முத்ரா கடன் திட்டத்தில் இருந்த வாரா கடன் குறைந்தது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் தொடங்க அளிக்கப்படும் முத்ரா கடன் திட்டங்களில் இருந்து வந்த வாரா கடன் அளவு 2017 நிதி ஆண்டு 6.15 சதவீதமாக இருந்தது, இதுவே 2018 நிதி ஆண்டில் 4.83 சதவீதமாகச் சரிந்துள்ளது என்று முத்ரா அமைப்பு தெரிவித்துள்ளது.

 

2018 மார்ச் 31-ம் தேதி கணக்கின் படி 2.02 லட்சம் கோடி ரூபாய் முத்ரா திட்டம் கீழ் கடன் அளிக்கப்பட்டு இருந்ததாகவும் அதில் 9,770 கோடி ரூபாய் வாரா கடன் என்றும் தெரிவித்துள்ளனர். இதுவே 2017 மார்ச் 30-ம் தேதி வரையிலான கணக்கின் படி 1.38 லட்சம் கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டு அதில் 8,502 கோடி ரூபாய் வாரா கடனாக இருந்தது.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா

2015 ஏப்ரல் மாதம் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 2018 மார்ச் மாதம் வரையில் 5.27 லட்சம் கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கீழ் கூடுதல் கடன் வழங்க நிதி அமைச்சக பிளிப்கார்ட், ஸ்விகி, பதஞ்சலி மற்றும் அமுல் நிறுவனங்களுடனும் கூட்டணி அமைத்துள்ளது.

முத்ரா திட்ட பயனாளிகள்

முத்ரா திட்ட பயனாளிகள்

நிதி அமைச்சகத்திடம் இருந்து கிடைத்த தகவலின் படி முத்ரா திட்ட பயனாளிகளில் 74 சதவீதத்தினர் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரைச் சார்ந்தவர்கள் 36 சதவீதத்தினர் என்று தெரியவந்துள்ளது.

 சிறு தொழில் கடன்
 

சிறு தொழில் கடன்

வங்கி நிறுவனங்களுக்குப் பிற கடன் திட்டங்களுடன் ஒப்பிடும் போது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அளித்த கடன் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

அதே நேரம் சிறு, குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன் மற்றும் கிசான் கிரெடிட் கார்டு கடன் தள்ளுபடி போன்றவை நிதி சிக்கலை ஏற்படுத்தும் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னரான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே சுப்பிரமணியன் சுவாமி இவரைக் கடுமையாக விமர்சித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிசான் கிரெடிட் கார்டு

கிசான் கிரெடிட் கார்டு

2016-2017ம் நிதி ஆண்டுக் கிசான் கிரெடிட் கார்டு கீழ் 4.35 லட்சம் பெற்று இருந்த நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் அது 4.33 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. ஆனால் ஆர்பிஐ வசம் கிசான் கிரெடிட் கார்டு கீழ் உள்ள வாரா கடன் விவரங்கள் இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: வாரா கடன் npas
English summary

Mudra loan NPAs ease to 4.83 per cent from 6.15% a year ago

Mudra loan NPAs ease to 4.83 per cent from 6.15% a year ago
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X