுறாங்க.

தீர்வு

தீர்வு

இப்ப வரை, கம்பெனிங்களை பத்தி ஒரு செய்தி சோஷியல் மீடியாக்கள்ள வருதுன்னா அந்த சோஷியல் மீடியா நிறுவனங்கள் கிட்ட முறையிட்டு செய்திகளை பரப்பாம முடக்கச் சொல்லணும். அது மட்டும் தான் இப்ப கையில் இருக்குற எளிமையான செலவு அதிகம் இல்லாத ஒரே தீர்வு. இல்லன்னா முறைப்படி அந்த செய்திய மொதல்ல எழுதி பரப்பிவிட்ட நபரை கண்டு பிடிச்சு வழக்கு தொடரலாம்-ன்னு கம்பெனிங்கள சொல்லுது.

நிறுவன விலை

நிறுவன விலை

ஹிந்துஸ்தான் யுனிலிவர் ஒரு படி மேல போய் இந்தியாவுல ஒரு fake news-ஐ கண்டு பிடிச்சு தடை பண்ற டீம தொடங்கி வேலை பாத்துக்கிட்டு இருக்காங்க. ஒருத்தர் ஒரு செய்தி போடுறார், அவர் பொட்ட செய்தி உண்மை இல்லன்னு ஹிந்துஸ்தான் நிறுவனம் சொல்லுது. செய்தி போட்டவர் அந்த செய்திக்கு தகுந்த ஆதாரம் சமர்பிச்சா, அதை பரிசீலனை பண்ணி அவங்க தரப்பு நியாயத்த வெளி இடுறாங்க. ஒருவேளை செய்தி பரப்புனவர் மேல தப்புன்னா கூப்டு கண்டிக்கிறாங்க இல்ல முறையா வழக்கு தொடுக்குறாங்க. கேட்க நல்லா இருக்குல. ஆனா இந்த டீமுக்கு கொடுக்குற சம்பளம் எல்லாமே அவங்க விக்கிற பொருள் மேல விலையா வந்து உட்காருது. அப்பவும் நாமத் தான் இந்த விலை வாசி ஏற்றத்த அழுதுக்கிட்டே ஏத்துக்கணும். எங்க போனாலும், எப்புடி சுத்திப் போனாலும் நாம தான் எல்லாமே சுமக்கணும்.

ஒரு செய்தி, ஒரே ஒரு செய்தியால இவ்வளவு பிரச்னை இருக்கு மக்களே. கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: pepsi piramal nestle loss crash lost
English summary

50000 crore rupee lost due to fake news campaign for various companies

50000 crore rupee lost due to fake news campaign for various companies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more