கனரா பேங்குல அதிகாரி ஆவணுமா? 6.30 லட்சம் குடு, இல்லன்னா வேலை கிடையாது, என்னங்க புது பிரச்னை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கனரா வங்கி, இந்தியாவில் லாபம் ஈட்டும் அரசு வங்கிகளில் இதுவும் ஒன்று. கர்நாடக மாநிலத்தின் மங்களூரூவில் அம்மெம்பல் சுப்பா ராவ் பாய் என்பவரால் "கனரா ஹிந்து பர்மனெண்ட் ஃபண்டு" என்கிற பெயரில் 1906-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1910-ம் ஆண்டு தான் கனரா வங்கி லிமிடெட் ஆக பதிவு செய்து கொண்டு முழு வங்கி சேவையில் ஈடுபடத் தொடங்கியது. சரித்திரப் புகழ் பெற்ற வங்கி தேசிய மயமாக்கள் திட்டத்தின் கீழ் 19 ஜூலை 1961-ல் கனரா வங்கி அரசுடையை ஆக்கப்பட்டது. 1976லேயே 1000 கிளைகளுடன் இந்தியாவில் வியாபாரம் பார்த்த வங்கி. தற்போது 6300 கிளைகளுடன் கம்பீரமாக லாபம் ஈட்டும் அரசு வங்கிகளில் ஒன்று. இப்போது இந்த வங்கி தான் செய்தியே.

 

பணி இடங்கள் & பதவி

பணி இடங்கள் & பதவி

கனரா வங்கியில் இளநிலை நிர்வாக அதிகாரி பணிக்கு 800 காலிப் பணி இடங்கள் இருக்கின்றன. இதில் 404 பொது பிரிவினருக்கு, 216 பின் தங்கிய பிரிவினருக்கும், 60 எஸ்.டி பிரிவினருக்கும், 120 எஸ்.சி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு

வயது வரம்பு

அக்டோபர் 01, 2018 படி 20 வயதுக்கு மேல் 30 வயதுக்கு உள்ளே இருப்பவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடம், ஓபிசி பிரிவினர் 3 வருடங்கள், உடல் ஊனமுற்றவர்கள் 10 வருடம், முன்னாள் ராணுவத்தினர் 5 வருடங்கள் என்று வயது வரம்பில் தளர்வு அளித்திருக்கிறார்கள்.

கல்வித் தகுதி மற்றும் சம்பளம்
 

கல்வித் தகுதி மற்றும் சம்பளம்

ஏதாவது இளங்களை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் பட்டப் படிப்பில் 55% மதிப்பெண் பெற்று இருந்தால் போதுமானது. மாணவர்களின் கனவு வேலைகளில் மிக முக்கிய அம்சம் சம்பளம். இந்த அதிகாரி பணிக்கு மாதம் 40,000 ரூபாய் வரை சம்பளமாக கிடைக்கும். கணிணி இயக்கத்தில் போதுமான அறிவு கட்டாயம் இருக்க வேண்டும்.

 தேர்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பம்

தேர்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பம்

இந்த கனரா வங்கித் தேர்வில் நீங்களும் பங்கேற்க கட்டணமாக 708 ரூபாய் செலுத்த வேண்டும். ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நவம்பர் 13, 2018 வரை ஆன்லைனில் விண்ணபிக்கலாம். டிசம்பர் 05, 2018 அன்று தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை டவுன் லோடு செய்து கொள்ளலாம். டிசம்பர் 23, 2018-ல் தேர்வு பல்வேறு இடங்களில் ஆன்லைனில் நடத்தப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க:

முழுமையான விளம்பரத்தை ஆங்கிலத்தில் படிக்க :

 பயிற்சி

பயிற்சி

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் Post Graduate Diploma in Banking and Finance (PGDBF) என்கிற பயிற்சிப் படிப்பை, மனிபால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ், பெங்களூருவில் 6.30 லட்சம் ரூபாய் பணம் செலுத்தி படிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் என்டிடிஇ எஜிகேஷன் இன்டர்நேஷனல் என்கிற, கிரேடர் நொய்டாவில் இருக்கும் பயிற்சிப் பள்ளியில் 5.40 லட்சம் செலுத்தி பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த 9 மாத பயிற்சிக்கு அப்புறம் களப் பயிற்சிக்காக கனரா வங்கியின் கிளைகளில்ள 3 மாசம் பயிற்சி அளிப்பார்கள். ஆக ஒரு வருஷம் பயிற்சி. அதில் கனரா வங்கியோடு கிளைகளில் மேற்கொள்ளும் பயிற்சி காலத்தில் மட்டும் மாதம் 10,000 ரூபாய் பயிற்சி உதவித் தொகை வழங்கப்படும்.

பணம் உங்களோடது

பணம் உங்களோடது

தேர்வாகும் மாணவர்கள் தங்கள் கை காசிலேயே படிக்க வேண்டுமாம். மொத்த பயிற்சிக் கட்டணத்தையும் இரண்டு தவணைகளாக செலுத்தலாம். பயிற்சியில் சேறுவதற்கு முன்பே 50% பணத்தை செலுத்தி விட வேண்டும். பயிற்சி தொடங்கி இரண்டு மாதங்களுக்குள் மீதமுள்ள 50% பணத்தை செலுத்தி விட வேண்டும்.

கல்விக் கடன்

கல்விக் கடன்

அப்படி படிக்கத் தயாராக இல்லாதவர்கள், கனரா வங்கி நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், பணி வழங்கப்படாதாம். அப்படி ஒருவேளை பணம் செலுத்த முடியாதவர்கள், ஆனால் பயிற்சியை மேற்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் கனரா வங்கியிலேயே கல்விக் கடன் பெறலாமாம். ஆனால், கனரா வங்கி விதிகள் படி தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படுமாம். குறிப்பாக சிபில் ஸ்கோர் இருக்கணும்ங்க.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

கனரா வங்கியில் பணிக்கு சேருகிறவர்கள், குறைந்தபட்சம் ஐந்து வருடம் கனரா வங்கியல் பணியாற்ற ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தப் படி ஐந்து வருடத்துக்கு முன் பணியைவிட்டு செல்பவர்கள், கனரா வங்கிக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகை செலுத்த வேண்டும். அதோடு கல்விக் கடன் வாங்கி இருந்தால் அதையும் வட்டியும் முதலும் சேர்த்து செலுத்திட்டு போகணும்.

பணம் திரும்ப கிடைக்கும்

பணம் திரும்ப கிடைக்கும்

சரி, எப்புடியோ நீங்களே பணம் கட்டியோ, கல்விக் கடன் வாங்கியோ முழு காச கட்டிட்டீங்க. ஐந்து வருஷமும் சர்வீஸ் கனரா பேங்குல முடிஞ்சிருச்சு. அதற்குப் பின் சிறு சிறு தவணைகளாக ஆறாவது வருடம் தொடங்கி, பத்தாவது வருடத்துக்குள் முழு பயிற்சிப் படிப்புத் தொகையையும் கனரா வங்கியே திரும்பச் செலுத்தும்.

ஹிந்தி தெரியாதா...?

ஹிந்தி தெரியாதா...?

ஹிந்தில working knowledge இருக்கணும்னு சொல்றாங்க. அப்படின்னா படிக்க, எழுத பேசத் தெரிஞ்சி இருக்கணுமான்னு தெரியல. கட்டாயமா பயிற்சிக் காலத்துக்கு உள்ள ஹிந்தி அறிவு தேவைன்னு சொல்லி இருக்காங்க கனரா காரங்க.

ஏங்க... மொதல்ல காசக் குடுன்னீங்க, இப்ப ஹிந்தி கட்டாயம தெரிஞ்சிக்கணும்ங்குறீங்க. வேலை கொடுக்குறீங்க ங்குறதால வேற என்ன எல்லாம் சொல்லப் போறீங்களோ.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

canara bank officer post cost around 6.30 lakh rupees or 5.40 lakh rupees

canara bank officer post cost around 6.30 lakh rupees or 5.40 lakh rupees
Story first published: Thursday, October 25, 2018, 11:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X