தீபாவளி bonusஆக ஆளுக்கு 1 கோடி ரூவா கொடுக்கும் இந்திய நிறுவனம். எங்கிருந்து காசு வருது தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைனில் தற்போது பரவலாக பேசப்படும் தீபாவளி bonus விஷயம் சூரத் நகரத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணா ஏற்றுமதி நிறுவனத்தின் bonus தான். இவர்கள் பணியாளர்களுக்கு கொடுத்த மாருதி சுஸிகி ஆல்டோ, மாருதி சுஸிகி செலிரியோ, ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் வீடுகள் விவரங்கள் தான் நெட்டிசன்களின் பேச்சு.

 

கோடீஸ்வரர் திட்டம்

கோடீஸ்வரர் திட்டம்

இந்த ஹரி கிருஷ்ணா ஏற்றுமதி நிறுவனம் தங்களின் பணியாளர்களுக்கு என்று ஒரு அற்புதமான முதலீட்டுத் திட்டத்தை மேற்கொள்ள இருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த 2016-ல் இருந்து, தன் ஊழியர்களுக்கு குறைந்தது 5 - 6 லட்சம் ரூபாயை தீபாவளி போனஸாகத் தருகிறது. இதை அந்த நிறுவனம் பரிசுப் பொருளாகவோ, வீடாகவோ அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்டாக முதலீடு செய்தும் தருகிறது.

வட்டி கம்மிங்க ஐயா

வட்டி கம்மிங்க ஐயா

ஆனால் ஹரிகிருஷ்ணா ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேறு ஒரு ஒரு ஐடியா பொறி தட்டி இருக்கிறது. இப்போது ஒரு ஊழியர், ஒரு ஆண்டில் 5 லட்சம் ரூபாய் தீபாவளி போனஸாகப் பெறுகிறார். அவர் அதை ஃபிக்ஸட் டெபாசிட்டாக வைத்திருந்தால் ஆண்டுக்கு ஏறத்தாழ 6.7 சதவிகிதம் மட்டுமே வட்டி கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்டு
 

மியூச்சுவல் ஃபண்டு

இதையே கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் 10 ஆண்டு கால அடிப்படையில் ஆண்டுக்கு 7.8 சதவிகிதம் கிடைக்கும். கடன் ஃபண்டுகளுக்கான வருமான விகிதத்தை கீழே Debt Fund category அட்டவனையில் காணலாம். அப்படி ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் கடன் ஃபண்டுகளில் அடுத்த 12 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 13-ம் ஆண்டு தீபாவளிக்கு நம் கையில் 1.01 கோடி கையில் இருக்கும். அதற்கான கணக்கீடுகளை கீழே Debt Fund Investment flow chart அட்டவனையில் பார்க்கலாம்.

Debt Fund Category1 Year3 Year5 Year10 Year
Debt: Overnight 5.85 6.09 6.88 7.01
Debt: Floater 5.72 7.08 7.76 7.31
Debt: Corporate Bond 3.58 6.50 7.66 7.48
Debt: Gilt 0.98 6.19 8.30 7.54
Debt: Medium to Long Duration 1.24 5.65 7.50 7.64
Debt: Liquid 6.68 6.94 7.69 7.69
Debt: Medium Duration 3.69 6.91 8.26 7.75
Debt: Banking and PSU 4.40 6.93 7.82 7.78
Debt: Money Market 6.79 7.20 7.87 7.79
Debt: Low Duration 6.20 7.33 7.88 7.80
Debt: Gilt with 10 year Constant Duration 2.65 7.51 9.14 7.83
Debt: Ultra Short Duration 5.78 6.94 7.79 7.89
Debt: Dynamic Bond 1.88 6.27 7.99 7.96
Debt: FMP 6.98 7.15 7.81 7.97
Debt: Credit Risk 3.85 7.25 8.50 8.00
Debt: Short Duration 4.41 6.76 7.67 8.15
Debt: Long Duration 1.42 6.80 8.69 8.38
Commodities: Gold 7.24 4.42 -0.30 9.82

Debt Fund Investment flow chart
Year Previous amount with interest Additional Bonus Amount Principal amount 7.80% In the end of that yearTotal amount with interest
1 0 0 500,000 39,000 539,000
2 539,000 500,000 1,039,000 81,042 1,120,042
3 1,120,042 500,000 1,620,042 126,363 1,746,405
4 1,746,405 500,000 2,246,405 175,220 2,421,625
5 2,421,625 500,000 2,921,625 227,887 3,149,512
6 3,149,512 500,000 3,649,512 284,662 3,934,174
7 3,934,174 500,000 4,434,174 345,866 4,780,039
8 4,780,039 500,000 5,280,039 411,843 5,691,882
9 5,691,882 500,000 6,191,882 482,967 6,674,849
10 6,674,849 500,000 7,174,849 559,638 7,734,487
11 7,734,487 500,000 8,234,487 642,290 8,876,777
12 8,876,777 500,000 9,376,777 731,389 10,108,166

 இத விட பெஸ்ட்

இத விட பெஸ்ட்

கடன் ஃபண்ட விடுங்க எஜமான், நாம ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு பண்ணலாம். ஈக்விட்டி ஃபண்டுகளில் 10 ஆண்டு கால அடிப்படையில் ஆண்டு வருமானம் 17 சதவிகிதம். ஈக்விட்டி ஃபண்டுகளுக்கான வருமான விகிதத்தை கீழே Equity Fund category படத்தில் காணலாம். அப்படி ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் ஈக்விட்டி ஃபண்டுகளில் அடுத்த 12 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 13-ம் ஆண்டு தீபாவளிக்கு நம் கையில் 1.96 கோடி ரூபாய் கையில் இருக்கும். அதற்கான கணக்கீடுகளை கீழே Equity Fund Investment flow chart அட்டவனையில் பார்க்கலாம்.

Equity Fund Category1 Year3 Year5 Year10 Year
Equity: International 5.30 8.22 4.45 9.06
Equity: Sectoral-Infrastructure -20.39 3.36 14.43 11.39
Equity: Large Cap -2.93 7.11 12.00 15.02
Equity: Sectoral-Banking -10.78 7.90 14.16 15.60
Equity: Thematic-Dividend Yield -9.00 7.51 13.35 16.69
Equity: ELSS -8.04 6.92 15.51 16.77
Equity: Large & MidCap -9.77 7.39 16.51 17.09
Equity: Multi Cap -7.70 6.98 15.39 17.53
Equity: Thematic -7.57 6.19 14.17 17.60
Equity:Thematic-Consumption -3.59 8.79 14.84 18.51
Equity: Value Oriented -9.30 7.50 17.48 19.03
Equity: Small Cap -15.58 7.74 21.91 19.77
Equity: Sectoral-Pharma 1.60 -6.07 11.31 19.91
Equity: Sectoral-Technology 30.23 9.09 13.88 19.99
Equity: Mid Cap -12.19 6.46 21.07 20.66
Equity: Thematic-MNC -2.73 4.73 19.49 22.44
Equity: Thematic-Energy -19.46 -- -- --
Equity: Thematic-PSU -23.19 2.92 9.35 --

Equity Fund Investment flow chart
Year Previous amount with interest Additional Amount Principal amount 17.3% In the end of that year Total amount with interest
1 0 0 500,000 86,500 586,500
2 586,500 500,000 1,086,500 187,965 1,274,465
3 1,274,465 500,000 1,774,465 306,982 2,081,447
4 2,081,447 500,000 2,581,447 446,590 3,028,037
5 3,028,037 500,000 3,528,037 610,350 4,138,388
6 4,138,388 500,000 4,638,388 802,441 5,440,829
7 5,440,829 500,000 5,940,829 1,027,763 6,968,592
8 6,968,592 500,000 7,468,592 1,292,066 8,760,658
9 8,760,658 500,000 9,260,658 1,602,094 10,862,752
10 10,862,752 500,000 11,362,752 1,965,756 13,328,508
11 13,328,508 500,000 13,828,508 2,392,332 16,220,840
12 16,220,840 500,000 16,720,840 2,892,705 19,613,546

 ஆலோசனை

ஆலோசனை

ஆக எது யாருக்கு சரியான முதலீட்களோ, அந்த முதலீடுகளில் தங்கள் போனஸை முதலீடு செய்ய உதவுமாறு ஊழியர்கள் ஒரு விண்ணப்பம் வைத்து இருக்கிறார்கள். ஹரி கிருஷ்ணா ஏற்றுமதி நிறுவனமும் இந்த யோசனையை குறித்து நிதி ஆலோசகர்களிடம் விசாரித்து வருகிறார்களாம். செலவுகளாக தங்கள் ஊழியர்களுக்கு bonus கொடுப்பதை விட 13-ம் ஆண்டு முடிவில் மொத்தமாக ஒரு கோடி போனஸாக வழங்கினால், ஊழியர்கள் வாழ்கைக்கு உதவியாக இருக்குமோ என்றும் ஹரி கிருஷ்ணா நிறுவனத்தினர் யோசித்து வருகிறார்களாம்.

எல்லாருக்குமே bonus

எல்லாருக்குமே bonus

இவர்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 5,500 வைரப் பொறியாளர்கள் மற்றும் வைர வேலை செய்பவர்களில் 4000 பேருக்கு மேல் ஏற்கனவே இந்த மாதிரியான சூப்பர் தீபாவளி bonus பெற்று இருக்கிறார்கள். இப்போது இந்த 1600 பேருக்கும் அதிரடி பரிசுகள் தருவதன் மூலமாக ஹரி கிருஷ்ணா ஏற்றுமதி நிறுவனத்தில் bonus பெறாத ஆட்களே கிடையாது என்று மார்தட்டி சொல்கிறது நிறுவனம்.

மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ்

சமீபத்தில் ஹரி கிருஷ்ணா ஏற்றுமதி நிறுவனத்தில் தங்களின் 25 ஆண்டு கால உழைப்பைக் கொடுத்த ஊழியர்களின் சேவையைப் பாராட்டி மூன்று பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரை வழங்கியது. இந்த ஜனவரி 2018 புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து 1200 பேருக்கு டாட்சன் ரெடி கோ கார்களை பரிசாக வழங்கியது. இதே போல் 2016-ல் பல பணியாளர்களுக்கு கார்கள், வீடுகள் ஃபிக்ஸட் டெபாசிட்கள் என்று சுமார் 51 கோடி ரூபாய்க்கு தீபாவளி bonus வழங்கியது.

இந்த முடிவுகளை மேற்கொண்டால் கோடிகளில் தீபாவளி bonus கொடுக்கும் நிறுவனமாக ஹரி கிருஷ்ணா ஏற்றுமதி நிறுவனம் திகழும். ஏங்க உன்க கம்பெனில எப்புடிங்க வேலைக்கு விண்ணப்பிக்கனும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

a company is offering 1 crore rupee as diwali bonus to their employees

a company is offering 1 crore rupee as diwali bonus to their employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X