ஐபோன் வேணும், amazon கிட்ட திருடுனோம்,கண்டே புடிக்கள நிறைய திருடுனோம், எப்படி திருடுனோம் தெரியுமா?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆமா, நீ என்ன லூசா... amazon என்ன கடையா நடத்துறான், அவன் இ-காமர்ஸ் கம்பெனிங்க. அவன் கிட்ட ஆர்டர் கொடுத்தா பொருள கொண்டு வந்து கொடுப்பான். அவ்ளோ தான். அவன் கிட்ட எப்படி திருட முடியும்-ன்னு அப்பாவியா கேட்டீங்கன்னா.... "மேற்கொண்டு படிங்க ப்ளீஸ்"-ன்னு தான் சொல்ல முடியும்.

 

 வேலையில்லா பட்டதாரி

வேலையில்லா பட்டதாரி

இவங்க நாலு பேர் இவங்களுக்கு காசத் தவிர எதுவுமே கண்ணுக்குத் தெரியல. ஆக வெறி கொண்டு வேலைக்கு சேர்ந்து உழைக்க நெனச்சாங்க. ஆனா இன்ஜினியரிங் படிச்சதாலு எவனும் வேலை தரல. கடுப்பானாங்க. சுவிட்ச தட்டி விட்ட மாதிரி, பல கம்பெனிங்களுக்கு விடாம அப்ளிகேஷன் போட்டாங்க... இப்பவும் எவனும் வேலை தரல.

சொந்தத் தொழில்

சொந்தத் தொழில்

சரி இனி கம்பெனிங்கள நம்பி வேலை தேடுறது முடியாதுன்னு... சொந்த தொழில் தொடங்க பிளான் போட்டாங்க. நல்ல பிளான் ஆனா யார் முதல் பணம் போடுவா...? பேங்குல கடன் கேட்டாய்ங்க. எந்த பேங்கும் தரல. வெறுத்துப் போனாங்க. கடைசியா ஒரு பெரிய கம்பெனில இருந்து ஃபைனல் இண்டர்வியூவுக்கு கால் லெட்டர் வருது.

அப்பன் amazon வழி
 

அப்பன் amazon வழி

பெரிய கம்பெனிங்குரதால ஒரு நல்ல ஃபார்மல் ஷூவோட போவோம்-ன்னு அமெஸான்ல ஆர்டர் பண்ணி இருக்காங்க. ஷீவும் வந்துருச்சு, காசும் டெலிவரி பண்றவங்க கிட்ட கொடுத்தாச்சு. டெலிவரி பண்றவங்களும் பொருள கொடுத்துட்டாங்க. ஆனா அமேஸானே திரும்ப கூப்பிட்டு தம்பிங்களா நீங்க ஆர்டர் பண்ண ஷூவுக்கான காசு வந்துடுச்சு ஆனா பொருள் இன்னும் டெலிவரி ஆகல, ஸாரி, இந்தாங்க பொருள்"-ன்னு வேற ஒரு டெலிவரி காரன் இன்னொரு ஜோடி ஆர்டர் பண்ண அதே ஷூவ வந்து கொடுத்துட்டுப் போனா.

எப்படி

எப்படி

amazon-ல் டெலிவரி வாங்குறப்ப கஸ்டமர் கிட்ட இருந்து ஒரு கையெழுத்து வாங்குவாங்க இல்ல. அந்த கையெழுத்து போடுற டிஜிட்டல் இயந்திரம் சரியா இவங்க கெயெழுத்த பதிவு பண்ணல. அதனால தான்னு நம்ம வேலையிலா பட்டதாரிங்களுக்கு தெரிஞ்சுறுச்சு. அதான் நமக்கு மேற்கொண்டு இன்னொரு புது ஷூவ டெலிவரி பண்ணி இருக்காங்கன்னு பசங்க புடிச்சுட்டாங்க.

 திருட்டு ஸ்டெப் 1

திருட்டு ஸ்டெப் 1

சரி ஆக கையெழுத்து போடுறத்துக்கு ஒரு நல்ல ஸ்டைலஸ் பேனாவைத் தயார் பண்ணாங்க. அந்த காலத்து படத்துல மை பேனால பெட்ரோல்ல எழுதுவாங்க. அது அப்ப பாக்குறத்துக்கு கையெழுத்து போட்ட மாதிரி தான் இருக்கும். ஆனா கையெழுத்து கொஞ்ச நேரத்துல எவாபரேட் ஆகிடும். அது மாதிரி ஒரு ஸ்டைலஸ் பெனாவைத் தயார் பண்ணாங்க. இந்த ஸ்டைலஸ் பேனாவால கையெழுத்து போடுற எந்த போன், டிஜிட்டல் நோட் புக்குலயும் பதியாது, ஆனா கையெழுத்து போட்ட மாதிரி டெலிவரி பாய்ஸுக்குத் தெரியும்.

திருட்டு ஸ்டெப் 2

திருட்டு ஸ்டெப் 2

இண்டர்வியூ ஊத்திக்குச்சு. பசங்க ஷூ வியாபாரம் பண்ணலாமுன்னு, பிராண்டட் அடிடாஸ், ரிபொக், நைக் மாதிரியான பல பிராண்டட் ஷீக்களை ஆர்டர் பண்ணாங்க. இந்த நாலு வேலையில்லா பட்டாதாரிங்களுக்கு வொடாஃபோன்ல வேலைக்கு போற நண்பனா ஒருத்தன் இருந்தா. அவன் கிட்ட pre activated sim-களை வாங்கித் தான் சம்பந்தமே இல்லாத வேற வேற முகவரிக்கு ஒவ்வொரு ஆர்டருங்களா பாத்து போட ஆரம்பிச்சாங்க. அதுக்கு இவங்க பயன்படுத்துனது 556 சிம் கார்டுங்க. 42 செல் போனுங்க. நல்ல ப்ரொஃபெசனல் திருடன் மாதிரி ப்ளான் பண்ணி இருக்காங்க இல்ல.

தனி amazon கணக்கு

தனி amazon கணக்கு

ஒவ்வொரு சிம் கார்ட் எண்ணையும் பயன்படுத்தி தனித் தனி amazon கணக்கு, தனித் தனி டெலிவரி முகவரி. சரி இப்ப ஒவ்வொரு மாடல் ஷீவையும், ஒவ்வொரு amazon கணக்குல இருந்து வேற வேற முகவரிக்கு டெலிவரி பண்ணச் சொல்றாங்க, எல்லாம் டெலிவரியும் ஒரே நாள்ள வராத படிக்கு, ஒரு நாளைக்கு 10 டெலிவரின்னு கணக்கு பண்ணி, ஆர்டர் பண்றாங்க.

திருட்டு ஸ்டெப் 3

திருட்டு ஸ்டெப் 3

ஆர்டர் டெலிவரிக்கு வரும் போது முறைப்படி காசு கொடுத்துட்டு, பொருளையும் வாங்கிப் பாங்க. மறக்காம டிஜிட்டல் நோட் புக்லயோ கையெழுத்து மிஷின்லயோ அவங்க ரெடி பண்ண ஸ்டைலெஸ் பேனாவால கையெழுத்து போடுவாங்க. அந்த கையெழுத்து டிஜிட்டலா டெலிவரி பாய்ஸுக்குத் தெரியுமே தவிர, சிஸ்டத்துல பதிவாகாது. ஆக அமேஸானுக்கு டெலிவரி ஆகாத கஸ்டமர் கணக்குல தான் நம்ம விஐபி பாய்ஸ் போட்ட ஆர்டருங்க நிக்கும். ஆனா பணம் கொடுத்தாச்சுன்னு காட்டும்.

திருட்டு ஸ்டெப் 4

திருட்டு ஸ்டெப் 4

அமேஸானே கூப்பிட்டு "ஸாரி சார், நீங்க கேஷ் கொடுத்துட்டீங்க, ஆனா சாமான் இன்னும் டெலிவரி ஆகல, இந்தாங்க சார் உங்க பொருள்"-ன்னு அவங்கள போன் பண்ணி டெலிவரி பண்ணுவாங்க. சரி எல்லாம் பிராண்டெட் ஷீ ஆனா எவனும் வாங்கமாட்டேங்குறான். பல பேர் இது ஒரிஜினல் பிராண்டெட் இல்லன்னு வாங்க மாட்டேங்குறாங்க. எப்புடியோ பாடுபட்டு கையில இருந்த பெரும்பாலான ஷீக்களை வித்தாச்சு. இனி இந்த மாதிரி ஒரு ரிஸ்க எடுக்கக் கூடாது.

 இப்ப iphone X

இப்ப iphone X

ஷீவ வித்து காசு பாக்குறது கஸ்டமா இருக்கு. அதனால இந்த முறை ஈஸியா விக்குற, ஆப்பிள் ஐபோன் 10-ஐ மட்டும் ஒரு நாளைக்கு ஒரு போன்னு ஆர்டர் பண்ணாங்க. ஐபோன் வர்றத்துக்கு முன்னாடியே யாரு கிட்ட விக்கப் போறாங்களோ அவங்க கிட்ட பேசி, டெலிவரி வாங்குன கையோடு 5,000 ரூபாயில இருந்து 10,000 ரூபா கம்மியா வித்துடுவாங்க. அப்புறம் கஸ்டமர் கேர் போன் பண்ணி கூப்பிட்டு டெலிவரி கொடுக்குறதையும் அதே அமேஸான் பில்லோட வாங்கி சீல் பிரிக்காம அதே 5,000 - 10,000 ரூபா கம்மியா வித்துடுவாங்க.

லாபக் கணக்கு

லாபக் கணக்கு

ஒரு ஐபோன் 10-ஐ 90,000 கொடுத்து வாங்குவாங்க. டெலிவரி கையெழுத்து வேலைப் பாத்து இன்னொரு 90,000 மதிப்புள்ள ஐபோன் 10 வரும். இப்ப 90,000 முதலீட்டுக்கு 1,80,000 ரூபா மதிப்பு சரக்கு கையில் இருக்கு. ஒரு போன 10,000 ரூபாக்கு குறச்சி விக்கிறாங்கன்னா கூட ரெண்டு ஐபோனுக்கு 20,000 தான் போகும். ஆக 1,80,000 - 20,000 = 1,60,000. இப்ப ரெண்டு போனையும் வித்து 1,60,000 வாங்கியாச்சு. போட்ட முதல் 90,000 தான். ஆக 1,60,000 - 90,000 = 70,000 நிகர லாபம். இப்புடி எத்தன போன் வாங்கி இருக்காங்கன்னா தலைப்புல சொன்ன மாதிரி 40 ஆப்பிள் ஐபோன்கள வாங்கி இருக்காங்க. ஆக மொத்த லாபம் 40*70,000 = 28,00,000 ரூபாய்.

 அமேஸான் சந்தேகம்

அமேஸான் சந்தேகம்

சரி அமேஸான் மூலமா பொருள விக்கிறவங்க அமேஸான் கிட்ட புகார் தெரிவிக்கிறாங்க. "சார், நீங்க ஆர்டர் கொடுத்த 80 ஐபோன் 10க்கு, 80 ஐபோன் 10-ஐ டெலிவரிக்கு கொடுத்துட்டோம். ஆனா எங்களுக்கு 40 ஐபோனுக்கான காசு தான் வந்துருக்குன்னு" புகார் சொல்ல, முழித்துக் கொண்டது அமேஸான். சரி எங்க எல்லாம் ஐபோன் 10 வித்து இருக்கோம், என்ன பிரச்னைன்னு பாத்தப்ப தான் அமேஸான் ஒரு விஷயத்தப் கவனிச்சுது.

 கேஷ் ஆன் டெலிவரி

கேஷ் ஆன் டெலிவரி

ஹைதராபாத்துல ஒரு ஏரியாவுல மட்டும் எல்லாம் ஐபோனும் கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர் பண்ணி கேஷ ஒரு நாள் கொடுத்துட்டு, வேற ஒரு நாள் பொருள டெலிவரி எடுத்திருக்காங்க. இப்படி ஐபோன் 10 மட்டும் யார் யாருக்கு எல்லாம் கேஷ ஒரு நாள் வாங்கிட்டு போன (ஐபோன் 10-ஐ) அடுத்த சில நாட்கள்ள டெலிவரி கொடுத்திருக்காங்க-ன்னு செக் பண்ணதுல தான் நம்ம வேலை இல்லா பட்டதாரி பாய்ஸ் மாட்டிக் கிட்டாங்க. இவங்க கேஷ் கொடுத்த நாட்கள்ள டெலிவரிக்கு ஐபோன் போனுச்சான்னு டிஸ்பேச் லிஸ்டையும் செக் பண்ணிட்டாங்க. அதுல பொருள் எல்லாம் போய் இருக்கு. டெலிவரி பாய்ஸ் டெலிவரியும் பண்ணி இருக்காங்க. ஆனா கஸ்டமருக்கு பொருள் கொடுத்தாச்சுன்னு கையெழுத்து மட்டும் இல்ல. அவங்க கிட்ட ஏன் கையெழுத்து வாங்கலன்னு டெலிவரி பாய்ஸ்கிட்ட கேட்ட போது, அவங்க வாங்குனதா சொல்லி இருக்காங்க.

போலீஸ் புகார்

போலீஸ் புகார்

சரி இதுல வேற ஏதோ பெருசா இருக்குன்னு சந்தேகப்பட்ட அமேஸான், ஹைதராபாத் சைபர் போலீஸ் கிட்ட புகார் தெரிவிக்க, டெலிவரி பாய்ஸ் சில சிசிடிவி இருக்குற ஏரியாக்களுக்கு ஐபோன் 10-ஐ டெலிவரி பண்ணதா சொல்ல, அந்த இடங்கள்ள பதிவான சிசிடிவி பதிவுகள் மூலமா வேலையில்லா பட்டதாரி பாய்ஸ் கிட்ட டெலிவரி பாய்ஸ் கையெழுத்து வாங்குனது உறுதி செய்றாங்க. ஆக கையெழுத்து ஏன் சரியா சிஸ்டம்ல பதிவாகலன்னு கண்டுபிடிச்சிட்டு ஸ்டைலஸ் பேனா வித்தைகளையும் கண்டு பிடுச்சிட்டாங்க அமேஸான் அதிகாரிங்க.

சிக்கிய விஐபி பாய்ஸ்

சிக்கிய விஐபி பாய்ஸ்

இது எல்லாமே தெரிய வந்த பின் முழு விவரத்தையும் சைபர் போலீஸிடம் அமேஸான் விவரித்தது. ஒரு வழியாக தினேஷ், ப்ரவீன் ரெட்டி, பிரதீப் ரெட்டி தான் இந்த திட்டத்தின் தலைவர்கள் என்பதும், பானு ரமேஷ் தான் வொடாஃபோன் நிறுவன சிம் கார்டுகளை வாங்கிக் கொடுத்த வொடாஃபோன் ஊழியர் என்பதும் தெரிய வருகிறது. அதோடு பிபின் என்கிற வங்காள இளைஞரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால் பிபின் இதுவரை காவலர்களிடம் பிடிபடவில்லை.

மீட்பு

மீட்பு

இவர்களிடம் இருந்து விலை உயர்ந்த பிராண்டெட் ஷீக்கள், லேப்டாப்கள், ஆப்பிள் ஐபோன்கள், ஆடைகள் என்று 16 லட்சம் மதிப்புள்ள 300 பொருட்களை அமேஸானை ஏமாற்றி டெலிவரி பெற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது. விஐபி பாய்ஸ்களை பிடித்த போது சுமார் 10 லட்சம் ரொக்கமும், 500க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளும் 35 செல்போன்களும் பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

amazon offer buy one apple iphone 10 and get one apple iphone 10 free

amazon offer buy one apple iphone 10 and get one apple iphone 10 free
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X