உஷார்.. ஸ்மார்ட்போன் விலைகள் உயரப்போகின்றன.. காரணம் இது தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இதற்கு மிக முக்கியக் கரணம் சீன நிறுவனங்கள் தான், குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இப்போது அதே சியோமி மற்றும் ரியல்மீ நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் விலையை உயர்த்தியுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக அவர்கள் கூறுவது ரூபாயின் வீழ்ச்சியைத்தான்.

 

சாம்சங், ஒப்போ மற்றும் விவோ

சாம்சங், ஒப்போ மற்றும் விவோ

வல்லுநர்கள் எதிர்பார்ப்பின் படி சாம்சங், ஒப்போ மற்றும் விவோ நிறுவங்களும் இதையே காரணம் காட்டி விலையை உயர்த்தும். இந்த ஆண்டில் மட்டும் 15% ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதால் ஸ்மார்ட்போன் விலை 5-8% வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி

தீபாவளி

கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்சின் இணை இயக்குநர் தருண் பதக் கூறுகையில் அணைத்து நிறுவனங்களும் இதைத் தான் செய்யும். மேலும் அவர் 60-70% வாடிக்கையாளர்கள் தீபாவளிக்கே தங்களுக்குத் தேவையான புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கிவிட்டனர்.

சியோமி
 

சியோமி

அனைத்து நிறுவனங்களும் யார் இந்த விலையேற்றத்தைத் துவங்குவார்கள் எனக் காத்துக்கொண்டு இருந்தனர். அதைச் சியோமி நிறுவனம் ஆரம்பித்து வைத்துவிட்டது என IDC இந்தியாவைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறினார். மேலும் இது வெறும் ஆரம்பம் தான், ரூபாய் மதிப்பு சரிய சரிய ஸ்மார்ட்போன் விலை இன்னும் உயரும்.

அக்டோபரில் பல ஆஃபர்கள் மற்றும் விழாக்காலச் சலுகையினால் விற்பனை உச்சத்தைத் தொட்டுவிட்டது. பல சரக்குகள் ஏற்கனவே விற்றாகிவிட்டன மேலும் புதிய சரக்கு விலை ரூபாய் மதிப்புச் சரிவு முக்கியக் காரணி ஆக இருக்கும். பிறகு ஆஃப்லைன் சரக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக இருக்கும் எனத் தருண் பதக் குறிப்பிட்டார்.

விலை உயர்வு

விலை உயர்வு

ஒரு புதிய மாடல் ஸ்மார்ட்போனே அறிமுகம் செய்யும் போது சந்தையில் உள்ள நிலவரத்தை பொறுத்து குறைந்த விலைக்கு நிறுவனங்கள் களமிறக்கும். அதன் பின் ஓரிரு வாரங்களில் விலையை உயர்த்திவிடும். உதாரணமாகச் சியோமி நிறுவனம் ரெட்மி 6 மற்றும் 6A-வை ஒரு விலையில் அறிமுகம் செய்து சில நாட்களுக்குப் பிறகு இரண்டு போன்களின் விலையையும் 600 ரூபாய் உயர்த்தியது.

ரூபாய் மதிப்புச் சரிவு

ரூபாய் மதிப்புச் சரிவு

ஒரு அறிகையில் சியோமி நிறுவனம் ரூபாய் மதிப்புச் சரிவினால் தான் ஸ்மார்ட்போன் விலையை உயர்த்தவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. முக்கியக் காரணமாக உற்பத்தி விலை அதிகமாகிறது.

ஸ்மார்ட்போன் சந்தை

ஸ்மார்ட்போன் சந்தை

ரியல்மீ இந்தியாவைச் சேர்ந்த மாதவ் கூறுகையில்,"நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்கிறோம் போன்களைக் குறைந்த விலையில் கொடுக்க ஆனால் தற்போதுள்ள சந்தை நிலைமைக்கு அது சாத்தியம் இல்லாமல் போகிறது. வேறு வழி இன்றித் தான் நாங்கள் விலையை உயர்த்துகிறோம் என்று கூறியுள்ளார்.

நவம்பரில் ஸ்மார்ட்போன் சந்தை வீழ்ச்சி அடையும் அதே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கும் போது இந்த வீழ்ச்சியில் இருந்து மீழும் என்று நம்புகிறார்கள் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Smartphone prices likely to go up,here's why

Smartphone prices likely to go up,here's why
Story first published: Tuesday, November 13, 2018, 17:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X