ஆர்பிஐ சட்ட பிரிவு 7 என்றால் என்ன? இன்று நிறையக் கேட்ட செய்திகள் வரும்.. ப சிதம்பரம் அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரன்ஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப சிதம்பரம் தனக்குக் கிடைத்த தகவல்கள் பிடி ஆர்பிஐ சட்டப்பிரிவு 7 அமலுக்கு வந்தால் புதன்கிழமை நிறையக் கெட்ட செய்திகள் வரும் என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் இந்த அரசு நம்பிக்கை இழந்து வருகிறது என்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் சிக்கல்களை மறைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ப சிதம்பரம் டிவிட்

ப சிதம்பரம் இன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் ‘தகவல்கள் கிடைத்ததன் படி மத்திய அரசு ஆர்பிஐ சட்டப்பிரிவு 7-ஐ அமலுக்குக் கொண்டு வருவது மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய மாற்றங்கள் ஆர்பிஐ-ல் நடந்தால், இன்று நிறையக் கேட்ட செய்திகள் வரும் என்று தனக்குப் பயம் எழுந்துள்ளது. மேலும் 1991-ம் ஆண்டு நடைபெற்ற பொருளாதாரத் தாராளமையமாக்கலின் போதும், 1997-ம் ஆண்டு ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடியின் போதும், ,2008-ம் ஆண்டு நடைபெற்ற போதும் இந்தப் பிரிவினை யூபிஏ அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டு வந்ததில்லை. இந்தச் சட்டப்பிரிவை தற்போது கொண்டு வருவதன் அவசியம் என்ன? இதனைப் பார்க்கும் போது அரசு பொருளாதாரதிற்கு ஏற்பட்ட ஏதோ ஒரு சிக்கலை மறைக்க முயல்கிறது ' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வைரல் ஆச்சார்யா

வைரல் ஆச்சார்யா

ஆர்பிஐ துணை கவர்னர் வைரல் ஆச்சார்யா மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் சுயாட்சியில் தலையிடுவது சரியல்ல என்று பொது மேடையில் குற்றம் சாட்டியதை அடுத்து நடைபெற்ற கூட்டம் என்பதால் முக்கியமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

சரி, ஆர்பிஐ சட்டப் பிரிவு 7 என்றால் என்ன?
 

சரி, ஆர்பிஐ சட்டப் பிரிவு 7 என்றால் என்ன?

ஆர்பிஐ சட்டப் பிரிவு 7 அமலுக்கு வந்தால் மத்திய அரசு பொது நலன் கருதி மத்திய வங்கிக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கும். இப்படி வழிகாட்டுதல்களை வழங்கும் போது அரசு ஆர்பிஐ உள்விவகாரங்களில் தலையிடவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. சுயாட்சி அதிகாரங்கள் கொண்டு சிபிஐ, ஆர்பிஐ, தேர்தல் ஆணையம் போன்றவற்றின் விவகாரங்களில் மத்திய அரசு தலையிட்டு அரசியல் ஆதாம் தேடும் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

 உர்ஜித் படேல்

உர்ஜித் படேல்

இதன் இடையில் உர்ஜித் படேல் விரவில் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. எனவே அது குறித்து விளக்கமாக அறிந்துகொள்ள இங்குக் கிளிக் செய்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

If govt has invoked Section 7 of RBI Act, there will be more bad news today: P Chidambaram

If govt has invoked Section 7 of RBI Act, there will be more bad news today: P Chidambaram
Story first published: Wednesday, October 31, 2018, 14:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X